ஜார்க்கண்ட் - 10 பெண் எம்.எல்.ஏ.க்கள்
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது.
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில், முதல் முறையாக 10 பெண்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- இந்த 10 பெண் எம்எல்ஏக்களில் 6 பேர் முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்.
‘ஆக்ஸிஜன் பார்லர்’
- நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தனித்துவமான முயற்சியில், பயணிகளுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்கும் அனுபவத்தை வழங்க நாசிக் ரயில் நிலையத்தில் ‘ஆக்ஸிஜன் பார்லர்’ திறக்கப்பட்டுள்ளது.
- 1989 ஆம் ஆண்டில், நாசா ஒரு ஆய்வை நடத்தியது, அதில் அவர்கள் காற்றில் இருந்து மிகவும் தீங்கு விளைவிக்கும் ஐந்து மாசுபடுத்திகளை சிறப்பாக உறிஞ்சும் சில தாவரங்களை அடையாளம் கண்டனர்.
- அந்த தாவரங்களில் பெரும்பாலானவற்றை இங்கு நட்டுள்ளனர்.
- "இங்கு சுமார் 1500 தாவரங்கள் உள்ளன, எனவே, இந்த ஆலைகள் நேரடியாகவும் திறமையாகவும் ரயில் நிலையத்தில் காற்றில் உள்ள மாசுபாட்டைக் குறைத்து மக்களை தூய்மையான காற்றை சுவாசிக்க அனுமதிக்கும்"
போலி பாஸ்போர்ட் மற்றும் நாணயத்தாள்களை நிறுத்த புதிய மை
- தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய இயற்பியல் ஆய்வகம் ஒரு மை உருவாக்கியது.
- சுற்றுப்புற ஒளியில் மை வெள்ளை நிறத்தைக் காட்டும்.
- புற ஊதா ஒளியில் வெளிப்படும் போது, அது சிவப்பு நிறமாக மாறும்
QRSAM ஏவுகணை
- QRSAM ஏவுகணை முதல் முறையாக ஜீன் 4 -2017 அன்று சோதனை நடத்தப்பட்டது.
- Quick Reaction Surface-to-Air Missile (QRSAM) எனப்படும் வான் பாதுகாப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
- ஒடிசாவின் பாலசோரில் இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
- 25 km to 30 km வரும் வான் இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது.
- இந்த ஏவுகணை solid-fuel propellant கொண்டது.
- அனைத்து காலநிலை மற்றும் அனைத்து நிலவகைகளுக்கும் ஏற்ற வகையில் இந்த ஏவுகணை அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
AFSA - செபி
- சந்தைகளின் கட்டுப்பாட்டாளர் செபி (இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்) பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்காக கஜகஸ்தானை தளமாகக் கொண்ட அஸ்தானா நிதிச் சேவை ஆணையம் (AFSA) உடன் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் செபி தலைவர் அஜய் தியாகி மற்றும் AFSA முக்தார் புபியேவ் செயல் தலைமை நிர்வாக அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
- நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (Consumer Protection Act) 1986 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.
- இது நுகர்வோர் பிரச்சனைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது.
- நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் புகார்தாரரே புகார் தாக்கல் செய்தும் அவரே வாதிட்டும் நீதிபெற முடியும்.
- மருத்துவக்குறைபாடுகள், வங்கிகள், வீடு கட்டிக் கொடுப்பவர் பிரச்சனைகள் மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்ற சிக்கல்களுக்கும் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கச்து.
வாஜ்பாய் - வெண்கலச் சிலை
- உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலகமான லோக் பவன் நுழைவாயிலில் அடல் பிஹாரி வாஜ்பாயின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
- மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்த வெண்கலச் சிலை திறந்து வைத்தார்.
- ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் என்பவரால் ரூ.89.6 லட்ச மதிப்பில் இந்தச் சிலை செதுக்கப்பட்டுள்ளது.
ABHEY திட்டம்
- நாட்டில் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
- இந்நிலையில், இரவு நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு உதவ ஆந்திர மாநில காவல்துறையினர் ‘அபய்’ என்ற பாதுகாப்பு திட்டத்தை தொடங்கியுள்ளனர்.