Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 24th December 19 Content

எம். ஜி. ஆர்

  • எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

சிலாய்-கலன்

  • கடுமையான குளிர் என்று அழைக்கப்படும் சிலாய்-கலன் ஜம்மு காஷ்மீரில் தொடங்கியது.
  • ஜம்மு காஷ்மீரில் கடும் குளிர் நிலவுகிறது. ஸ்ரீநகரில் வெப்ப நிலை மைனஸ் 3.7 டிகிரி செல்சியசுக்கும் கீழாக சென்றது.
  • இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

FIRST TIGER CELL

  • இந்தியாவின் FIRST TIGER CELL உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (N.T.C.A) மற்றும் W.I.I இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • வேட்டையாடுவதைத் தடுப்பதன் மூலமும் புலி எண்களைப் புதுப்பிப்பதன் மூலமும் பாதுகாப்பு முயற்சிகளுக்கு இது உதவும்.

யுஏஇ & ஓமான்

  • வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக யுஏஇ மற்றும் ஓமான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்த அடையாளம் மஸ்கட்டில் நடைபெற்ற 10 வது அமன் யூனியன் பொதுச் சபையின் போது நடந்தது.

இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியல்

  • ஃபோர்ப்ஸ் இதழினின் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • பிரபலங்களின் ஆண்டு வருமானம், பத்திரிகை மற்றும் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கை வைத்து கணக்கிடப்படுகிறது.
  • கடந்த 2018 அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் 2019 செப்டம்பர் 30-ம் தேதி வரை கணக்கிடப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தாண்டுக்கான பட்டியலில் ரூ.252.72 கோடி வருமானத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
  • இந்த 100 பேர் கொண்ட பட்டியலில் தமிழக திரையுலக பிரபலங்களான ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் சங்கர்,
  • சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்புராஜ், ஆகியோரும் இடம் பிடித்துள்ளர்.

முதல் பெண் தலைமை தொழில்நுட்ப அதிகாரி

  • அமெரிக்க தகவல் தொடா்பு ஆணையத்தின் (எஃப்சிசி) முதல் பெண் தலைமை தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) மோனிஷா கோஷ் என்ற இந்திய அமெரிக்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • மோனிஷா, வரும் ஜனவரி 13-ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளாா். இவா், தனக்கு அடுத்த நிலையில் உள்ள எஃப்சிசி தலைவா் அஜித் பை மற்றும் எஃப்சிசி அமைப்பின் பிற துறைகளுக்கும் ஆலோசனைகளை வழங்குவாா்.
Share with Friends