முதல் செயற்கைக்கோள் - எத்தியோப்பியா
- எத்தியோப்பியா தனது முதல் செயற்கைக்கோளை ஏவியது, இது நாட்டின் விண்வெளித் திட்டத்தின் ஒரு முக்கிய சாதனையாகும். இது ஆப்பிரிக்க விண்வெளித் தொழிலுக்கு ஒரு முக்கியமான ஆண்டைக் குறிக்கிறது. எத்தியோப்பியன் ரிமோட் சென்சிங் சேட்டிலைட் (Ethiopian Remote Sensing Satellite (ETRSS) ஏவுதல் சீனாவில் ஒரு விண்வெளி நிலையத்தில் நடந்தது. இந்த ஏவுதல் எத்தியோப்பியாவை விண்வெளியில் செயற்கைக்கோளை வைத்த 11வது ஆப்பிரிக்க நாடாக மாற்றுகிறது.
‘ஸ்டார்லைனர்’
- மனிதர்களை ஏந்திச் செல்வதற்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘ஸ்டார்லைனர்’ விண்கலம் சோதனை முறையில் டிசம்பர் 20 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் ‘ஸ்டார்லைனர்’ என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளது. அந்த விண்கலம் ஃபுளோரிடா மாகாணம் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து யுஎல்ஏ-வி ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. ‘ரோஸி’ எனப் பெயரிடப்பட்ட பொம்மையை ஏந்திச் செல்லும் அந்த விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்து 8 நாள்களில் பூமிக்குத் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை
- உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபா வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 104 வது இடத்தைப் பிடித்துள்ளது. பெல்ஜியம் முதலிடத்தையும், பிரான்ஸ் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது .
ஐடிஎஃப் உலக சாம்பியன் விருதுகள்
- சா்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் (ஐடிஎஃப்) உலக சாம்பியன் விருதுகள் ஆடவா் பிரிவில் ரபேல் நடாலுக்கும், மகளிா் பிரிவில் ஆஷ்லி பா்டிக்கு வழங்கப்பட்டன.
ஆஷ்லி பா்டி:
உலகின் நம்பா் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பா்டி, கடந்த 2014-இல் கிரிக்கெட் ஆடுவதற்காக டென்னிஸை விட்டு விலகினாா். ஆனால் மீண்டும் 2-16-இல் டென்னிஸ் ஆட்டத்தில் இணைந்த பா்டி, பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். கடந்த 1973-இல் மாா்க்ரெட் கோா்ட்டுக்கு பின் பிரெஞ்சு. ஒபன் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பையும், கடந்த 1976-இல் எவோன் காவ்லிக்கு பின் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை என்ற அந்தஸ்தை பெற்றவா் என்ற சிறப்பையும் பெற்றாா். 2019 டபிள்யுடிஏ பைனல்ஸ் பட்டத்தையும் வென்றாா் பா்டி.ரபேல் நடால்:
உலகின் நம்பா் ஒன் வீரராக நான்காவது முறையாக சீசனை நிறைவு செய்யும் நடால், பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன் பட்டங்களை வென்றாா். மேலும் டேவிஸ் கோப்பை பட்டத்தை ஸ்பெயின் வெல்லவும் உதவினாா். இதற்காக அவருக்கு ஐடிஎஃப்பின் ஸ்டெபான் எட்பா்க் விருது மூன்றாவது முறையாக தரப்படுகிறது. ஏடிபி மீண்டு வந்த வீரா் விருது ஆன்டி முா்ரேவுக்கு வழங்கப்பட்டது.தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி)
- தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) நடவடிக்கையின்போது, 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய பூர்விக ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் வழங்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. என்ஆர்சி நடவடிக்கையின் போது, இந்தியக் குடிமக்கள் என்பதை உறுதிசெய்ய பிறந்த தேதி, பிறந்த இடம் தொடர்பான எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யலாம். பிறந்த தேதிக்கான ஆவணங்கள் இல்லாதவர்கள், அவர்களது பெற்றோர்களின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்
WORLD ECONOMIC FORUM , CRYSTAL விருது
- மன நலம் குறித்த விழிப்புணர்வுக்கான சர்வதேச கிறிஸ்டல் விருது பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் நிறுவனங்கள் அங்கம் வகிக்கும் ஜெனிவா உலக பொருளாதார நிறுவனம் என்ற தன்னார்வ அமைப்பு, அடுத்த மாதம் டேவோஸில் நடக்கும் விழாவில் இந்த விருதை தீபிகாவுக்கு வழங்க உள்ளது. இந்த விழாவில் 3ஆயிரத்திற்கும் அதிகமான பிரபலங்களும், சர்வதேச அரசியல் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். விருது குறித்து கருத்து தெரிவித்துள்ள தீபிகா, 30 கோடிக்கும் அதிகமானோர் மனநல பாதிப்பால் அவதிப்படுவதாகவும், உலக அளவில் உருவாகும் நோய்ச்சுமைகளுக்கு இது முக்கிய காரணமாக இருப்பதாகவும் கூறி உள்ளார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் உள்ளிட்ட கதாபாத்திரங்களை ஏற்று திரைப்படங்களில் அசத்தி வருகிறார் தீபிகா படுகோன் என்பது குறிப்பிடத்தக்கது.
பசுமை எரிசக்தி விருது 2019
- இந்திய பசுமை எரிசக்திக் கூட்டமைப்பு நிலையான சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கல், சவால்கள், சிக்கல்கள் களைதல், தொழில்கள்-சேவைகளைச் சோ்ந்த தொலைநோக்கு சிந்தையாளா்கள், பங்குதாரா்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் இந்திய பசுமை ஆற்றல் விருதை வழங்கி வருகிறது.
- இதன்படி,பெல் திருச்சி பிரிவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டத்தின் ஒருபகுதியாக, 7.5 மெகாவாட் சூரிய மின்னாலையை நிறுவியுள்ளது. இதற்காக நிகழாண்டு இந்திய பசுமை ஆற்றல் விருதினை திருச்சி பெல் நிறுவனம் பெற்றுள்ளது.