Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 29th December 19 Content

அஜ்விக்கா -தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் ’

  • இது 2011 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் ‘அஜீவிகா - தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் (என்.ஆர்.எல்.எம்)’ என தொடங்கப்பட்டது. இது 2015 இல் DAY-NRLM என மறுபெயரிடப்பட்டது.

மலாலா: ஐநா கவுரவிப்பு

  • பெண் கல்விக்காகப் போராடி வரும் மலாலாவை, உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண் என்று ஐநா சபை கவுரவித்துள்ளது.
  • பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.
  • 15 வயது சிறுமியாக இருந்த அவரை கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயர் தப்பினார் மலாலா.
  • உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்தார் மலாலா. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது.
  • உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமையும் இவரையே செரும்.

நல்லாட்சி தினம்

  • மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25-ம் தேதியை தேசிய நல்லாட்சி தினமாக 2014 ல் அறிவித்தார், மோடி.
  • தரவுகளின் இருப்புநிலையையும், மக்கள் மையமாகவும் எளிதில் புரிந்துகொள்ளும்படியாகவும், அந்தந்தத் துறையின் வளர்ச்சி கருதியும் வரையறுக்கப்பட்டு, நீதி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், விவசாயம், மருத்துவ வசதி போன்ற 10 பிரிவுகள் பிரிக்கப்படும்.
  • ஒவ்வொன்றுக்கும் 1 மதிப்பெண் வழங்கி, அதை ஒன்று முதல் ஒன்பது அடிப்படை அம்சங்களாகக் கொண்டு மதிப்பெண்ணை புள்ளிவிகிதமாகப் பிரித்து, அவற்றுக்கு தனித்தனியாகச் செயல்பாடுகள் மூலம் மதிப்பிடப்படும்.
  • மொத்தமும் கூட்டி, வரும் மதிப்பெண்ணை வைத்து உருவாக்கப்படும் மாநிலங்களின் ஸ்கோர் கார்டுதான் GGI எனப்படும் நல்லாட்சி வழங்கும் மாநிலங்கள் பட்டியலின் வரையறைக் குறிப்பேடு.

‘அடல் சுரங்கப்பாதை’

  • இமாசலபிரதேச மாநிலத்தின் மணாலியையும், லடாக்கின் லே-வையும் இணைக்கும் வகையில், ரோதங் பாசுக்கு அடியில் வாகன சுரங்கப்பாதை அமைக்க வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது முடிவு செய்யப்பட்டது.
  • தற்போது, இந்த வாகன சுரங்கப்பாதை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதற்கு வாஜ்பாயின் பெயர் சூட்டும் நிகழ்ச்சி, டெல்லியில் நடந்தது.
  • அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, “ரோதங் சுரங்கப்பாதையானது இனிமேல் ‘அடல் சுரங்கப்பாதை’ என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார்.
  • இந்த திட்டம், பிராந்தியத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடும் என்றும், சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
  • இப்பாதை, 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 8¾ கி.மீ. நீளம் கொண்டது. உலகிலேயே நீளமான வாகன சுரங்கப்பாதை இதுவே ஆகும்.
  • இந்த பாதையால், மணாலி-லே இடையிலான தூரம் 46 கி.மீ. குறையும் என்று ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"மிக் - 27 "

  • இந்திய விமானப் படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய மிக் - 27 ரக போர் விமானங்களுக்கு நேற்றுடன் ஓய்வு வழங்கப்பட்டன. அவற்றுக்கு விமானப்படை வீரர்கள் பிரியாவிடை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
  • இந்திய விமானப்படையில் 1985-ம் ஆண்டு மிக் - 27 ரக போர் விமானங்கள் சேர்க்கப்பட்டன. இந்த போர் விமானங்கள் முதலில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்தன. பின்னர், இந்தியாவின் ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்' நிறுவனமே இந்த விமானங்களை கட்டமைக்க தொடஙகியது.

வயா வந்தனா யோஜனா

  • பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா ஒரு முறை மட்டுமே பிரீமியம் செலுத்தும் ஓய்வூதிய திட்டமாகும். இந்த ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதியம் பெறுவது அல்லது கொள்முதல் விலை ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
  • அனைத்து புதிய பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா 2017 ஆம் ஆண்டின் 4 ஆம் தேதி தொடங்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி வரையும் விற்பனை செய்யப்படும்.
  • இது ஒரு அரசு உதவி பெரும் மானிய ஓய்வூதிய திட்டமாகும் இது ஆண்டுக்கு 8 சதவிகிதம் உறுதிசெய்யப்பட்ட வருவாயை அளிக்கிறது, இது வாழும் ஓய்வூதியதாரருக்கு 10 வருடங்கள் காலவரையில் கொடுக்கப்படுகிறது.
  • இந்த திட்டம் சரக்குகள் மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு பெறுகிறது.

ஓமான் வளைகுடா

  • ஓமான் வளைகுடா அல்லது ஓமான் கடல் பின்னர் பாரசீக வளைகுடா இயங்கும் ஹோர்முஸ் ஜலசந்தி அராபிய கடல் பகுதியை இணைக்கும் ஒரு நீரிணை ஆகும்.
  • இது வடக்கில் ஈரான் மற்றும் பாகிஸ்தான், தெற்கில் ஓமான் மற்றும் மேற்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் எல்லையாகும்.
  • வடமேற்கு அரேபிய கடலில், கிழக்கு-மேற்கில் சுமார் 550 கி.மீ., அதிகபட்ச அகலம் சுமார் 300 கி.மீ. வடமேற்கு ஹோர்முஸ் ஜலசந்தி பாரசீக வளைகுடா தொடர்கிறது.
  • பந்தர் அப்பாஸ், ஈரான் பக்கத்தில் ஜெர்ஸ்க், ஓமான் பக்கத்தில் மஸ்கட், சுல் மற்றும் பிற முக்கிய துறைமுகங்கள் உள்ளன.

லோசர் விழா

  • லடாக்கி அல்லது திபெத்தியப் புத்தாண்டை அனுசரிப்பதற்காக லடாக் ஒன்றியப் பிரதேசமானது லோசர் விழாவைக் கொண்டாடியது.
  • 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய லோசர் திருவிழாவானது நாட்டில் இமயமலை பரவியுள்ள அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு காலங்களில் அனுசரிக்கப் படுகின்றது.

Share with Friends