சுங்கக் கட்டணம் ரத்து
- நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
- கரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் சூழலில் அவசர சேவைகளுக்கு செல்லும் போது காத்திருக்க கூடாது என்பதற்க்காக சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
LHA 120-N150 - இளஞ்சிவப்பு மேகம்
- அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள மேகக்கூட்டத்தைப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
- நாசா விஞ்ஞானிகள் உலகின் மிகப் பெரிய விண்ணியல் தொலைநோக்கியான ஹப்பிள் தொலைநோக்கி மூலம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இளஞ்சிவப்பு நிற ஒளிரும் மேகக் கூட்டம் ஒன்றைக் கண்ட னர்.
- இதில் குறிப்பிடப்படும் ஒளி ஆண்டு என்பது, நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் ஒளி பயணிப்பதாகும்.
- இந்த மேகக் கூட்டத்தைச் சுற்றி ஏராளமான நட்சத்திரங்களும், விண்கற்களும் இருந்தன.
- இந்த இளஞ்சிவப்பு மேகக் கூட்டத்திற்கு எல் ஹெச் ஏ 120 என் 150 (LHA 120-N150) என்று பெயரிட்டுள்ளனர்.
- சமீபகாலத்தில் மிக அதிக தொலைவில் நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட மேகக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹண்டா வைரஸ் தொற்று
- சீனாவில் யுனான் மாகாணத்தில் ஹண்டா என்னும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்திருக்கிறார்.
- அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையின்படி, (Centre for Disease control and Prevention) இந்த வைரஸ் எலிகள் மூலம் பரவுகிறது.
- ஹண்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எலியின் எச்சில் அல்லது கழிவுகளைத் தொடும் ஒரு நபர், கைகளைக் கழுவாமல், நேரடியாக தனது முகத்தைத் தொட்டால் அவருக்கு இந்த வைரஸ் பரவும் வாய்ப்புகள் அதிகம்.
- ஹண்டா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாலே மற்றொருவருக்கு வைரஸ் பரவாது. ஒருவரின் சுவாச மண்டலம் மூலமாக ஹண்டா வைரஸ் பரவாது.
- ஆனால் ஹண்டா வைரஸ் தொற்று ஏற்பட்ட மனிதரின் கழிவுகள் அல்லது ரத்தம் மூலமாக இது மற்றொருவருக்கு பரவும்’ என விளக்கமளித்துள்ளார் வுஹான் பல்கலைக்கழக பேராசிரியர் யாங் ஷங்யூ.
ரஷிய தீவுகளில் நிலநடுக்கம் - 7.5 ரிக்டர்
- பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ரஷியாவுக்குச் சொந்தமான கூரில் தீவுகளில் இன்று காலை 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- கடலின் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இதனை அடுத்து, உடனடியாக அப்பகுதி மற்றும் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. எனினும், அடுத்து நிலநடுக்கம் ஏற்படாத நிலையில், அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
கொரோனா தடுப்பு மருந்து.
- அமெரிக்காவில் தனியார் நிறுவனம் ஒன்று கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
- ’ஆர்க்டரஸ் தெரபடக்ஸ்’ (arcturus therapetucs) என்னும் அந்த நிறுவனம் தாங்கள் தயாரித்துள்ள மருந்தின் ஒரு மைக்ரோ கிராம் அளவு இருந்தாலே வைரஸ் தாக்குதலில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளது.
- ஆனால், தடுப்பு மருந்தை சோதித்து அங்கீகாரம் தருவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் தாங்கள் காத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனை கருவி
- தமிழகத்தில் சென்னை, தேனி, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியது.
- தமிழகத்திலும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மற்றும் சென்னை அப்போலோ ஆய்வகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாத நிலையில், தனியார் ஆய்வகங்கள் ரூ.4500 கட்டணமாக வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
- இந்த நிலையில், புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யுசன் என்ற நிறுவனம் கொரோனா பரிசோதனை கருவியை கண்டறிந்துள்ளது. ரூ.80 ஆயிரம் மதிப்பு கொண்ட ஒரு கருவி மூலம் 100 பேரை சோதனை செய்ய முடியும்.
- கொரோனா பரிசோதனை கருவி கண்டறிந்த முதல் இந்திய தனியார் நிறுவனம் இதுதான்.
- இந்த கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று அனுமதி அளித்துள்ளது. மேலும், மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு கழகமும் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் வணிக ரீதியாக இந்த கருவிகளை அந்நிறுவனம் விற்க முடியும்.
பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் உயர்வு
- மும்பை பங்குச் சந்தையில் 1,861.75 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 28,535.78-ஆக உயர்ந்தது. அதேபோல் தேசியப் பங்குச் சந்தையில் 516.80 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 8,317.85-ஆக உயர்ந்தது. மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையில் 7 சதவீதம் அளவிலும், தேசியப் பங்குச் சந்தையில் 6.62 சதவீதம் அளவிலும் ஏற்றம் காணப்பட்டது.
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 13.84 சதவீதம் அளவில் ஏற்றம் கண்டன
- ஹெச்டிஎஃப்சி வங்கி 12.41 சதவீதமும், கோடக் மஹிந்திரா வங்கி 11.9 சதவீதமும், யுபிஎல் 11.43 சதவீதமும், கிராசிம் 10.47 சதவீதமும் ஏற்றம் கண்டன.
- யெஸ் வங்கியின் பங்கு மதிப்பு 15.86 சதவீதம் அளவில் வீழ்ச்சி கண்டது.
- இண்டஸ்இந்த் வங்கி 3.54 சதவீதமும், கோல்இந்தியா 2.82 சதவீதமும் வீழ்ச்சிகண்டன.
வர்த்தக முடிவு
'RAISE 2020'
- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது இந்தியாவில் முதல் உலகளாவிய செயற்கை நுண்ண றிவு (AI) உச்சிமாநாட்டை (RAISE-2020) நடத்தவுள்ளது.
- COVID-19 பாதிப்புகள் அதிகரித்துவரும் காரணத்தால் இவ்வுச்சிமாநாடு வரும் அக்.5-6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- ஆரம்பத்தில், ஏப்ரல் மாதத்தில் இந்த உச்சிமாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. இந்த உச்சிமாநாட்டில் கல்வியாளர்கள், AI துளிர் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (HAL)
- ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (HAL) தயாரிக்கும் 83 தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு, பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கான கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
- இலகுரக போர் விமானமான தேஜாஸை, பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பின் கீழ் இயங்கிவரும் போர் விமானங்கள் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது.
- ஏற்கனவே 43 போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான முந்தைய ஆணையுடன் இந்தப் புதிய கொள்முதல் ஆணையும் இணைந்துள்ளது.