ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் - இலங்கை
- இலங்கை வரலாற்றில் முதல்முறையாக கடல்வழியாக இலங்கைக்கு கப்பலில் கடத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
- மேலும், போதைப் பொருட்களை கடத்தியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேரை கைது செய்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
- கப்பலில் இருந்து 500 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள், 500 கிலோ கொக்கெயினை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
செவ்வாயில் தண்ணீர்
- செவ்வாயில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை இஸ்ரோ, நாசாவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- செவ்வாயைச் சுற்றி வரும் விண்கலங்கள் அனுப்பிய தகவல்களை வைத்து ஒரு வரைபடத்தையும் நாசா உருவாக்கியிருக்கிறது.
- இது, செவ்வாயின் மேற்பரப்பில் எங்கே தண்ணீர் இருக்கின்றது என்பதை துல்லியமாகக் காட்டுகிறது.
- செவ்வாயில் 2.5 செ.மீ ஆழத்திலேயே தண்ணீர் இருப்பதுதான் இதில் ஹைலைட். இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப நாசா திட்டமிட்டு வருகிறது.
- அவர்கள் செவ்வாயில் எங்கே கால் பதிக்க வேண்டும் என்பதற்கு தண்ணீர் உள்ள பகுதிகள் உறுதுணையாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
செயற்கை ஏரி - நீல வண்ண ஏரி
- ஐஸ்லாந்தின் தென்மேற்கில் வீற்றிருக்கும் நீல வண்ண ஏரி செயற்கையாக உருவாக்கப்பட்டது.
- புவி வெப்ப ஆற்றலால் இந்த ஏரியில் இருக்கும் நீரின் வெப்ப நிலை 37 முதல் 39 சென்டிகிரேட் வரை எப்போதுமே இருக்கும்.
- 70 சதவீத கடல் நீர், 30 சதவீத நல்ல நீருடன் சிலிகா என்ற வேதிப்பொருளைக் கலப்பதுதான் இதன் நீல வண்ணத்துக்குக் காரணம்.
- இதில் குளிப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்ற காரணத்தினால் மட்டுமே வருடந்தோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஐஸ்லாந்தை நோக்கிப் படையெடுக்கின்றனர்.
- இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி கிடையாது. தவிர, உடல் ஊனமுற்றவர்கள், சக்கர நாற்காலியின் துணையில்லாமல் எங்கேயும் நகர முடியாதவர்கள் குளிப்பதற்குக் கூட இங்கே வசதியிருக்கிறது.
- ‘பூமியின் மிக அற்புதமான இடங்கள்’ என்ற தலைப்பின் கீழ் உலகின் 25 அதிசயங்களில் இந்த நீல வண்ண ஏரி இடம்பிடித்ததுள்ளது.
சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு ரத்து
- சிபிஎஸ்இ பள்ளி 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு கிடையாது மற்றும் அகமதிப்பீட்டின் அடிப்படையில் அவர்களை அடுத்த வகுப்பிற்கு வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- கொரோனா காரணமாக சிபிஎஸ்இ பள்ளிகள் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக மத்திய அரசு அறிவித்தது.
- 12-ம் வகுப்பு தேர்வுகள் பெருமளவு நிறைவு பெற்றுள்ள நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- இந்தநிலையில் சிபிஎஸ்இ பள்ளி 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு கிடையாது என்றும், அகமதிப்பீட்டின் அடிப்படையில் அவர்களை அடுத்த வகுப்பிற்கு வெற்றி பெற்றவர்களாக அறிவிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அறிவித்துள்ளார்.
விப்ரோ, அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,125 கோடி நிதி
- விப்ரோ நிறுவனம், விப்ரோ எண்டா்பிரைசஸ் நிறுவனம், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து ரூ.1,125 கோடியை கரோனா சிகிச்சைக்கான உதவி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கியுள்ளன.
- இதில் விப்ரோ நிறுவனம் ரூ.100 கோடி, விப்ரோ எண்டா்பிரைசஸ் நிறுவனம் ரூ.25 கோடி, விப்ரோ நிறுவன தலைவா் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,000 கோடி அளிக்க இருக்கின்றன.
- இதேபோல ஜிண்டால் அலுமினியம் நிறுவனம் ரூ.5 கோடியை பிரதமா் நிவாரண நிதிக்கு அளித்துள்ளது.
- இந்தியாவில் காா்கள் மற்றும் மோட்டாா் சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் தனது பெருநிறுவன சமுகப் பொறுப்பு நிதியில் இருந்து கரோனா தடுப்புக்காக ரூ.11 கோடியை ஒதுக்கியுள்ளது.
- அதேபோல பொதுத் துறை நிறுவனமான பெல் ரூ.15.72 கோடியை பிரதமா் நிவாரண நிதிக்கு அளித்துள்ளது. இதில் ரூ.8.72 கோடி அந்த நிறுவனத்தின் ஊழியா்களின் ஒருநாள் ஊதியத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.
''வளரும் நாடுகளில் கோவிட் - 19 அதிர்ச்சி''
- உலகின் மூன்றில், இரண்டு பங்கு நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் உள்ளன. இந்த நாடுகளின் பொருளாதாரத்தை மீட்க 2.5 லட்சம் டாலர் நிதியுதவி தேவைப்படும் என்று ஐநா தெரிவித்துள்ளது.
- வர்த்தகம், வளர்ச்சிக்கான மாநாடு ஐநாவில் நடந்தது. ''வளரும் நாடுகளில் கோவிட் - 19 அதிர்ச்சி'' என்ற தலைப்பில் இந்த மாநாட்டை கூட்டி இருந்தது.
- கொரோனா வைரஸ் காரணமாக உலகமே கடும் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவும், சீனாவும் மட்டும் அதில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று கூறி உள்ளது.
- உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் அநேகமாக நின்றுவிட்ட நிலையில் நடப்பு ஆண்டில் மொத்த உலகத்திலும் கடும் பொருளாதார தேக்கநிலை உருவாகும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.
- இதனால் விளைபொருள்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடுகள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு 2-3 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.150-225 லட்சம் கோடி) அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது.
- இவ்வாறு ஐ.நா. வர்த்தக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கை :
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
- பிரதமரின் தேசிய நிவாரண நிதி 1948 ல் ஜவஹர்லால் நேரு அவர்களால் நிறுவப்பட்டது.
- பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்காக பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி.
- பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
- இந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது.
- இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது.
- இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
- இந்நிதி வெள்ளம், பூகம்பம், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது.
- பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது.
- இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்நிதி பயன்படுகிறது.