பொருளாதார வளர்ச்சி
- இந்தியாவின் பொருளாதார மந்தநிலை கவலை அளிக்கிறது. பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக குறைந்து விட்டது.
- கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுதான் குறைந்த அளவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
இலங்கை - புதிய ராணுவ தளபதி
- இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனாநாயக் ஓய்வு பெற்றதையடுத்து புதிய ராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார்.
- 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரின்போது ராணுவத்தின் 58-வது பிரிவுக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
- இலங்கை போரின்போது மனித உரிமை மீறப்பட்டதாக 2013-ம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சவேந்திர சில்வாவின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான்-2 விண்கலம் - சந்திரன்
- நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
- புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்து, புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.
- பின்னர் பூமியை சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 14ம் தேதி நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது.
- நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திராயன்-2 விண்கலத்தை இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க திட்டமிடப்பட்டது. அதன்படி சந்திராயனின் திரவ என்ஜின் இன்று காலை 1738 வினாடிகள் இயக்கப்பட்டது. நிலவில் தரையிறங்க உள்ள லேண்டர் (மாதிரி படம்)
கந்தக டை ஆக்ஸைடு வாயு
- சர்வதேச கந்தக டை ஆக்ஸைடு பாதிப்பு குறித்த அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
- நிலக்கரி எரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியாகும் புகை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டாலும், சென்னையைப் பொறுத்தவரை வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையம் காரணமாக கந்தக டை ஆக்ஸைடு அதிக அளவில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதன் காரணமாக 751 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், 648 புள்ளிகளுடன் ஒடிசா 2ம் இடத்திலும் உள்ளன. கந்தக டை ஆக்சைடு வெளியாகும் இந்திய நகரங்களில் சென்னை முதலிடத்திலும், உலக அளவில் 29ம் இடத்திலும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆயுதப்படை - ஓய்வு வயது
- தற்போது, மத்திய தொழிலக பாதுகாப்புப்படையினர், அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு ஓய்வு வயது, 60 ஆக உள்ளது.
- மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லை பாதுகாப்புப்படை, இந்தோ - திபெத்திய எல்லை போலீஸ், சாஷ்டிரா சீபா பல் ஆகிய படைப்பிரிவுகளில், பணியாற்றுவோர், இதுவரை, 57 வயதில் பணி ஓய்வு பெற்றனர்.
பிரதமர் - ராஜிவ் காந்தி
- 1944, ஆகஸ்ட் 20-ல் பிறந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாள் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
கராத்தே போட்டி
- உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
- இதன் மூலம் 8 ஆம் வகுப்பு மாணவனான கிருத்தீஷ்வரன், லண்டனில் நடைபெறவுள்ள உலக அளவிலான தற்காப்புக் கலை போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
உலக கொசு ஒழிப்பு தினம்
- உலகில் முக்கியமாக 3 வகை கொசுக்கள் தான் கொடிய நோய்களை பரப்புகிறது.
- அனோபிலஸ் என்ற கொசு மலேரியா காய்ச்சலையும், ஏடிஸ் ஏஜிட்டி என்ற கொசு டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோயையும், கியூலக்ஸ் என்ற கொசு யானைக்கால் நோயையும், ஜே.இ. என்ற கொசு ஜப்பானிய மூளை காய்ச்சலையும் பரப்புகிறது என கடந்த 1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சர்ரெனால்ட்ரோஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அந்நாளே கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.