உலக தண்ணீர் தினம்
- உலக தண்ணீர் தினம் மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
- இந்த நாளில் தண்ணீரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும்.
- நிலத்தடி நீரின் முக்கியத்துவம்,தண்ணீரால் எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகள் ஆகியவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
- c1992ஆம் ஆண்டு முதன் முதலில் யுனைடெட் நேசனால் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனரியோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
உலக தண்ணீர் தினம் 2020 தீம்
'Invincible - A Tribute to Manohar Parrikar'
- காலஞ்சென்ற கோவா முதலமைச்சரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான மனோகர் பாரிக்கருக்கு அவரது ஓராண்டு நினைவுநாளை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அப்போது, 'Invincible - A Tribute to Manohar Parrikar' என்ற நூலையும் வெளியிட்டார்.
- கோவாவின் முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், நோய் காரணமாக காலமானார். அவருக்குப் பிறகு, பிரமோத் சாவந்த் அம்மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். 2014 முதல் 2017 வரை இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக மனோகர் பாரிக்கர் பணியாற்றினார்.
இந்திய ரிசர்வ் வங்கி - PA
- கொடுப்பனவு திரட்டிகளின் முழு நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது.
- இந்தக் கொடுப்பனவு திரட்டிகள், மின்னணு வணிக தளங்கள் மற்றும் வணிகர்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பல்வேறு முறைகளில் கட்டணங்களை வசூலிக்க உதவுகின்றன.
- கொடுப்பனவு திரட்டிகள் (PA's) மற்றும் கட்டண நுழைவாயில்களை ஒழுங்குபடுத்துதற்கான வழிகாட்டுதல்களின்படி, தற்போதுள்ள கொடுப்பனவு திரட்டிகள், 2021 மார்ச்.31ஆம் தேதிக்குள் 115 கோடி நிகர மதிப்பும், 2023 மார்ச்.31ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னோ ₹25 கோடி நிகர மதிப்பு பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு ₹25 கோடி என்ற நிகர மதிப்பினை எல்லா நேரங்களிலும் பராமரித்தல் வேண்டும்.
நானோகாம்போசிட் மேல்பூச்சுகள்
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒரு தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையமான தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மையமானது (ARCI - Advanced Research Centre for Powder Metallurgy & New Materials) நானோகாம்போசிட் பூச்சுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு கொண்ட படிவுகளுக்கான செயல்முறையை உருவாக்கியுள்ளது.
- புதிய பொருட்களின் இயற்பியல், வேதியியல் மற்றும் இயற்பியல் - வேதியியல் பண்புகளை மேம்படுத்துவதற்காக நானோ அளவிலான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேறுபட்ட பொருட்களைக் கலப்பதன் மூலம் நானோகாம்போசிட் பூச்சுகள் உருவாக்கப்படுகின்றன.
- மின்னாற் பூசும் முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட அளவிலான சிலிக்கான் கார்பைடு (sized Silicon Carbide - STC) துகள்களின் உட்செலுத்தலின் மூலம் உருவாக்கப்பட்ட நிக்கல் டங்ஸ்டனை அடிப்படையாகக் கொண்ட பூச்சுகளால் தேய்வு மற்றும் அரிப்பு எதிர்ப்புத் தன்மை கொண்ட சிறந்த கலவையை வழங்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
- இந்தக் கூறுகளின் செயல்படும் காலத்தை மேம்படுத்துவதற்காக பல விண்வெளி, பாதுகாப்பு தானியங்கி, விண்வெளி சாதனங்கள் உராய்வு, தேய்மானம் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும்.
'My Encounters in Parliament'
- இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத்தலைவரான ஹமீது அன்சாரி, பாலச்சந்திர முங்கேக்கர் எழுதிய, 'My Encounters in Parliament' என்ற நூலை வெளியிட்டார்.
- இந்நிகழ்ச்சியில், NCP தலைவர் ஷரத் பவார், CPI பொதுச்செயலாளர் D ராஜா, CPI (M) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
- பாலச்சந்திர முங்கேகர் ஓர் இந்திய பொருளாதார வல்லுநரும், சமூக சேவகரும் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமாவார்.
- அம்பேத்கரிய கொள்கைகளின் தீவிர பின்பற்றாளறான இவர் ஒரு வேளாண் பொருளாதார நிபுணருமாவார்.
- திட்ட ஆணையம் உட்பட பல முக்கிய அமைப்புகளில் அவர் பணியாற்றியுள்ளார்.
வானூர்தி (திருத்தம்) மசோதா - 2020
- வானூர்தி (திருத்த) மசோதா, 2020, மக்களவையில் குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா வானூர்தி சட்டம், 1934 இல் திருத்தம் மேற்கொள்ள விழைகிறது.
- உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின்கீழ் தற்போதுள்ள மூன்று ஒழுங்குமுறை அமைப்புகளை சட்டரீதியான அமைப்புகளாக மாற்றுவதை இது நோக்கமாகக்கொண்டுள்ளது.
- உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம்) மற்றும் (விமான விபத்து குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பணியகம்) ஆகிய மூன்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குமுறை நிறுவனங்களாகும்.
பிரான்சிஸ்கோ கார்சியா - கொரோனா
- அட்லெடிகோ போர்ட்டா ஆல்டாவின் இளையோர் அணியுடன் பணிபுரிந்த 21 வயதான ஸ்பானிய கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா, COVID-19 வைரஸ் நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தார். இதன்மூலம், இப்பகுதியில் கொரோனா வைரஸால் இறந்த ஐந்தாவது மற்றும் இளம் வயது நபராக இவருள்ளார்.
- COVID-19 நோய்த்தொற்றுக்கான சிகிச்சையின்போது அவர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
- கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக, ஸ்பெயினில் உள்ள முக்கிய கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன.
ODF+,ODF++ and நீர் பிளஸ்
- சமீபத்தில் நகர்ப்புற மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழுவானது மக்களவையில் தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் (நகர்ப்புற) செயல்திறன் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
- தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் (நகரம் -2) அடுத்த நிலையின் கீழ் ODF+, ODF++ and நீர் பிளஸ் என்ற மூன்று நெறிமுறைகளின் பணிகளானது 2024 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற போதிலும் அதன் உண்மை நிலைமை ஒதுக்கப்பட்ட காலக்கெடுவுடன் பொருந்த வில்லை.
- ODF என அறிவிக்கப்பட்ட 4,320 நகரங்களில் 1,276 நகரங்கள் ODF - என சான்றளிக்கப் பட்டுள்ளன. ODF -- நகரங்களின் எண்ணிக்கையானது 411 ஆகும். அதாவது 10 சதவீதத்திற்கும் குறைவான நகரங்கள் இதுவரை ODF -- என சான்றிதழ் பெற்றுள்ளன.
- தூய்மை இந்தியாத் திட்டம் - நகர்ப்புறம் (Swachh Bharat Mission - Urban - SBM-Urban) என்ற திட்டத்தின் முதலாவது நிலையின் கீழ் ODF அங்கீகாரத்தை அடைந்த பின்னர் நகரங்கள் மேற்கொண்ட பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும் அவற்றைப் பராமரிக்கவும் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் OOF - மற்றும் ODF -- ஆனது தொடங்கப் பட்டன.
- ODF நெறிமுறைகளின் அடிப்படையில், ஒருமுறையாவது ODF சான்றிதழைப் பெற்ற நகரங்கள், தங்களை SBM - CDF- & SBM - OOF++ என அறிவிக்கத் தகுதியுடையவை ஆகும்.
- ODF+ ஆனது கழிப்பறைகளில் நீர், பராமரிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.
- ODF++ ஆனது கழிப்பறைகளில் கழிவுத் திரட்டு மற்றும் நச்சூட்டுப்பொருள் மேலாண்மை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.
- 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நீர் பிளஸ் ஆனது தண்ணீரைச் சுத்திகரித்து, மறுபயன்பாடு செய்வதன் மூலம் கழிப்பறைகளைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது ஜல் சக்தி அபியானின் கீழ் உள்ள நீரின் பயன்பாடு குறித்த உரையாடல் மற்றும் மறுபயன்பாடு குறித்து மத்திய அரசு கவனம் செலுத்துவதற்குப் பங்களிக்கின்றது.
- இது தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த வளர்சிக்கான இலக்கு எண் 6 உடன் இணங்குகின்றது.
- தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் முதலாவது நிலையின் கீழ் 99 சதவீத நகரங்கள் ODF நிலையை அடைந்துள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் கூறியுள்ளது.