Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 19th August 19 Content

ஏ.என்-12 பி.எல்-534 விமானம்

  • இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-12 பி.எல்-534 விமானம் இமாசலபிரதேச மாநிலத்தில் இமயமலையின் ரோஹ்டங் பாஸ் என்ற சிகர பகுதியில் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி காணாமல்போனது.
  • இந்த விமானத்தில் பயணம் செய்த வீரர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்றுவந்தது. கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி இதற்காகவே தாகா பனிச்சிகரத்தில் டோக்ரா சாரணர் குழு ஏற்படுத்தப்பட்டது.

ஒற்றுமைக்கான சிலை

  • சர்தார் வல்லபாய் பட்டேல். அவரது நினைவாக, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், சர்தார் சரோவர் அணை அருகே 182 மீட்டர் உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  • உலகின் உயரமான சிலை என்ற பெருமையை பட்டேல் சிலை பெறுகிறது.
  • இது ஒற்றுமைக்கான சிலை என அழைக்கப்படுகிறது. இந்த சிலை அருகே உலகத்தரம் வாய்ந்த உயிரியல் பூங்கா ஒன்றை அமைக்க குஜராத் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

"முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை"

  • முதலமைச்சரின் குறை தீர்க்கும் திட்டம் விரைவில் 234 தொகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

சந்திரயான்-2 விண்கலம்

  • நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூன் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது.
  • புவி சுற்றுவட்டப்பாதையில் வந்து கொண்டிருந்த விண்கலம் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 6-ந்தேதி வரை 5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப்பட்டது.
  • விண்கலம் தொடர்ந்து புவி சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த நிலையில், இறுதிகட்ட நிலை உயர்வையும், நிலவை நோக்கிய நகர்வையும் விஞ்ஞானிகள் கடந்த புதன்கிழமை அதிகாலை 2.21 மணி அளவில் 20.05 நிமிடங்கள் இயக்கப்பட்டு புவியின் சுற்றுவட்டப் பாதையில் இறுதிகட்ட நிலை உயர்வுக்கு நகர்த்தப்பட்டது.
  • தொடர்ந்து வெற்றிகரமாக நிலவை நோக்கி பயணிக்கும் விண்கலம் நாளை மறுநாள் (20-ந்தேதி) நிலவை சென்றடையும்.
  • அப்போது விண்கலத்தில் உள்ள திரவ என்ஜின் பற்ற வைக்கப்பட்டு நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைக்கப்படும்.
  • அதன் மூலம் நிலவின் பரப்பில் இருந்து குறைந்த பட்சம் 118 கிலோ மீட்டர் தொலைவையும், அதிகபட்சம் 18,078 கிலோ மீட்டர் தொலைவையும் கொண்ட நீள் வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும்.

தேசிய அணு சக்தி ஆராய்ச்சி மையம்

  • அமெரிக்காவின் எரிசக்தி துறை, அணு சக்தி துறையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க தேசிய அணு சக்தி ஆராய்ச்சி மையம் ஒன்றை புதிதாக நிறுவியுள்ளது.
  • இது குறித்து எரிசக்தி துறை செயலர் ரிக் பெரி பேசுகையில், "எங்கள் தேசிய ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக்கழக கூட்டமைப்புகளுடன் தொழில்துறையை ஒன்றிணைப்பதன் மூலம், எங்களது அணு ஆற்றல் சுதந்திரத்தை மேம்படுத்துவதோடு, மேம்பட்ட அணுசக்தி கண்டுபிடிப்புகளில் அமெரிக்காவை உலக அளவில் தலைசிறந்த நாடாக நிலைநிறுத்த முடியும்," என தெரிவித்தார்.

பி.வி.சிந்து

  • உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் பி.வி.சிந்து, 2017 மற்றும் 2018-ம் ஆண்டு உலக பேட்மிண்டனில் இறுதி சுற்றில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றார்.
  • மேலும் இரண்டு வெண்கலப்பதக்கமும் வென்று இருக்கிறார்.
  • ஆனால் அவருக்கு தங்கப்பதக்கம் மட்டும் எட்டாக்கனியாக இருக்கிறது.
  • அவருக்கு மட்டுமல்ல, 42 ஆண்டு கால உலக பேட்மிண்டன் வரலாற்றில் எந்த இந்தியரும் தங்கப்பதக்கத்தை மகசூல் செய்ததில்லை.

10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள்

  • 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்னை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் 2010 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் 371 போட்டிகளில் 20 ஆயிரத்து 18 ரன் குவித்து உள்ளார்.

கேல் ரத்னா விருது

  • விளையாட்டுத் துறையில் சிறந்த சாதனைகளை படைக்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு மத்திய அரசால் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன.
  • அவ்வகையில், இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேரி கோம், பாய்சங் பூட்டியா உள்ளிட்ட 12 பேர் கொண்ட தேர்வுக்குழு, பூனியாவின் பெயரை இறுதி செய்து விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உலக புகைப்பட தின விழா

  • 1839 ஆக., 19ல் உலகில் முதன் முதலாக புகைப்படம் அங்கீகரிக்கப்பட்டது.
  • இதையடுத்து இந்தாண்டு புகைப்படத்துக்கு 175வது ஆண்டு. . 1839ம் ஆண்டு ஜன., 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ல் பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது.
  • இதை எடுத்துரைக்கும் வகையில், ஆக., 19 உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

உலக மனிதாபிமான தினம்

  • மனிதாபிமான சேவையில் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், உலகெங்கிலும் உள்ள நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவைத் திரட்டுவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று உலக மனிதாபிமான நாள் (WHD) அனுசரிக்கப்படுகிறது.

CICET

  • குஜராத்தில் முதல் மத்திய வேதியியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிஐசிஇடி) அமைக்கப்படும் என்று மத்திய இரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவித்துள்ளார்.

சி.என்.ஜி எரிபொருள் நிலையம்

  • அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், திப்ருகரில் மாநிலத்தின் முதல் சி.என்.ஜி எரிபொருள் நிலையத்தை திறந்து வைத்தார்.
  • மாநிலத்தை காற்று மாசுபாட்டிலிருந்து விடுவிப்பதற்கும், சுத்தமான மற்றும் பசுமையான எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் அனைத்து மாவட்டங்களிலும் சி.என்.ஜி எரிபொருள் நிலையம் அமைப்பதற்கான ஒரு வரைபடத்தை அரசாங்கம் தயாரித்து வருகிறது தெரிவித்தார்.

பங்கர் அருங்காட்சியகம்

  • ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் “பங்கர்” அருங்காட்சியகத்தை மும்பையில் உள்ள ராஜ்பவனில் திறந்து வைத்தார்.
  • பங்கர் அருங்காட்சியகம் சுமார் 15,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட அருங்காட்சியமாகும்.
  • இந்த ஆண்டு இறுதியில் ஆன்லைன் முன்பதிவு மூலம் இந்த அருங்காட்சியகம் பொது மக்களுக்காக திறக்கப்பட உள்ளது.

ஓக்ஜோகுல் பனிப்பாறை

  • ஐஸ்லாந்தில், பனிப்பாறை ஓக்ஜோகுல்லின் இழப்பை நினைவுகூரும் வகையில் மக்கள் அனைவரும் ஓன்றாக கூடவுள்ளார்கள் , இந்த பனிப்பாறை 2014 ஆம் ஆண்டில் தனது 700 வது வயதில் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • பனிப்பாறை இறந்ததாக ஐஸ்லாந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

புதிய மீன் இனங்கள்

  • அருணாச்சல பிரதேசத்தில், ராஜீவ் காந்தி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஐந்து புதிய மீன் இனங்களை கண்டுபிடித்துள்ளனர்.
  • “மிஸ்டஸ் பிரபினி, எக்ஸோஸ்டோமா கோட்டெலாட்டி, க்ரீட்டூசிலோக்லானிஸ் தவாங்கென்சிஸ், கர்ரா ரங்கனென்சிஸ் மற்றும் பைசோசிஸ்டுரா ஹர்கிஷோரி” இவைகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து மீன் இனங்களின் அறிவியல் பெயர்கள் ஆகும்.

என்.சி.டி.இ

  • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ புதுடில்லியில் “ஆசிரியர் கல்வியின் பயணம்: உள்ளூரிலிருந்து உலகத்தை நோக்கி என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
  • 1995 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) அதன் வெள்ளி விழாவை கொண்டாடுவதற்காக இரண்டு நாள் நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறது.

இந்தியா-நேபாளம்

  • இந்தியா-நேபாள கூட்டு ஆணையத்தின் 5 வது கூட்டம் ஆகஸ்ட் 21- 22 தேதிகளில் காத்மாண்டுவில் நடைபெற உள்ளது.
  • இந்தியா-நேபாள கூட்டு ஆணையம் ஜூன் 1987 இல் நிறுவப்பட்டது.அதன் கூட்டங்கள் நேபாளத்திலும் இந்தியாவிலும் மாறி மாறி நடத்தப்பட்டு வருகின்றன. ஆணையத்தின் கடைசி கூட்டம் அக்டோபர் 2016 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.

பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணி

  • தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோவை பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இதை டாக்காவில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் அறிவித்தார்.

பிரதான் மந்திரி லகு வியாபரி மான்-தன் திட்டம்

  • பிரதான் மந்திரி லாகு வியாபாரி மான்-தன் திட்டம் 2019-2020 ஆம் ஆண்டில் 25 லட்சம் சந்தாதாரர்களையும் 2023-2024 க்குள் 2 கோடி சந்தாதாரர்களையும் பதிவுசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • தொடங்கப்படும் ஆன்லைன் போர்ட்டலைத் தவிர, பிற திட்டங்களுக்கு ஏற்கனவே இருக்கும் பொதுவான சேவை மையங்கள் மூலம் மக்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆசிய டென்னிஸ் அணி சாம்பியன்ஷிப்

  • கஜகஸ்தானில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்ட ஆசிய டென்னிஸ் அணி சாம்பியன்ஷிப்பில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் சீன தைபியை தோற்கடித்து பட்டத்தை வென்றது.

உலகத் திறன்களின் சர்வதேச போட்டி

  • ரஷ்யாவின் கசானில் நடைபெறும் உலக திறன் சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் 48 போட்டியாளர்கள் கொண்ட குழு பங்கேற்கவுள்ளது.
  • இந்த மாதம் 22 முதல் 27 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மொபைல் ரோபாட்டிக்ஸ், முன்மாதிரி மாடலிங், சிகையலங்கார நிபுணர், பேக்கிங், வெல்டிங் மற்றும் கார் பெயிண்டிங் உள்ளிட்ட 44 திறன்களில் இந்த குழு பங்கேற்கிறது.

ஹிமா தாஸ்

  • இந்தியாவின் சிறந்த ஸ்ப்ரிண்டர்களான ஹிமா தாஸ் மற்றும் முகமது அனஸ் செக் குடியரசில் நடந்த தடகள மிடின்க் ரைட்டர் போட்டியில் 300 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கபதக்கத்தை வென்றனர்.
  • பெண்கள் பிரிவில் ஹிமா தாசும் ஆண்கள் பிரிவில் முகமது அனஸும் தலா ஒரு பதக்கத்தை வென்றனர். கடந்த மாதம் முதல் நடந்த ஐரோப்பிய பந்தயங்களில் ஹிமாவின் ஆறாவது தங்கம் இது வாகும்.
Share with Friends