தேசிய கணித தினம்
- தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார்.
- இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நடுவண் அரசு 1962-ம் ஆண்டு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு ராமானுஜத்தை கௌரவித்தது.
- கணித மேதை ராமானுஜம் “பெர்னௌலிஸ் எண்கள்” எனும் தலைப்பில் கட்டுரையை எழுதியுள்ளார்.
- கணித மேதை ராமானுஜத்திற்கு இங்கிலாந்து பல்கலைகழகம் 1918-ம் ஆண்டு எப்.ஆர்.எஸ் பட்டம் வழங்கி கௌரவித்தது.
சாகித்திய அகாடமி விருது - செல்வராஜ்
- தோல் திண்டுக்கல் பகுதிகளில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளர்களின் அவலநிலையை மையமாகக் கொண்டு முற்போக்கு எழுத்தாளர் தானியல் செல்வராசு எழுதியுள்ள தமிழ் புதினமாகும்.
- தோல் பதனிடும் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள், இதனால் தொழிலாளர் குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும் மற்றும் தங்கள் போராட்டத்தின் இறுதியில் வெற்றி பெற்று உரிமைகளை மீட்டதையும் இப்புதினம் விவரிக்கிறது.
- இந்த புதினத்திற்கு தமிழக அரசு சார்பில் 2011ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதும் 2012ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்துள்ளன.
தேசிய சாம்பியன் பட்டம் - ஜீனா கிட்டா
- போபாலில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களின் ஏர் ரைஃபில் போட்டியின் சீனியர்ஸ் பிரிவில் தனது முதல் தங்கத்தை இமாச்சல பிரதேசத்தின் ஜீனா கிட்டா வென்றார்.
- ரோஹ்ருவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி, இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.
Apharan
- Apharan பயிற்சி கொச்சி துரை முகத்தில் நடத்தப்பட்டது.
- இது இந்திய கடற்படை & கடலோர காவல்படை இணைந்து நடத்திய கடத்தல் எதிர்ப்பு பயிற்சி ஆகும்.