Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 2nd September 19 Content

மேக்னஹாட்டில் ஆலை

  • டாக்கா அருகே மேக்னஹாட்டில் 750 மெகா வாட் எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான பங்களாதேஷ் 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி ரிலையன்ஸ் பவர் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஆலையின் கட்டுமானம் 2022 க்குள் நிறைவடையும்.

இந்தியா - சீனா

  • இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு – மாமல்லபுரம் இந்த ஆண்டின் அக்டோபரில் நடைபெறவுள்ள பிரதமர் மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடானது தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கின்றது.
  • இவர்களுக்கு இடையேயான முதலாவது முறைசாரா உச்சி மாநாடானது சீனாவின் வுஹானில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்றது. இது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

ரயில் சுரங்கப் பாதை

  • இந்தியாவின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப் பாதை சமீபத்தில் ஆந்திராவில் திறக்கப்பட்டது. 6.7 கி.மீ நீளமுள்ள இந்த சுரங்கப் பாதை ரூ 437 கோடி செலவில் கட்டப்பட்டு செர்லோபள்ளி மற்றும் ரபுரு ஆகிய நகரங்களை இணைக்கின்றது. இது இந்திய ரயில்வேயின் தென் மத்திய ரயில்வே மண்டலத்தால் அமைக்கப் பட்டது.
  • புதிய பாதையானது தெற்குக் கடற்கரை ரயில்வே மற்றும் மேற்குக் கடற்கரை ரயில்வே ஆகியவற்றிற்கிடையே நேரடி மற்றும் சாத்தியமான இணைப்பிற்கு உதவுகின்றது.

போலியோவை அகற்றும் விளிம்பில் ஆப்பிரிக்கா

  • உலக சுகாதார அமைப்பின்படி (WHO - World Health Organization), ஆப்பிரிக்கா போலியோ இல்லாததாக அறிவிக்கப் படுவதற்கான முனைப்பில் உள்ளது.
  • கடந்த மூன்று ஆண்டுகளாக (2016 முதல்) இந்த நோய் அங்கு எதுவும் பதிவு செய்யப் படவில்லை. மேலும் அடுத்த சில மாதங்களில் இந்த நோய் குறித்த எந்தவிதமான பதிவுகளும் பதிவு செய்யப் படாவிட்டால், ஆப்பிரிக்கா 2020 ஆம் ஆண்டில் அதிகாரப் பூர்வமாக போலியோ இல்லாததாக அறிவிக்கப்படும்.
  • பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ இன்னும் பரவலாக உள்ளது. எனவே உலகம் போலியோ இல்லாததாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அங்கு அந்நோய் ஒழிக்கப்பட வேண்டும்.

சுவிஸ் மற்றும் இந்தியா

  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் சுவிட்சர்லாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் தானியங்கித் தகவல் பரிமாற்றம் (AEOI - The automatic exchange of information) தொடங்கியது.
  • இதன் மூலம், சுவிட்சர்லாந்தில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் வங்கி விவரங்கள் இந்திய வரித் துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும். 2018 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தியக் குடியிருப்பாளர்களால் வைக்கப் பட்டிருக்கும் (அல்லது மூடப்பட்ட) நிதிக் கணக்குகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் இந்தியா பெறும்.
  • AEOI என்பது நாடுகளுக்கிடையில் கோரிக்கை ஏதும் வைக்காமல் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதாகும். இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று AEOI இல் கையெழுத்திட்டுள்ளன.

கோல்கீப்பர் விருது

  • பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்டோபர் மாதத்தில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால் மதிப்புமிக்க ‘உலகளாவிய கோல்கீப்பர் விருது’ வழங்கப்பட இருக்கின்றது.
  • 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று தொடங்கப்பட்ட ஸ்வச் பாரத் அபியான் மீதான அவரது தலைமை மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர் இதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • இந்த வருடாந்திர விருதுகள், ஐந்து பிரிவுகளாக, நீடித்த வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals - SDGs) அடைவதற்கான முயற்சிகளுக்காக தலைவர்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோருக்கு வழங்கப் படுகின்றன. வகைகள்: முன்னேற்றம், மாற்றத்தை ஏற்படுத்துபவர், பிரச்சாரம், கோல்கீப்பரின் முயற்சி மற்றும் உலகளாவிய கோல்கீப்பர்.
Share with Friends