Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 23rd March 20 Notes



உலக வானியல் தினம்

  • உலக வானியல் தினம் மார்ச் மாதம் 23-ம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
  • காலநிலையும், நீர் நிலையும்' என்ற கருத்துடன், உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • உலக வானிலை அமைப்பு, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில், 1950 மார்ச், 23ல் துவங்கப்பட்டது.
  • வானிலை துறையின் அடிப்படை என்னவென்றால், துல்லியமான வானிலை அறிவிப்புகளை தகுந்த நேரத்தில் கொடுப்பதாகும்.

‘திருநங்கைகள்’ கால்பந்து அணி

  • இந்தியாவில் முதன் முறையாக திருநங்கைகள் அடங்கிய கால்பந்து அணி உருவாகியுள்ளது.
  • மணிப்பூர் மாநிலம் இம்பாலை சேர்ந்த அரசு சாரா நிறுவனம், ‘யா ஆல்’. இரு ஆண்டுக்கு முன் திருநங்கைகளுக்காக ஆறு பேர் கொண்ட கால்பந்து போட்டிகளை நடத்தியது. இதையடுத்து முழுவதும் திருநங்கைகள் அடங்கிய 14 பேர் கொண்ட கால்பந்து அணி மணிப்பூரில் உருவாகியுள்ளது.

குடும்பத்துக்கு ரூ. 1000 உதவித்தொகை

  • ஆந்திர மாநில முதல்வா் ஒய்.எஸ்.ஆா். ஜெகன்மோகன் ரெட்டி கரோனா அச்சுறுத்தலைத் தொடா்ந்து ஆந்திர மாநிலத்தில் ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருள்களும், குடும்பத்துக்கு ரூ. 1000 உதவித்தொகை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
  • கரோனா பாதிப்பைப் பொருத்தவரை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இங்குள்ள நிலைமை கட்டுக்குள்ள உள்ளது என்றாா்.
  • ஆந்திரத்தில் இதுவரை 6 போ் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனா். ஒருவா் முழு குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

75 மாவட்டங்களின் எல்லைகள் மூட மத்திய அரசு உத்தரவு

  • கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் 75 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • கர்நாடகத்தில் பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், மங்களூரு, மைசூரு, கலபுர்கி, தார்வாட், சிக்கபல்லபுரா, குடகு, பெலகாவி ஆகிய 9 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்படவுள்ளன.
  • இதேபோல் கேரளத்தில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கண்ணணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்படவுள்ளன.

பிளாஸ்டிக், எவர்சில்வர் - 3 நாள்கள் உயிர் வாழும் வைரஸ்!

  • பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மேற்பரப்பில் கரோனா வைரஸ் 2 முதல் 3 நாள்கள் வரை உயிா் பிழைத்திருக்கும் என்று அமெரிக்காவின் கலிஃபோா்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
  • மேலும், தபால் உறைகள் போன்ற கடினமான அட்டைகளில் 24 மணி நேரமும் செப்புப் பாத்திரங்களில் 4 மணி நேரமும் அந்த வைரஸ் உயிா் வாழும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் சரிவு

  • 23rd mar 20 - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், காலை 9.43 மணியளவில் 2,600 புள்ளிகள் சரிவடைந்தது.
  • தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 750 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது.
  • இதையடுத்து, சென்செக்ஸ் 10% சரிவடைந்ததால் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு, கச்சா எண்ணெய் விலை குறைவு, கரோனா வைரஸ் தாக்கத்தினால் வணிக நிறுவனங்கள் முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகின்றன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி)

  • வரும் ஏப்ரல் 1 முதல் இந்தியா முழுவதும் பிஎஸ் 6 பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்பட உள்ளநிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தற்போதே விநியோகத்தைத் தொடங்கிவிட்டது.
  • நாடு முழுவதும் இருக்கும் அதன் 28,000 பெட்ரோல் நிலையங்களில் தற்போது பிஎஸ் 6 எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அதன் தலைவர் சஞ்சிவ் சிங் தெரிவித்துள்ளார்.
  • தேசிய தலைநகர் தில்லியில் பிஎஸ்-6 தர எரிபொருள்களின் விற்பனையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2018 ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியே தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு - ரூபாய் ரூ.500 கோடி நிதி

  • தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதலாக ரூபாய் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்துள்ளார்.
  • ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்துள்ளார்.

லோகோ பைலட்

  • இந்திய ரயில்வேயின் கடினமான ரயில் என்ஜின் லோகோ பைலட் பணியிடங்களில் பெண்கள் தற்போது அதிக அளவில் சேர்ந்து, தடம் பதிக்க உள்ளார்கள். இந்திய ரயில்வேயில் ஓர் ஆண்டில் முதன்முறையாக 1,280 பெண்கள் என்ஜின் உதவி லோகோ பைலட் ஆக தேர்வாகியுள்ளார்கள்.
  • இவர்கள் வருகையின் மூலமாக, வரும் ஆண்டுகளில் இந்த கடின பணியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Share with Friends