Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 25th March 20 Notes



காணொலிக் கருத்தரங்கம் - ஐநா சபை

  • வரலாற்றில் முதல் முறையாக காணொலிக் கருத்தரங்கம் வழியாக ஐ.நா. சபை கூடிப் பேசியுள்ளது.
  • ஐ.நா. சபையின் தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க் நகரம் தற்போது கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • தனிப்பட்ட அலுவல் ரீதியான காரணங்கள் எதுவும் இதில் பட்டியலிடப்படவில்லை. சோதனை அடிப்படையில் இந்தக் கூட்டம் கூடியது.
  • ஆங்கிலத்திலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றதால், மற்ற அதிகாரபூர்வ மொழிகளின் மொழிபெயர்ப்பில் சிரமம் ஏற்பட்டது.
  • வரலாற்றில் முதல் முறையாக காணொலிக் கருத்தரங்கம் வழியாக ஐ.நா. சபை கூடிப் பேசியுள்ளது.

என்பிஆர் - மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு

  • மத்திய அரசு “2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக, அதாவது
  • (a) முதல் கட்டம் - 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் வீடுகளில் பட்டியல் எடுத்தல் & வீட்டு வசதி கணக்கெடுப்பு மற்றும்
  • (b) இரண்டாவது கட்டம் - 2021 பிப்ரவரி 9 முதல் 28 வரையில் மக்கள் தொகையைக் கணக்கெடுத்தல் என நடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
  • மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் (அசாம் தவிர) தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர) குறித்த புதிய தகவல்கள் சேகரிப்பதும் செய்வதாக உத்தேசிக்கப்பட்டிருந்தது.
  • கோவிட் - 19 நோய்த் தொற்று பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பை காலவரையின்றி மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி:

  • தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிகளுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.
  • இந்நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டதாக முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
  • மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
  • இதேபோன்று பிளஸ் 2 மானவர்கள் கடைசி தேர்வை எழுத முடியாமல் போனதால் அதை வேறொரு நாளில் தனியாகத் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கோவில் பணிகள் துவக்கம்

  • உ.பி.,யில், உள்ள அயோத்தியில், புதிதாக ராமர் கோவில் கட்டும் பணி துவங்கவுள்ளது. இதற்காக, தற்காலிக கோவிலில் உள்ள ராமர் சிலை, அருகில் உள்ள பகுதிக்கு மாற்றும் நிகழ்ச்சி, நவராத்திரி பண்டிகையின் முதல் நாளான நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடைபெற்றது.
  • ராமஜென்மபூமி கோவில் கருவறையில் இருந்து, 27 ஆண்டுகளுக்குப் பின், ராமர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
  • கொரோனா காரணமாக, ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்நிகழ்ச்சி யில், முதல்வர், யோகி ஆதித்யநாத், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செயலர், சம்பத் ராய் உள்ளிட்ட சிலர் மட்டும் பங்கேற்றனர்.
  • தற்போதைய கோவிலில் இருந்து, முதல்வர், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட நால்வர், ராமர் சிலையை பல்லக்கில் சுமந்து சென்று, புதிய இடத்தில், 9.5 கிலோ எடையுள்ள, வெள்ளி சிம்மாசனத்தில் வைத்தனர். பின், முதல்வர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

DPP-2020

  • புதுப்பிக்கப்பட்ட DPP-2020 கையேட்டை (பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைவு வரைவு - 2020) மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
  • இந்த DPP கையேடு என்பது கடந்த 18 ஆண்டுகளாக, பாதுகாப்பு மூலதன வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை நிர்வகிக்கப் பயன்படும் கொள்முதல் கையேடு ஆகும்.
  • இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவில் கொள்முதல் செய்வதை இந்த 2020 வரைவு பதிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

சத்யரூப் சித்தாந்தா

  • பெங்களூரைச் சார்ந்த மலையேற்ற வீரர் சத்யரூப் சித்தாந்தா, அண்மையில் ஏழு கண்டங்களில் உள்ள மிகவுயர்ந்த எரிமலைகளின் உச்சியை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவராக லிம்கா உலக சாதனை நூலில் இடம்பெற்றுள்ளார்.
  • கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் அவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் அவர் இச்சாதனையை நிகழ்த்தினார். அதற்கான ஒப்புதல் அண்மையில் அவருக்கு அளிக்கப்பட்டது.
  • அண்டார்டிகாவின் மிகவுயர்ந்த எரிமலையான சிட்லி எரிமலையின் உச்சியை அடைந்ததன்மூலம் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
  • ஏழு கண்டத்திலும் உள்ள மிகவுயரமான மலைகளின் உச்சியை அடைந்த இளம் வயது நபர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

"பழங்குடியினருக்கான தொழில்நுட்பம்"

  • பழங்குடியினரிடையே தொழில்முனைவை ஊக்கப்படுத்துவதற்காக இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் இணைந்து, "பழங்குடியினருக்கான தொழில்நுட்பம்" என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தால் ஆதரிக்கப்படும் இந்த முயற்சி, பிரதான் மந்திரி வன்தன் யோஜனாவின்கீழ் பதிவுசெய்யப்பட்ட பழங்குடி வன உற்பத்தி சேகரிப்பாளர்களுக்கு தொழில்முனைவு திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சி 30 நாட்களுக்கு நடத்தப்படும்.

கரோனா பரிசோதனை மையம்: திருச்சி, விழுப்புரம்

  • சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, தேனி, திருவாரூா், திருநெல்வேலி, கோவை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது.
  • இவை தவிர, சென்னை அப்பல்லோ மருத்துவமனை, வேலூா் சிஎம்சி மருத்துவமனை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியுபொக் எா்லிச் என்ற ஆய்வகம் ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் மதுரை, திருச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில், மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை தொடங்கியுள்ளது.

ரேஷன் கடைகளில் கூடுதல் உணவுப்பொருள்கள்

  • கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கூடுதலாக உணவுப்பொருள் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 கோடி போ பயன்பெற்று வருகிறாா்கள். இந்த திட்டத்தின் கீழ் சந்தையில் கிலோ ரூ.27-க்கு விற்பனை செய்யப்படும் கோதுமை ரூ.2-க்கும், கிலோ ரூ.32-க்கு விற்பனை செய்யப்படும் அரிசி ரூ.3-க்கும் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • மேலும், இத்திட்டத்தின் கீழ் நபா் ஒன்றுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. தற்போது கூடுதலாக 2 கிலோ சோத்து 7 கிலோ உணவு தானியம் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • இந்த உத்தரவை பின்பற்றி உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
  • பிராந்திய ஊரக வங்கிகளை ரூ.1,340 கோடி மறுமுதலீட்டில் வலுப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில், மத்திய அரசு சாா்பில் ரூ.670 கோடி, வங்கிகள் சாா்பில் ரூ.670 கோடி சோத்து ரூ.1,340 கோடியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
  • ஆயத்த ஆடைகள் மற்றும் ஏற்றுமதி ஆடைகளுக்கான வரி விதிப்பு திட்டம் அமல்படுத்தப்படும் வரை மத்திய, மாநில வரிச் சலுகைத் திட்டத்தை நீட்டிப்பதற்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Share with Friends