மோடி - முதல் வெளிநாட்டு பயணம்
- பூடானின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா பெருமை கொள்கிறது. 130 கோடி இந்தியர்களின் இதயத்தில் சிறப்பிடத்தை பூடான் பெற்றுள்ளது.
- அண்டை நாடுகளின் உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கடந்த 2014-இல் முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி பூடானுக்குத் தான் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டது நினைவுகூறத்தக்கது.
தினத்தந்தி
- முதல் இடத்தை ‘டைனிக் ஜக்ரான்’ என்ற இந்தி பத்திரிகையும், 2-வது இடத்தை ‘இந்துஸ்தான்’ என்ற இந்தி பத்திரிகையும், 3-வது இடத்தை ‘டைனிக் பாஸ்கர்’ என்ற இந்தி பத்திரிகையும், 4-வது இடத்தை ‘அமர் உஜாலா’ என்ற இந்தி பத்திரிகையும் பெற்று உள்ளன.
- முதல் 4 இடங்களையும் இந்தி பத்திரிகைகளே பிடித்து உள்ளன. 5-வது இடத்தை ‘தினத்தந்தி’ பத்திரிகை பெற்று உள்ளது. ‘தினத்தந்தி’ பத்திரிகையை ஒரு நாளில் 2 கோடியே 49 லட்சத்து 16 ஆயிரம் பேர் படிக்கிறார்கள் என்ற பெருமைமிகு தகவலை இந்திய பத்திரிகை படிப்போர் ஆய்வு நிறுவனம் அறிவித்து உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
- 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது.
போபோஸ் துணைக்கோள்
- 1877 – செவ்வாய்க் கோளின் ஃபோபோஸ் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
கீழடி - அகழாய்வு
- கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை பானை , பானை மூடிகள், உறைகிணறு, செங்கல் கட்டுமானம், உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- உணவு பாத்திரங்களில் இரண்டு வித அளவு கொண்ட பாத்திரங்கள் கண்டறியப்பட்ட நிலையில் பண்டைய காலத்தில் குடும்பமாக வசித்திருக்க வாய்ப்புண்டு எனவே தான் வெவ்வேறு அளவு கொண்ட உணவு பாத்திரங்கள்கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.