Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 16th December 19 Content

விஜய் திவாஸ்

  • காரணம் : கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நிகழ்ந்த போரில் இந்தியா வெற்றி பெற்ற தினமாகும்.
  • இந்த வெற்றியின் மூலம் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசம் எனும் தனி நாடாக உருவானது.
  • இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் முப்படைகளின் தளபதிகளுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அஞ்சலி செலுத்துவார்.
  • இந்த போர் வங்கதேச விடுதலைப் போர் என்றழைக்கப்படுகிறது.

100 நாள் வேலை திட்டம்

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) அல்லது என்பது இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும்.
  • இச்சட்டம் 25.05.2005 முதல் அமலாக்கப்பட்டது.
  • முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
  • தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர்.
  • 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தியதில் தற்போது மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.

கோல்டன் ராக்கெட் விருது

  • இளவேனில் 2018 ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற இளையோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் போட்டியிட்டு தங்கப் பதக்கம் பெற்றார்.
  • 2019 உலகப் பல்கலைக்கழகப் போட்டிகளில் விளையாடி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
  • பின்னர் 2019 இல் இளையோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார்.
  • 2019 ஆகஸ்டு 28 இல் இரியோ டி செனீரோவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் பெற்றார்.
  • இவர் தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமி பேரா

  • ஆசிய பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்க நாடாளுமன்ற துணைக்குழுவின் தலைவராக அமி பேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அவா், கலிஃபோா்னியா மாகாணத்திலிருந்து 4 முறை எம்.பி.யாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
  • ஏற்கெனவே, கொரியா, இந்தியா ஆகிய நாடுகளுக்கும், இந்திய அமெரிக்கா்களுக்குமான எம்.பி.க்கள் குழுக்களின் துணைத் தலைவராக அமி பேரா பொறுப்பு வகித்துள்ளாா்.

வார்டன் - கியூஎஸ் ஸ்டார்ஸ் - 2019

  • வார்டன் - கியூஎஸ் ஸ்டார்ஸ் ரீஇமாஜின் கல்வி விருதை ராகுல் ஆதிகாரி என்பவர் வென்றுள்ளார்.
  • "இன்டர்நேஷனல் சேஞ்ச்மேக்கர் ஒலிம்பியாட்" (International Changemaker Olympiad - ICO) என்ற இவருடைய திட்டத்திற்காக இந்த விருதை இவர் பெற்றுள்ளார்.
  • ராகுலின் திட்டமானது "நீடித்த வளர்ச்சிக்கான பிரிவில் வெற்றி பெற்றது.
  • இந்த விருதானது கல்வியின் ஆஸ்கார்" என்று பிரபலமாக அறியப்படுகின்றது.
  • இந்த விருது வழங்கும் விழாவானது இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றது.
  • உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் பயிலும் இளம் மாணவர்களுக்கு ICO ஆனது வழங்குகின்றது.

EUன் 2050 - காலநிலைசார் நடுநிலை இலக்குகள்

  • ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union - EU) 2050 ஆம் ஆண்டிற்கான காலநிலைசார் நடுநிலை ஒப்பந்தத்திலிருந்து போலந்து வெளியேறியது.
  • அணுசக்தியை ஆதரிப்பதற்கும் பொருளாதார மாற்றத்திற்கும் கூடுதல் நிதி தேவை என்று தப கோரியுள்ளது.
  • காலநிலை மாற்றத்திற்கான பங்களிப்புகளில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக 28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றிய முகாமானது மூன்றாவது பெரிய பொருளாதார முகாமாக இருப்பதால் இந்தத் திட்டம் முக்கியமான ஒன்றாகக் கருதப் படுகின்றது.
  • காலநிலை மாற்றம் தொடர்பான 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின் படி இது ஒரு முக்கியமான உறுதிப்பாடாகும்.
  • இது 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர சுழியப் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கான 100 பில்லியன் யூரோ திட்டமாகும். இது ஐரோப்பியப் பசுமை ஒப்பந்தம் என்று அழைக்கப் படுகின்றது.

பேட்மிண்டன் போட்டி

  • வங்கதேச இண்டர்நேஷனல் சேலஞ்ச் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் “லக்ஷய சென்” சாம்பியன் பட்டம் வென்றார்.
  • வங்கதேச தலைநகர் டாக்காவில் போட்டி நடைபெற்றது.
  • சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 6-ஆவது இடத்தில் உள்ளார்.
  • 2019 உலக சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
Share with Friends