Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 27th August 19 Content

துராந்த் கோப்பை

  • 129வது துராந்த் கோப்பை – கேரளா அணி வெற்றிகொல்கத்தாவின் உப்பு ஏரி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து இறுதி ஆட்டத்தில் கோகுலம் கேரள FC அணியானது மேற்கு வங்காளத்தின் மோகன் பாகன் அணியை வீழ்த்தி 2019 ஆம் ஆண்டின் துராந்த் கால்பந்துக் கோப்பையை வென்றது.
  • கோகுலம் கேரளா FC அணியின் அறிமுகத் தொடர் இதுவாகும்.
  • கோகுலம் கேரளா FC முன்னணி மற்றும் மார்கஸ் ஜோசப் ஆகியோரால் முறையே தங்கப் பந்து மற்றும் தங்கக் காலணி விருது வெல்லப்பட்டது.
  • தங்கக் கையுறையானது அதே அணியைச் சேர்ந்த கோல்கீப்பரான CK உபாய்டு என்பவரால் வெல்லப்பட்டது.
  • துராந்த் கோப்பை அல்லது துராந்த் கால்பந்துத் தொடர் என்பது 1888 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு கால்பந்துப் போட்டித் தொடராகும்.
  • இது ஆசியாவின் மிகப் பழமையான கால்பந்துத் தொடராகும். இது உலகில் 3வது மிகப் பழமையான கால்பந்துத் தொடராகும்.
  • இது துராந்த் கால்பந்து தொடர் சமூகம் மற்றும் ஓசியன்ஸ் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.

கிரிக்கெட்

  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாவது மாற்று வீரர்
  • 2வது ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மர்னுஸ் லபூஸ்சக்னே என்பவர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஏற்பட்ட மூளை பாதிப்பின் காரணமாக அவருக்குப் பதிலாக களமிறங்கும் முதலாவது மாற்று வீரராக உருவெடுத்துள்ளார்.
  • மேலும் இவர் டெஸ்ட் தொடரில் பேட்டிங் செய்யும் முதலாவது மாற்று வீரராகவும் உருவெடுத்துள்ளார்.
  • இது போன்ற ஒரு நடவடிக்கைக்கு சர்வதேசக் கிரிக்கெட் ஆணையம் 2019 ஆம் ஆண்டு ஜூலை அன்று ஒப்புதல் வழங்கியது.

பொறியாளர் விருது

  • சிறந்த பொறியாளர் விருது – பிரபாகர் சிங்
  • பொறியாளர்களின் நிறுவனத்தினால் (இந்தியா) 2019 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற சிறந்த பொறியாளர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இவரின் புகழ்பெற்ற மற்றும் சிறந்த சேவைக்காக இவர் இந்த விருதுக்குத் தேந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று அனுசரிக்கப்படவிருக்கும் பொறியாளர்கள் தினத்தின் போது புது தில்லியில் இவருக்கு அந்த விருது வழங்கப்படவிருக்கின்றது.

இந்தியாவின் காற்றுத் தரக் கண்காணிப்பு உணர்விகள்

  • காற்று தர கண்காணிப்பு உபகரணங்களுக்குச் சான்றளிக்குமாறு அறிவியல் சார் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் - தேசிய இயற்பியல் ஆய்வகத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 102 நகரங்களில் நுண் துகள்களின் மாசுபாட்டை 20% - 30% அளவாகக் குறைப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் தேசியத் தூய்மைக் காற்றுப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது நைட்ரஸ் ஆக்ஸைடுகள், ஓசோன் மற்றும் நுண் துகள்களின் அளவைக் கண்காணிக்கக் கூடிய குறைந்த விலையிலான காற்றுத்தர கண்காணிப்புக் கருவிகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது.
  • தில்லியானது அதிக எண்ணிக்கையிலான காற்றுத்தர உணர்விகளைக் (ஏறத்தாழ 35) கொண்டுள்ளது.

TM பசின் – வங்கி மோசடி வாரியம்

  • ரூ. 50 கோடிக்கும் மேலான வங்கி மோசடிகளை ஆய்வு செய்வதற்காகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரைப்பதற்காகவும் வங்கி மோசடிகளுக்கான ஆலோசனை வாரியத்தை (ABBF - Advisory Board for Banking Frauds) மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC - Central Vigilance Commission) அமைத்துள்ளது.
  • நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்த வாரியமானது முன்னாள் கண்காணிப்பு ஆணையரான TM பசின் தலைமையில் செயல்படவிருக்கின்றது.
  • ரூ.50 கோடிக்கும் மேல் உள்ள அனைத்து வங்கி மோசடி வழக்குகளையும் வங்கிகள் ABBFற்குப் பரிந்துரைக்கும்.
  • இது மற்ற விசாரணை அமைப்புகள் விசாரிப்பதற்கு முன்பு அனைத்துப் பெரிய வங்கி மோசடி வழக்குகளை விசாரணை செய்யும் முதல்நிலை அமைப்பாக செயல்பட விருக்கின்றது.

RBI

  • RBIயிலிருந்து 1.76 இலட்சம் கோடி நிதி மத்திய அரசிற்கு மாற்றம்
  • இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India - RBI) ஆளுநரான சக்திகாந்த தாஸ் தலைமையிலான RBI வாரியமானது தன்னிடம் உள்ள ஈவுத் தொகை மற்றும் உபரி நிதியான 1.76 டிரில்லியனை மத்திய அரசிற்கு வழங்க முடிவு செய்துள்ளது.
  • “உபரி நதியை மத்திய அரசிற்கு வழங்கலாம்” என்ற RBIயின் முன்னாள் ஆளுநரான பிமல் ஜலன் தலைமையிலான ஒரு உயர்நிலைக் குழுவின் பரிந்துரையை RBI வாரியம் ஏற்றுக் கொண்ட பின்பு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ரிசர்வ் வங்கி இதுவரை வழங்கியுள்ள மிக உயர்ந்த தொகை ரு.65,896 கோடியாகும் (2014-15 ஆம் ஆண்டில்).
  • இந்த மாற்றமானதுபொருளாதாரத்திற்கு ஒரு நிதி ஊக்கமாகச் செயல்படும்.
  • நிதிப் பற்றாக்குறை இலக்கை எதிர் கொள்ள அரசிற்கு உதவும்.

45வது G7 மாநாடு – பியாரிட்ஸ், பிரான்சு

  • 45வது G7 மாநாடானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 26 வரை பிரான்சில் உள்ள பியாரிட்சில் நடைபெற்றது.
  • G7 உறுப்பு நாடுகளின் (கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா) தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
  • இம்மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா உள்ளிட்ட 9 நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப் பட்டனர். அந்த நாடுகளாவன : ஆஸ்திரேலியா, பர்கினா பசோ, சிலி, எகிப்து, ருவாண்டா, செனகல், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்பெயின்.

மைக்ரோசிப் பொருத்தப்பட்ட சிப்பிப் பாறை நாய்கள் – நெல்லை மருத்துவக் கல்லூரி

  • திருநெல்வேலியில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது சிப்பிப் பாறை என்ற நாட்டு நாய் இனங்களின் தரவுத் தளத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது.
  • இது போன்ற 100 நாய்களுக்கு நாட்டிலேயே முதல்முறையாக மைக்ரோசிப்களைப் பொருத்தியுள்ளது.
  • இந்தியாவின் கென்னல் சங்கத்தின் (Kennel Club of India - KCI) உறுப்பினர்களாக இருக்கும் நாய்களுக்கு மைக்ரோசிப் கட்டாயமானதாகும்.
  • இது நாட்டில் உள்ள உயரிய நாய் இனங்களுக்கு இணையாக சிப்பிப் பாறை இனத்திற்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
  • சிப்பிப் பாறை நாயானது வேட்டை நாய் இரத்தத்தின் (கேனைன்) “உலகளாவிய வழங்குநர்” என்ற புகழையும் பெற்றுள்ளது.

மின்சாரப் பேருந்துகள்

  • முதல்முறையாக மின்சாரப் பேருந்துகள் – தமிழ்நாடு
  • காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாநில அரசு பேட்டரியினால் (மின்கலன்) இயங்கக் கூடிய மின்சார குளிர்சாதனப் பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தப் பேருந்துகள் தொடக்கத்தில் சென்னையில் உள்ள பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தினால் குறிப்பிடப்பட்ட வழித் தடங்களில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட விருக்கின்றன.
  • 32 இருக்கைகளைக் கொண்டுள்ள இந்தப் பேருந்துகள் புவியிடங்காட்டி, தீ கண்காணிப்பு மற்றும் தீயணைப்பு அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஒருமுறை மின்னேற்றினால் இந்தப் பேருந்துகள் 120 கிலோ மீட்டர் வரை செல்லும்.
  • இந்தப் பேருந்துகள் அசோக் லைலண்ட் நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளன.
  • மின்சாரப் பேருந்துகளைத் தயாரிப்பதற்காக இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட சி -40 நகரங்கள் காலநிலைத் தலைமைக் குழு என்ற அமைப்புடன் தமிழ்நாடு மாநில அரசு 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
  • விரைவில் இந்தியாவில் மின்சார வாகனங்களை வேகமாக ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் உற்பத்தி செய்தல் என்ற திட்டத்தின் இரண்டாம் நிலையின் கீழ் (FAME India Scheme) தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கியமான நகரங்களில் இது போன்ற 525ற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

மத்தியப் பிரதேசம்

  • மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் விவசாயிகளுக்கான செழிப்பு பற்றிய அமர்வு புதுடில்லியில் மத்திய வேளாண் அமைச்சர் ஸ்ரீ நரேந்திர சிங் தோமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
  • கண்டறியும் கருவிகள், பல்வேறு ஐ.சி.ஏ.ஆர் நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் மற்றும் 8 ஐ.சி.ஏ.ஆர் மொபைல் செயலிகள் ஆகியவற்றை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

டிஜிட்டல் நூலகம்

  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் கல்விக்கான தேசிய மிஷனின் கீழ், (என்.எம்.இ.சி.டி) தேசிய டிஜிட்டல் நூலகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஒற்றை சாளர தேடல் வசதியுடன் கற்றல் வளங்களின் கட்டமைப்பை உருவாக்குகிறது.

ஜவுளி சுற்றுலா

  • மேகாலயாவில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி மேகாலய முதலமைச்சர் கான்ராட் கே சங்மா முன்னிலையில், ரி போய் மாவட்டத்தின் நோங்போவில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளி சுற்றுலா வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தொலைக்காட்சி சேனல்-பள்ளி மாணவர்கள்

  • பள்ளி மாணவர்களுக்காக 24 மணி நேர பிரத்யேக தொலைக்காட்சி சேனலை தமிழகத்தில் கல்வித் துறை தொடங்கியுள்ளது.
  • சிவில் சர்வீசஸ், பாதுகாப்புப் படைகள் மற்றும் வங்கிகளில் சேருவதற்கான நேர்காணல்கள் மற்றும் ஊக்கத் திட்டங்கள் தொலைக்காட்சியால் தொழில் வழிகாட்டுதலின் ஒரு வடிவமாக ஒளிபரப்பப்படும்.

இராணுவ நல்லெண்ண பள்ளிகள்

  • ஜம்மு-காஷ்மீரில், நல்லெண்ண முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய இராணுவம் 45 இராணுவ நல்லெண்ண பள்ளிகளை நிறுவியுள்ளது, இதில் தற்போது 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த இராணுவ நல்லெண்ண பள்ளிகளில்,
  • குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக தங்கள் படிப்பைத் தொடர அனுமதி வழங்கப்படுகிறது.

காங்கோ ஜனநாயகம்

  • காங்கோ ஜனநாயகக் குடியரசில், புதிய ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெக்கெடி பதவியேற்ற ஏழு மாதங்களுக்குப் பிறகு ஒரு கூட்டணி அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 1960 ல் இந்த கனிம வளமான நாடு பெல்ஜியத்திடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து காங்கோ ஜனநாயகக் குடியரசின் முதல் அமைதியான அதிகார மாற்றத்தைக் குறிக்கும் தேர்தல்களில் திரு சிசெக்கி வெற்றி பெற்றார்.

மித்ரா பள்ளம் - சூரிய மண்டலம்

  • சந்திரயான் -2 இன் ஆர்பிட்டர் அல்லது தாய் விண்கலம் சந்திரனில் ஒரு பள்ளத்தை ஸ்கேன் செய்துள்ளது, இதற்கு 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற வானொலி இயற்பியலாளர் சிசிர் குமார் மித்ராவின் பெயரிடப்பட்டுள்ளது.
  • 25 டிகிரி கெல்வின் (மைனஸ் 248 டிகிரி செல்சியஸ்) கொண்ட வடக்கு துருவப் பகுதி சூரிய மண்டலத்தின் குளிரான இடங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது.

சமூக வானொலி சம்மேளன் 2019

  • ஏழாவது சமூக வானொலி சம்மேளன் 2019 ஆகஸ்ட் 27 முதல் 29 வரை புதுதில்லியில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பவனில் நடைபெறும்.
  • தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் சம்மேளன் , நாடு முழுவதும் உள்ள அனைத்து செயல்பாட்டு சமூக வானொலி நிலையங்களின் பங்கேற்பையும் காணவுள்ளது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு

  • சமூக நீதித் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO,) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • NAPDDR & NACO இன் திட்டங்களில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக NACO மற்றும் போதைப்பொருள் தேவை குறைப்புக்கான தேசிய செயல் திட்டம் (NAPDDR) இன் இலக்கு குழுக்களை இணைப்பது இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

தேசிய தொழில்முனைவோர் விருதுகள்

  • தேசிய தொழில்முனைவோர் விருதுகளின் 4 வது பதிப்பு இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும்.
  • மொத்தம் 45 சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விருதுகள் - 39 நிறுவன விருதுகள் மற்றும் தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பாளர்களுக்கான 6 விருதுகள் வழங்கப்படும்.
  • தேசிய தொழில்முனைவோர் விருதுகளுக்கு தொழில் முனைவோர் பரிந்துரைகளை திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் கோரியுள்ளது.
Share with Friends