இளவரசி மரியா தெரசா - கரோனா வைரஸ்
- ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.
- அவருக்கு வயது 86.
- இதன் மூலம் கரோனா வைரஸால் பலியான முதல் அரச குடும்ப நபர் இவர் ஆவார்.
அம்பிகா யானை
- அமெரிக்காவுக்கு இந்தியக் குழந்தைகள் சார்பில் பரிசாக வழங்கப்பட்டிருந்த அம்பிகா வாஷிங்டன் எனும் யானை, வன உயிரினக் காப்பகத்தில் நேற்று கருணைக் கொலை செய்யப்பட்டது.
- அந்த யானைக்கு வயது 72 ஆகிறது.
- கடந்த 1948-ம் ஆண்டில் கர்நாடக மாநிலம் கூர்க் வனப்பகுதியில் பிறந்த அம்பிகா யானை கடந்த 1961-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது.
- அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஸ்மித்சோனியன் வன உயிரினப் பூங்காவில் இருந்து வந்தது.
- உடல்நலக் குறைவால் அவதிப்பட்டிருந்த யானை நிற்க முடியாமல் சிரமப்பட்டது.
- இதனால் அந்த யானையை கால்நடை மருத்துவர்கள் குழு கருணைக் கொலை செய்தது.
- வட அமெரிக்காவில் வயதான 3-வது ஆசிய யானையாக அம்பிகா இருந்து வந்தது.
convalescent plasma
- convalescent plasma என்று அழைக்கப்படும் இந்த சிகிச்சை முறையில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்களின் உடலிலிருந்து பிளாஸ்மா எனப்படும் குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறமற்ற திரவத்தை எடுத்து தீவிரமாகப் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்றி சிகிச்சை அளிக்கும் ஒரு முறையாகும்.
- கோவிட்-19 மற்றும் தீவிர மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் 5 பேருக்கு பிளாஸ்மா பரிமாற்ற சிகிச்சை அளித்ததில் 5 நோயாளிகளுக்கும் சிகிச்சைக்குப் பிறகு உடல் வெப்ப அளவு 3-4 நாட்களில் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது.
- தொடர் உறுப்பு பாதிப்பு குறைந்தது. உடலில் வைரல் சுமையும் குறைந்து பிளாஸ்மா மாற்று சிகிச்சைக்கு பிறகு 12 நாட்களில் கோவிட்-19 நெகட்டிவ் என்று காட்டியது என தெரிய வந்துள்ளது.
- இதனையடுத்து இந்த பிளாஸ்மா சிகிச்சை புதிய நம்பிக்கையை ஊட்டுவதாக மருத்துவ, ஆய்வு நிபுணர்கள் பலர் கருதுகின்றனர்.
- 2014-ல் எபோலா வைரஸ் தொற்றின் போது இந்த பிளாஸ்மா ட்ரான்ஸ்பியூஷன் சிகிச்சை பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டி 2021 - நேரடி பங்கேற்பு
- உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.
- இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
- கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு இந்த போட்டி நடைபெறும்.
- இந்த நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என்று ஐ.ஓ.சி. ( சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி) முடிவு செய்யப்பட்டது.
epass-ஈ-பாஸ் வழங்கல் திட்டம்
- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டிலிருந்தபடியே வெளியே செல்வோருக்கு ஈ-பாஸ் முறையில் அனுமதி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
- அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், https://epasskki.in/ என்ற இணைய முகவரியை தங்களது ஆண்ட்ராய்டு போனில் டைப் செய்து, அதில் தங்களது செல்போன் எண்ணை டைப் செய்தால், ஓடிபி எனும் ரகசியக் குறியீட்டு எண் கிடைக்கும்.
- பின், எந்தத் துறை, என்ன தேவைக்காக, எங்கு செல்லவேண்டும், விண்ணப்பதாரரின் பெயர், வெளியே செல்வதற்கான ஏதேனும் ஆவணம் இருப்பின் அதன் எண், எங்கிருந்து எங்கு செல்லவேண்டும், எந்த வகையான வாகனம், வாகனப் பதிவெண், அலுவலக போன் எண், மற்றும் விலாசம் ஆகியவற்றை ஆன்லைன் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அனுப்பிய பின், மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வரும்.
- அந்த குறுஞ்செய்தியில் விண்ணப்பதாரரின் விண்ணப்பம் அலுவலர்களால் பரிசீலிக்கப்படுகிறது. எனவே விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட ஆவணங்களுடன் நீங்கள் பயணிக்கத் தயாராக இருக்கும்படி குறிப்பிடப்பட்டிருக்கும்.
- அதையடுத்து அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு, செல்போனிற்கு மீண்டும் அனுமதி ஒப்பம் கிடைத்தவுடன் அதைக் கொண்டு, அவர்கள் பயணிக்கும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது
SC/ST பதவி உயர்வு இட ஒதுக்கீடு நீக்கம்
- SC/ST பணியாளர்களுக்கான பதவி உயர்வு இட ஒதுக்கீட்டை நீக்குவதற்கு உத்தரகண்ட் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கடந்த பிப்ரவரியில், "இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அன்று.
- ஒரு மாநில அரசு விரும்பினால் இட ஒதுக்கீடு வழங்கலாம்;
- இல்லையெனில் அரசை வற்புறுத்த முடியாது" என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- தற்போது உத்தரகண்ட் அரசு அவ்வுத்தரவை அமல்படுத்தியுள்ளது. அது பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை தடைசெய்துள்ளது.
'COVID-19 பொருளாதார மீட்புப்பணிக்குழு
- இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின்போது, 'COVID-19 பொருளாதார மீட்புப்பணிக்குழு அமைப்பதாக அறிவித்தார்.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான இந்தப் பணிக்குழு, 'COVID-19' நோய்த்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவை அளவிடுவதோடு அதற்குத்தகுந்த நடவடிக்கைகளையும் எடுக்கும்.