Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 16th August 19 Content

"லத்தீன் அமெரிக்கன் மியாமி"

  • 1671 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ஆங்கில கொள்ளையர் ஹென்றி மோர்கனால் பனாமா நகரம் அழிக்கப்பட்டது.
  • பின் உள்ளூர் அதிகாரிகளால் தென்மேற்கில் 10 கி.மீ தொலைவில் மீண்டும் கட்டப்பட்டது, இப்போது அது ’பழைய நகரம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • இது ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா தளமாக உள்ளது.
  • இப்போது, ​​பனாமா நகரம் "லத்தீன் அமெரிக்கன் மியாமி" என்று அழைக்கப்படும் ஒரு நிதி மையமாக திகழ்கிறது.

‘கிரேஸ்-1’

  • ஜிப்ரால்டரில் சிறை பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய சிப்பந்திகள் விடுவிக்கப்பட்டனர்.
  • ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ்-1’, கடந்த மாதம் 4-ந் தேதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியமான ஜிப்ரால்டர் கடல் பகுதியில் சென்றது.
  • அப்போது, ஜிப்ரால்டர் போலீசார், அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் ஆகியோர் அந்த கப்பலை தடுத்து நிறுத்தினர்.

‘குரோசா’

  • ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹோன்சு தீவில் ஹிரோஷிமா நகருக்கு அருகே உள்ள குரோ நகரில் நேற்று சக்திவாய்ந்த புயல் தாக்கியது

கல்பனா சாவ்லா விருது

  • தமிழக மீன்வளத்துறை பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருதை, சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
  • கொள்ளையர்களை விரட்டி அடித்த தம்பதியும் விருது பெற்றனர்.

நீராவி என்ஜின் ரெயில் (ஈ.ஐ.ஆர்-21)

  • சென்னையில் சுதந்திர தின விழாவையொட்டி 164 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பழமையான நீராவி என்ஜின் ரெயில் (ஈ.ஐ.ஆர்-21) சென்னை எழும்பூர்-கோடம்பாக்கம் இடையே இயக்கப்பட்டது.
  • இதனை தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
  • இந்த நீராவி என்ஜின் ரெயில் கடந்த 1855-ம் ஆண்டு தனது சேவையை தொடங்கி 1909-ம் ஆண்டு சேவையை நிறுத்திக்கொண்டது.
Share with Friends