Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 19th October 19 Content

காவல் ஆணையத்தின் தலைவர்

  • காவல் ஆணையத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் ஷீலா ப்ரியா என்பது, குறிப்பிடத்தக்கது.

மகப்பேறு விடுப்பு 26 வாரம்

  • மத்திய அரசின் மகப்பேறு காலப் பலன்கள் சட்டத்தின் படி, அரசு துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு கால விடுமுறை ஊதியத்துடன் வழங்கப்படுகிறது.
  • 1961 ஆம் ஆண்டின் அசல் சட்டம் பெண்களுக்கு 12 வாரங்கள் ஊதிய விடுப்பு அளித்தது , 2017 ஆம் ஆண்டு திருத்தம் அதை 26 வாரங்களுக்கு நீட்டித்தது.
  • மகப்பேறு காலப் பலன்கள் சட்டத்தை, தனியார் கல்வி துறை பணியாளர்களுக்கு நீட்டிக்கும் முதல் மாநிலம் கேரளம் ஆகும்.

எஸ்.ஜி

  • குஜராத் கேடரின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அனுப் குமார் சிங் தேசிய பாதுகாப்புக் காவலர் (என்.எஸ்.ஜி) இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 'கருப்பு பூனைகள் கமாண்டோ' படையின் டி.ஜி.யாக 1985 தொகுதி ஐ.பி.எஸ் அதிகாரியாக சிங் நியமிக்கப்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ஏ.சி.சி) ஒப்புதல் அளித்தது.
  • இவரின் பதவிக்கு காலம் 2020 செப் 30 வரை ஆகும்.
  • என்.எஸ்.ஜி என்ற அமைப்பானது 1984 ல் பயங்கரவாதிகள் மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்களை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • முக்கியமாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் தொடர்பான விவரங்களை இந்தியக் கடற்படையும், பிலிப்பின்ஸ் கடலோரக் காவல் படையும் பகிா்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி, பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் அவரது சிலையை ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நண்பர்கள்’

  • மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள ஆந்த் ராணுவ நிலையத்தில் ‘ஏகுவெரின்’ என்ற கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவமும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையும் பங்கேற்றன.
  • இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியின் பத்தாவது பதிப்பு oct 7 முதல் 20 வரை நடைபெறுகிறது
  • இந்திய இராணுவமும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையும் திவேஹி மொழியில் ‘நண்பர்கள்’ என்று பொருள்படும் எகுவெரின் என்ற பயிற்சியை 2009 முதல் நடத்தி வருகின்றன.

உலகப் புள்ளியியல் தினம்

  • மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டப் பணிகளை செயலாக்குவதில், புள்ளி விவரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
  • ஏழை, எளிய மக்களுக்காக அரசால் வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் புள்ளிவிவரங்களைச் சார்ந்தே உள்ளன.
  • பல்வேறு அரசுத்துறைகளிலும், பல்வேறு வகையான இடைநிலைப் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
  • ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 20ஆம் தேதியை உலகப்புள்ளியியல் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.
  • நோக்கம் : புள்ளிவிபரங்களின் வெற்றி மற்றும் சேவையைக் கொண்டாடுவதே ஆகும்.
Share with Friends