வங்கிகள் இணைப்பு - ஏப்ரல் 1
- வங்கிகள் இணைப்பு வரும் ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.
- நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் 4 முக்கிய இணைப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
- பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்படுகின்றன.
- கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது.
- இணைப்புக்கு பிறகு இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் 4ஆவது மிகப்பெரிய வங்கியாக கனராவங்கி உயரும்.
- இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது.
- யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன.
- இந்தியாவை 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்றுவதற்கு பெரிய வங்கிகள் தேவைப்படுகின்றன.
- கடந்த ஆண்டு தேனா வங்கியும், விஜயா வங்கியும் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன. அதற்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகள் அனைத்தும் அதனுடன் இணைக்கப்பட்டன.
வங்கிகள் இணைப்பு:
ஸொமாட்டோவுடன் கூட்டணி கேரள அரசு
- கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வீட்டுக்கே கொண்டு சேர்க்கும் முயற்சியை கேரள அரசு மேற்கொண்டுள்ளது.
- இதற்காக கேரள அரசு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமாட்டோவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்களின் வீடுகளுக்கே கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
- முதல்கட்டமாக எர்ணாகுளம் பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- ஆன்லைன் மூலம் மக்கள் பொருளை முன்பதிவு செய்தால், அவை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அடுத்து இத்திட்டம் கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த புதிய சிகிச்சை - இந்திய மருத்துவர்
- உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
- கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரு சிறந்த சிகிச்சையைக் கண்டுபிடித்துள்ளதாக கர்நாடக மாநிலம் பெங்களூரு புற்றுநோய் நிபுணர் டாக்டர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார்.
- இது கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.
- கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவற்காக ஊசி மூலம் இரண்டு ரசாயனங்கள் மற்றும் வேறு சில சைட்டோகைன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
- இது வைரஸுடன் வலுவாகப் போராடும்.
- ஆனால் அது தடுப்பூசி அல்ல.
- இந்த தயாரிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
- இதன் முதல் சிகிச்சை முறை இந்த வார இறுதிக்குள் பரிசோதனைக்குத் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சிகிச்சை :
’கோவிட்’ புலிக்குட்டிக்கு
- மெக்சிக்கோவில் சரணாலயம் ஒன்றில் பிறந்த புலி குட்டிக்கு கோவிட் என பெயரிடப்பட்டுள்ளது.
- மெக்சிக்கோவின் கோர்டபா நகரில் பயோ ஜூ என்ற தனியார் சரணாலயம் உள்ளது.
- இந்த சரணாலயத்தில் உள்ள 8 வயது பெண் புலி கடந்த 14-ஆம் தேதி குட்டி ஈன்றது.
- இந்த குட்டிக்கு கொரோனா வைரஸை நினைவூட்டும் வகையில் கோவிட் என பெயர்சூட்டப்பட்டுள்ளது.
தனி மருத்துவ வார்டு - ரயில் பெட்டி
- கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்திய ரயில்வே உதவியுடன் ரயில் பெட்டி தனி மருத்துவ வார்டு ஆக மாற்றப்ப்பட்டுள்ளது.
- இந்தப் பெட்டி தற்போது புது டெல்லி ரயில் டெப்போவில் நிறுத்தப்பட்டுள்ளது.
- பெட்டியில் நடுவில் இருக்கும் படுக்கை நீக்கப்பட்டுள்ளது. கீழ்படுக்கை உள்ள பிளைவுட் பலகையில் மற்றொரு பலகை செருகப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளது.
- மொத்தம் ஒரு பெட்டிக்கு 10 தனித்தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- மருத்துவ உபகரணங்கள் பொருத்துவதற்காக 220 வோல்ட் மின்சார பிளக்பாயின்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
- ஒரு பெட்டிக்கு மொத்தம் 4 கழிப்பறைகள், 2 குளியல் அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு குளியல் அறையிலும் ஒரு ஹேண்ட் ஷவர், வாளி, கோப்பை வழங்கப்பட்டுள்ளது.
- குடிதண்ணீருக்காக ஒவ்வொரு பெட்டியிலும் 4 பாட்டில்கள் வைக்கும் வைக்கும் வகையில் ஹோல்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
- மேலும், பெட்டிகளில் மருத்துவ ஆலோசனை அறை, மருத்து அறை, கேன்டீன் ஆகியவை இருக்கும்.
- தெற்கு ரயில்வே தயாரித்த பெட்டியில் செயற்கை சுவாசக் கருவிகள், படுக்கை, ட்ராலி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன”.
- பல்வேறு மண்டலங்க ஏ.சி.அல்லாத பெட்டிகளைத் தனித்தனி வார்டுகளாக மாற்றும் பணிகளைச் செய்து வருகின்றன.
வடக்கு ரயில்வே
5 நிமிடங்களில் கரோனா பரிசோதனை
- அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வக நிறுவனமான அபாட் லெபாரட்டரீஸ், 5 நிமிடங்களில் கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பதைக் கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளது,
- இதுதொடர்பாக அபாட் தலைவரும், சிஓஓவுமான ராபர்ட் ஃபோர்ட் கூறுகையில், ''சிறிய டோஸ்டர்" இயந்திரத்தின் அளவில் இது இருக்கும்.
- மூலக்கூறு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
- தொற்று இல்லையென்றாலும் 13 நிமிடங்களில் முடிவுகள் தெரியும்.
ரோபோ சானிடைசர்
- சித் சாங்வி என்ற மாணவர் 30 செமீ தூரத்திலிருந்து கையை நீட்டினாலே சானிடைசரை அளிக்கும் புதிய ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளார்.
- ஹேண்ட் சானிடைசர் பாட்டிலை பலரும் தொட்டுத் தொட்டு பயன்படுத்துவதால் கரோனா பரவ வாய்ப்புள்ளது.
- இந்த சானிடைசர் அளிக்கும் ரோபோவை பயன்படுத்துவதால் கொரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளது.
Corona Kavach APP
- கொரோனா வைரஸை டிராக் செய்ய கொரோனா கவச் (Corona Kavach) எனும் ஆப்பை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
- இது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் (MHFW) இணைந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) உருவாக்கம் பெற்றுள்ளது.
- இந்த ஆப் ஒரு நபரின் ஸ்மார்ட்போன் டேட்டாவை பயன்படுத்தி அவர்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கவும், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவரை நெருங்கும் அபாயம் இருந்தால் எச்சரிக்கவும் செய்கிறது.
- முதலில், ஸ்மார்ட்போனில் தொலைபேசி எண் மூலம் ஆப்பிற்குள் நுழைய வேண்டும். பின்னர் உங்கள் உடல்நிலை, சார்ந்து கேட்கப்படும் கேள்விகளைக் கொண்ட ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.
- இந்த கேள்விகளின் அடிப்படையில், இந்த ஆப் உங்களை வெவ்வேறு வகைகளாக வரிசைப்படுத்தும்.
- பச்சை குறியீடு எனில் நலமாக உள்ளீர் என்று காட்டும்.ஆரஞ்சு குறியீடு எனில் ஒரு மருத்துவரைப் பார்க்க அறிவுறுத்தும்
- மஞ்சள் குறியீடு எனில் நீங்களே தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தும்
- சிவப்பு குறியீடு எனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்று எச்சரிக்கும்.
- ஆப்-ல் கீழே மையத்தில் ஒரு பட்டன் இருக்கும் அதனை அழுத்தினால் அருகில் கொரோனா பாதித்தவர்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டால் எச்சரிக்கும் .
- இந்த ஆப்-ஐ பாதிக்கப்பட்டவரும் வைத்திருந்தாலோ, அல்லது பதிவு செய்திருந்தாலோதான் நமக்கு எச்சரிக்கும்.
கொவைட்-19: ரூ.51 கோடி வழங்கியது பிசிசிஐ
- கொவைட்-19 பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிரதமா் பேரிடா் நிவாரண நிதிக்கு ரூ.51 கோடி நிதியை வழங்கியுள்ளது.
- பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி, செயலாளா் ஜெயா ஷா, இதர நிா்வாகிகள் மற்றும் மாநில சங்கங்கள் இணைந்து ரூ.51 கோடி நிவாரண நிதியை வழங்க தீா்மானித்தனா். இதன் மூலம் கரோனா பாதிப்பை எதிா்த்து போராட உதவியாக அமையும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு: ரூ.1,500 கோடி வழங்குகிறது டாடா குழுமம்
- கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகளுக்காகவும் ரூ.1,500 கோடியை வழங்க டாடா குழுமம் முடிவெடுத்துள்ளது.
- டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ், ரூ.1000 கோடியும் டாடா அறக்கட்டளை ரூ.500 கோடியும் வழங்கவுள்ளன.
- டாடா அறக்கட்டளை அளிக்கவுள்ள நிதியானது, மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கான தற்காப்பு உபகரணங்கள்,
- நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க செயற்கை சுவாசக் கருவிகள், நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட உள்ளது.