Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 27th March 20 Notes


கடன், வட்டி வசூலுக்குத் தடை - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

  • தமிழகத்தில் மார்ச் 31 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • கர்ப்பிணி பெண்கள் நீரிழிவு காசநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வட்டியை வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • சந்தைகளில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் விசாலமான இடங்களில் கடைகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறி பழ வகைகளை விற்கும் போது 3 அடி தூரம் மக்களிடையே இடைவெளி இருக்க வேண்டும்.
  • ஊரடங்கு உத்தரவினால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்க்கவும், மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் தடையின்றிக் கிடைக்கவும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் தலைமையில் இப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
  • அவசர உதவி தேவைப்படுவோர் 108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

'கொரோனா'வுக்கு 70 வகை மருந்து

  • 'கொரோனா' தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விட, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும், 70 வகையான மருந்துகளை பயன்படுத்துவது, சிறந்த பலனை தரும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • மனித உடம்பில் உள்ள, 332 புரதங்களை, கொரோனா வைரஸ் புரதங்கள், நேரடியாக தாக்குவது தெரிய வந்தது.
  • இதையடுத்து, நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றுக்கு வழங்கப்படும், 70 வகையான மருந்துகள், கொரோனா சிகிச்சைக்கு சிறந்த பலனை தரும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
  • 'தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விட, இந்த மருந்துகளை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் பணியில் ஈடுபடுவதே, இப்போதைக்கு சிறந்த வழி' என, அவர்கள் தெரிவித்தனர்.

புதிய கருவி கண்டுபிடிப்பு

  • லண்டன்: பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரசை கண்டுபிடிக்கும், 'ஸ்மார்ட் போன்' அளவிலான கருவியை உருவாக்கிஉள்ளனர்.
  • இதில், தொண்டை பகுதியில் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரியை வைத்தால், 50 நிமிடங்களில், கொரோனா குறித்த முடிவுகளை வழங்கும் என, கூறுகின்றனர்.
  • இந்த கருவியில், ஒரே நேரத்தில், 13 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம்.

கேரளத்தில் தொற்றுநோய் தடுப்புச் சட்டம்

  • கேரளாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த, 'கேரள எபிடமிக் டிஸீசஸ் ஆடினஸ் - 2020' என்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த, அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும், புதிய சட்டத்தை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.
  • இதற்கு 25ம் தேதி அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
  • பொதுமக்களும், தனித்த குழுக்களும், தனி நபர்களும் நடத்தும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த, அரசுக்குக் கூடுதல் அதிகாரத்தை இந்த சட்டம் வழங்கும்.
  • இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு மாநில எல்லைகளை மூட முடியும்.
  • பொது இடங்களிலும், மத வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் கூடுவதை தடுக்க முடியும்.
  • அரசு அலுவலகங்கள், கல்வி சாலைகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், கடைகள், உணவகங்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியும்.
  • விதி மீறுபவர்கள் மீது, போலீஸ் நேரடியாக வழக்குப்பதிய முடியும்.
  • விரைவில் சட்டம் அமலுக்கு வரவுள்ளது.

வைரஸ் பாதிப்புக்கு ரூ.1,70,000 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு

  • தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அவர்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு வைரஸ் பாதிப்பு நடவடிக்கைகளுக்காக 1,70,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ய யோஜனா திட்டத்தின்கீழ்
    • 80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.மேலும் அவர்களுக்கு அடுத்து வரும் 3 மாதங்களுக்கு மேலும் கூடுதலாக 5 கிலோ வழங்கப்படும்.
    • இது இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1 கிலோ பருப்பு வழங்கப்படும்.
    • இத்திட்டத்தின்கீழ் வரும் சுய உதவிக்குழுக்களுக்குத் தீன் தயாள் கடன் அடமானம் எதுவும் இல்லாமல் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் கடன் தற்போது 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அளவுக்குக் காப்பீடு வழங்கப்படும்.
  • ஜந்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூ.500 வழங்கப்படும். இதனால் 20 கோடி பெண்கள் பயனடைவார்கள்.
  • கிசான் யோஜ்னா திட்டத்தின்கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு விவசாயிகளுக்கு ரூ.2000 என அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
  • பிதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். இதனால் 8.3 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.
  • 60 வயதைக் கடந்தவர்கள் விதவைகள், ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும்.
  • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (PF) ஊழியர்கள் 75% பணம் அல்லது தங்களின் 3 மாத சம்பளத்தை எடுத்துக்கொள்ளலாம்.

காமராஜா் துறைமுகம் - சென்னைத் துறைமுகம்

  • மத்திய அரசின் மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றான ‘முன்மாதிரி துறைமுகம்’ என்றழைக்கப்பட்டு வரும் எண்ணூா் காமராஜா் துறைமுகத்தின் மீதான தனது பங்குகள் அனைத்தையும் சென்னைத் துறைமுகம் வாங்கியுள்ளது.
  • கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக ஜி.கே.வாசன் இருந்தபோது எண்ணூா் துறைமுகத்தின் பெயா் காமராஜா் துறைமுகம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டது.
  • சென்னைக்கு அருகே எண்ணூா் துறைமுகம் கடந்த 2001-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  • பெருந்துறைமுகங்கள் அனைத்தும் அறக்கட்டளை சட்டத்தின்படி செயல்பட்டு வந்த நிலையில் எண்ணூா் துறைமுகம் மட்டுமே நிறுவனங்கள் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இத்துறைமுகத்தின் 67 % பங்குகளை மத்திய அரசும், 33 % பங்குகளை சென்னைத் துறைமுகமும் வைத்துள்ளன.
  • துறைமுகத்தின் தற்போதைய மொத்த நிலம் சுமாா் 2,700 ஏக்கராக உள்ளது.
  • சுமாா் ரூ.300 கோடி நேரடி முதலீட்டில் தொடங்கப்பட்ட துறைமுகத்தின் தற்போதைய மாா்க்கெட் மதிப்பீடு தோராயமாக சுமாா் ரூ.30 ஆயிரம் கோடி (நிலங்கள், முதலீடு, திறன் மதிப்பு உட்பட) இருக்கும் என கூறப்படுகிறது.
  • காமராஜா் துறைமுகத்தின் மொத்த மதிப்பு (கணக்குப் புத்தக மதிப்பீட்டின்படி) ரூ.3,560 கோடி எனவும் இதில் மத்திய அரசின் பங்கு ரூ. 2,380 கோடி எனவும் தெரிவித்திருந்தது.
  • இந்நிலையில், மத்திய அரசின் பங்கான 67 சதவீதத்தையும் சென்னைத் துறைமுகமே வாங்கி காமராஜா் துறைமுகத்தின் முழு உரிமையாளராகி உள்ளது.
  • இந்நிலையில், இதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் மத்திய அரசின் பங்குத் தொகையான ரூ.2,380 கோடிக்கான நிதியை முதலீடுகள் மற்றும் சொத்துப் பாதுகாப்புத் துறையிடம் சென்னைத் துறைமுகம் அளிக்க உள்ளது.

அவசரக்கால கடன் திட்டங்கள்:இந்தியன் வங்கி

  • கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலில், வாடிக்கையாளா்களுக்கு 5 வகையான அவசரக்கால கடன்களை வழங்க இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது.
  • பெருநிறுவன வாடிக்கையாளா்களுக்காக இண்ட்-கொவைட் கடன் திட்டம்
  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக இண்ட்-எம்எஸ்இ கொவைட் கடன் திட்டம்
  • சுய உதவிக் குழுக்காக எஸ்ஹெச்ஜி-கொவைட் (சஹாயா) கடன் திட்டம்
  • மாதச் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளா்களுக்காக இண்ட்-கொவைட் கடன் திட்டம்
  • ஓய்வூதியதாரா்களுக்காக மற்றொரு அவசரக்கால கடன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நீட் தேர்வு ஒத்திவைப்பு

  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3ஆம் தேதி நடைபெறவிருந்த மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • மேலும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா

  • கொரோனா தொற்றால் சீனா, அமெரிக்கா, ஐரோப்பியா, பிரிட்டன், இந்தியா, இத்தாலி என பல நாடுகள் பெரும் சவால்களை சந்தித்து உள்ளது.
  • பிரிட்டனில் இதுவரை 11 ஆயிரத்து 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நாட்டில் 578 பேர் பலியாகி உள்ளனர்.
  • இந்நிலையில் கடந்த வாரத்தில் பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு இந்த தொற்று உறுதியானது.
  • இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆஸி, பிரிட்டன் நாடுகளில் 6 மாத ஊரடங்கு

    பிரிட்டன்

  • பிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா தாக்கத்தை விரைவில் கட்டுப்படுத்தலாமென பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளார்.

  • ஆஸ்திரேயா

  • வெளிநாடு வாழ் ஆஸ்திரேலியர்கள் நாட்டுக்குள் நுழைந்து 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர். பின்னர் அவர்களுக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கக்கப்படுவர்.
  • இதனை 6 மாதங்களுக்கு கட்டாயமாகக் கடைபிடிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
Share with Friends