Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 26th December 19 Content

சுனாமி தினம்

  • 2004 டிசம்பரில், இந்திய பெருங்கடலின் கீழ் பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமி, தெற்காசியாவில் 10,000 பேரைக் கொன்றது.
  • இந்தோனேசியா, இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள அதிகாரிகள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் இறப்புக்களை அறிக்கை செய்தனர் மற்றும் புள்ளிவிவரங்கள் அடுத்த சில நாட்களில் கூர்மையாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது .
  • அடுத்த 7 நாட்களில் 13 நாடுகளில் 216,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
  • இந்தோனேசியாவில் குறைந்தது 128,000 பேர் இறந்தனர்.
  • இது நவீன காலத்தில் மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும்.

ஈரான் அணுசக்தி திட்டம்

  • டிசம்பர் 2005 இல், ரஷ்ய மண்ணிற்கு தங்கள் அணுசக்தி செறிவூட்டல் ஆலைகளை மாற்றுமாரு ரஷ்யா கூறியதாக எழுந்த ஒரு கருத்தை ஈரான் மறுத்தது.
  • இருப்பினும், ஈரானுக்கு அழைப்பு விடுத்ததாக ரஷ்யா கூறியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சார்லஸ் பாபேஜ்

  • சார்லஸ் பாபேஜ் , அவர் ஒரு ஆங்கில கணிதவியலாளர், மெய்யியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் இயந்திர பொறியியலாளர் ஆவார். கணினியை கண்டுபிடித்தவரும் இவரே.
  • கணினிகளின் தந்தை என்று அழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் ஒரு தானியங்கி கணினி இயந்திரத்தை வடிவமைத்தார். தானாகவே கணக்கீடுகளை தீர்வு செய்வதே அதன் நோக்கமாகும்.
  • 1822 ஆம் ஆண்டில் பாபேஜ் polynomial functions செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கான முதல் இயந்திரத்திற்கான தனது பணியைத் தொடங்கினார். வரையறுக்கப்பட்ட வேறுபாடுகளின் முறையைப் பயன்படுத்தி தானாக ஒரு தொடர் மதிப்புகளை கணக்கிட இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டது.
  • பின்னர் அவர் ஒரு பொதுவான பகுப்பாய்வு கணினி இயந்திரத்தை வடிவமைத்தவர், இந்த இயந்திரத்தை வடிவமைப்பதற்காக அட்டைகளை துளைக்க பயன்படுத்தும் டூரிங் இயந்திரத்தை அவர் பயன்படுத்தினார். அவர் இறக்கும் வரை இந்த இயந்திரத்தின் செயல்பாடுகளில் முழு கவனம் செலுத்தினார்.

சிறந்த நிர்வாக பட்டியல் - 2019

  • மத்திய அரசு வெளியிட்டுள்ள, நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கடுத்த இடங்களில், மஹாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்கள் உள்ளன.
  • யூனியன் பிரதேசங்களில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலமாக புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சண்டிகர், டெல்லி அடுத்த இடங்களில் உள்ளன. லட்சத்தீவு கடைசி இடத்தில் உள்ளது.
  • 18 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 11 வடகிழக்கு மற்றும் மலை பகுதி மாநிலங்கள் என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. விவசாயம், தொழில் ஆகியவையும் இந்தக் கணக்கெடுப்பில் ஆய்வு செய்யப்பட்டன.

இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department, IMD)

  • இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department, IMD), அல்லது சுருங்க வானிலைத் துறை, இந்திய அரசின் புவியறிவியல் அமைச்சின் கீழே உள்ள திணைக்களம் ஆகும்.
  • இது வானிலையியல் அவதானிப்புகள், வானிலை முன்னறிவிப்பு மற்றும் நில நடுக்கவியல் குறித்தான முதன்மை முகமையாகும். இதன் தலைமை அலுவலகம் புதுதில்லியில் லோதி சாலையில் அமைந்துள்ளது.
  • இந்தியா முழுமையிலும் நூற்றுக்கணக்கான வானிலை கவனிப்பு மையங்களை இயக்கி வருகின்றது.

முதல் தடுப்பு காவல் மையம்

  • சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைக்க பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே சொன்டிகொப்பாவில் தடுப்பு காவல் மையம் திறக்கப்பட்டு உள்ளன.
  • இது கர்நாடகத்தில் முதல் தடுப்பு காவல் மையம் ஆகும்.

அடல் பூஜல் யோஜனா திட்டம்

  • டெல்லியில் நடைபெற்ற விழாவில் நிலத்தடி நீர் மேலாண்மைக்கான அடல் பூஜல் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முதற்கட்டமாக குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி

  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் வரும் 29ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்.
Share with Friends