144 தடை நீக்கம் : விவசாய பணிகள்
- விவசாய பொருட்களின் கொள்முதல் நிறுவனங்கள், உர விற்பனை நிலையங்கள், விவசாய பணிகளுக்கான தடை நீக்கப்படுகிறது என வருவாய் துறை அறிவித்துள்ளது. '
- கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவுப் போடப்பட்டுள்ளது. இதனால், அனைத்து நிறுவனங்கள் மற்றும் பணிகள் மூடப்பட்டன.
- இந்நிலையில், விவசாய பணிகள், உரம், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிப்பு மற்றும் பேக்கிங் நிறுவனங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
- விவசாய பணி இயந்திரங்கள் மாநிலம் கடந்து இயங்கவும் விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது.
‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிகள்’
- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் பிரதமர் மோடி‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிகள்’ என்ற பெயரில் ஒரு நிதியை அறிவித்தார்.
- பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்து ஏராளமானவர்கள் நன்கொடை அளித்தனர்.
- ராணுவத்தின் முப்படை வீரர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளமான ரூ.500 கோடியை பிரதமரின் கொரோனா நிதிக்கு தந்துள்ளனர்.
- டாடா நிறுவனம் ரூ.1,500 கோடி வரை நன்கொடை அளித்தது.
- ரயில் ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை (மொத்தம் ரூ.151 கோடி) இந்த நிதிக்கு அளித்துள்ளனர்.
- அதானி குழுமம், ஜேஎஸ்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் தலா ரூ.100 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
- இந்தி நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடி வழங்கியுள்ளார்.
- ஒரு மாத சம்பளத்தை வழங்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார்.
- சிபிஐ பணியாளர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
- டி-சீரிஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளா் பூஷண் குமாா் அவசர கால நிதிக்கு ரூ.11 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளாா்.
- மகாராஷ்டிர முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளாா்.
ஏவுகணை சோதனை - வடகொரியா
- கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், வடகொரியா இரண்டு ஏவுகணைகளை சோதித்துள்ளது.
- கிழக்காசிய நாடான வடகொரியா, சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
- வடகொரியாவின் கிழக்கு கடற்கரை நகரமான வோன்சானில் இருந்து, இந்த இரண்டு ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன.
- அவை, கொரிய தீபகற்பத்திற்கும், ஜப்பானுக்கும் இடையில் உள்ள கடற்பகுதியில் விழுந்தன.
- சோதிக்கப்பட்ட அந்த ஏவுகணைகள், 230 கி.மீ., தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.
பஞ்சாப், சண்டீகரில் காற்றின் தரக் குறியீடு குறைந்தது
- பஞ்சாப் மற்றும் சண்டீகரில் காற்றின் தரக் குறியீடு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக குறைந்துள்ளது.
- வாகனங்களின் பெருக்கத்தால் பஞ்சாப், சண்டீகர், தில்லி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு அதிகமாக இருக்கும்.
- கொரோனா காரணமாக தற்போது போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் காற்றின் தரக்குறியீடு மிகவும் குறைந்துள்ளது. அதாவது காற்றின் தரம் உயர்ந்துள்ளது.
- முன்னதாக நாடு முழுவதும் 101 நகரங்களில் காற்று மாசுபாடு இருந்த நிலையில், தற்போது 17 நகரங்கள் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021
- ஐஓசி அறிவிப்பு : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்த ஆண்டு தொடர் வரும் ஜூலை 24ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குவதாக இருந்தது.
- அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய விளையாட்டு அரங்கங்கள், சாலைகள், விடுதிகள் என ஏராளமான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
- COVID-19 நோய்த்தொற்றின் காரணமாக அமலில் இருக்கும் இருபத்தொரு நாள் தேசிய ஊரடங்கில், நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக, மத்திய அரசு, சமீபத்தில், 71.7 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண நிதி அறிவிப்பை வெளியிட்டது.
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பல்வேறு நடவடிக்கைகளுள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின்கீழ், முன்னர் ₹182 என்ற அளவில் ஒரு நாள் ஊதியம் பெற்ற ஒரு நபருக்கு, இனி, நாள் ஒன்றுக்கு 1202 என்ற அளவில் ஒரு நாள் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
- இந்த நடவடிக்கையின்மூலம், 136.2 மில்லியன் குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி - ரொக்க இருப்பு வீதம்
- COVID-19 நோய்த்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை கையாளும் விதமாக, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், அண்மைய நிதிக்கொள்கைக்குழு கூட்டத்திற்கு பிறகான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
- மார்ச்.31-ஏப்ரல் 3 முதல் மார்ச் 24-27 வரை, இந்திய ரிசர்வ் வங்கி, நிதிக்கொள்கைக்குழு கூட்டத்தை முன்னெடுத்தது. இதன்சமயம், ரொக்க இருப்பு வீதம் 3 சதவீதமாக குறைக்கப்பட்டது என்றும் ரெப்போ விகிதம் 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது.
- கடன்களுக்கான மாதத்தவணை -களை (EMI) 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்க வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்தது.
ஆளில்லா வானூர்தி
- மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம், COVID-19 நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக வேதிகள் தெளித்து, நகரத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தியுள்ளது.
- இதற்காக, இரண்டு ஆளில்லா வானூர்திகளை இந்தூர் நகராட்சி வாடகைக்கு எடுத்துள்ளது.
- காய்கறி சந்தைகள் மற்றும் நகரத்தின் வீதிகள் போன்ற பொது இடங்களில் வேதிப்பொருட்கள் தெளிப்பதன் மூலம் கிருமிநீக்கம் செய்யப்படுகின்றது.
- மக்களுக்கு தீங்குவிளைவிக்காத வகையிலான வேதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
"Global Macro outlook 2020-21"
- 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சியானது 2.5 சதவீதமாக குறைத்து மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை என்னும் மதிப்பீடு நிறுவனம் அறிவித்துள்ளது.
- அண்மையில் மூடிஸ் வெளியிட்ட, "Global Macro Outlook 2020-21"இன்படி, இந்தியப்பிரதமர் மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு, நாட்டின் வருமானத்தில் பேரளவுக்கு இழப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முன்னதாக இந்நிறுவனம், இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 5.4 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதமாக குறைத்து அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.