Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 30th September 19 Content

கர்பா நடனம்

  • குஜராத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஹெல்மெட் அணிந்து கர்பா நடனம் ஆடப்பட்டது.
  • சூரத் நகரில் நடன குழுவை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி கர்பா நடனம் ஆடினர்.
  • 25 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பாடல் வரிகளுக்கு "கர்பா' நடனமாடி பார்வையற்ற பெண்கள் அசத்தியுள்ளனர்.
  • குஜராத் மாநிலத்தின் நாட்டுப்புற கலையான "கர்பா' நடனம் அந்த மாநிலத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் புகழ் பெற்றது.

எரிசக்தி சுரங்கம்

  • இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7 லட்சம் கோடி முதலீடு செய்யும் என்று இந்தியாவுக்கான அந்த நாட்டின் தூதர் தெரிவித்தார்.
  • இந்தியா, சவுதி அரேபியாவின் கவர்ச்சிகரமான முதலீட்டு மையம் ஆகும்.
  • எரிசக்தி, எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், உள்கட்டமைப்பு, விவசாயம், தாதுக்கள், சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் 100 பில்லியன் டாலரை (சுமார் ரூ.7 லட்சம் கோடி) இந்தியாவில் சவுதி அரேபியா முதலீடு செய்ய பார்க்கிறது.

இதய அறுவை சிகிச்சை

  • மேற்கு வங்காளத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை அளிக்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
  • இதய நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • அந்தவகையில் இந்த தினம் செப்டம்பர் 29-ந்தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  • இதையொட்டி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மாநில மக்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார்.
  • ஆரோக்கியமான உடலுக்கு, ஆரோக்கியமான இதயம் தேவை.
  • மாநில அரசின் ‘சிசு சதி’ திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு இதய நோய் தொடர்பான அறுவை சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது.
  • இதைப்போல மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இதய நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.

வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர் தேர்தல்

  • காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 316 வட்டாரங்களில் வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர் தேர்தல் முதல்முறையாக நடைபெறுகிறது.
  • அக்டோபர் மாதம் 24-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சைலேந்திர குமார் கூறினார்.

பிரம்மோஸ் ஏவுகணை

  • போர் விமானத்தில் இருந்தபடி தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை ரகத்தை இந்திய விமானப் படை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது.
  • விண்ணிலிருந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை ரகம், சுகோய்-30 விமானத்திலிருந்து ஏவி சோதித்துப் பார்க்கப்பட்டது. அந்த சோதனையின்போது, பிரம்மோஸ் ஏவுகணை மிகச் சிறந்த முறையில் இயங்கி, குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது.
  • இந்த ரகத்தைச் சேர்ந்த பிரம்மோஸ் ஏவுகணை சோதித்துப் பார்க்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். அந்த ஏவுகணையை விமானத்துடன் இணைப்பது தொழில்நுட்ப ரீதியில் மிகவும் சிக்கலான காரியமாகும். மேலும், அந்த ஏவுகணையை இயக்குவதற்கு ஏற்ப விமானத்தின் மென்பொருள், மின்சாதன இணைப்புகள் ஆகிவற்றில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது என்றார் விமானப் படை செய்தித் தொடர்பாளர் அனுபம் பானர்ஜி.

ஃபாஸ்டேக் திட்டம்

  • நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் திட்டம் வரும் டிசம்பர் 1 ம் தேதி நடைமுறைக்கு வருகிறது.
  • சுங்கச் சாவடிகளில் நேரம் விரையம் ஆவதை தடுத்தல் மற்றும் கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகளை களையும் பொருட்டு வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் சுங்கத் சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வருகிறது

விண்கற்கள்

  • விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஆஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் இரவை பகலாக மாற்றியது. ‘ஷூட்டிங் ஸ்டார்’ என அழைக்கப்படும் விண்கற்கள், ஒன்றுடன் ஒன்று மோதி அவ்வப்போது மின்னல் போன்ற வெளிச்சத்தை உருவாக்குவது உண்டு.
  • அந்தவகையில் ஆஸ்திரேலியாவின் தஸ்மானியா மற்றும் விக்டோரியா மாநில வான் பரப்பில் இந்த மின்னல்கள் தோன்றின.
  • பகல் போன்ற பிரகாசத்தை ஏற்படுத்தின. இதனை உறுதி செய்துள்ள வல்லுநர்கள், உரசிக்கொண்ட விண்கற்களின் அளவு தெரியவில்லை என கூறியுள்ளனர்.
  • விண்கற்கள் ‘சாசர் பந்தின்’ அளவில் இருந்திருக்கலாம் என தெரிவிக்கும் ஆஸ்திரேலியாவின் குயீன் விக்டோரிய கோளரங்கத்தின் விண்வெளி ஆய்வாளர் ஒருவர், எரிக்கற்கள் உரசிய இடத்தில் வசிக்கும் மக்கள், லேசான பாதிப்பை உணர்ந்திருக்கலாம் என தெரிவிக்கின்றார்.

கோனோட்டரி 8 (Kounotori8)

  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான 5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
  • ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளி நிலையத்தை நிறுவி ஆராய்ச்சி செய்து வருகின்றன.
  • சுழற்சி முறையில் அங்கு வீரர்கள் தங்கி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான பொருட்கள், விண்கலன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
  • அந்த வகையில், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மின் கலன்கள், இதர உபகரணங்களுடன், கோனோட்டரி 8 (Kounotori8) என்ற ஆளில்லா விண்கலத்தை ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜக்சா (jaxa) உள்நாட்டு நேரப்படி அதிகாலை 1.05 மணிக்கு விண்ணில் ஏவியது.
  • தென் மேற்கே உள்ள தனேகஷிமா (Tanegashima) ஏவுதளத்தில் இருந்து H-2B ராக்கெட் மூலம், கோனோட்டரி 8 விண்ணில் ஏவப்பட்டது

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

  • கருப்பொருள் : வரலாறு மற்றும் முக்கியத்துவம்

  • மொழிபெயர்ப்பு தொழில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மொழி நிபுணர்களின் பணிக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 அன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது நமது மாறிவரும் உலகில் கலாச்சார பாரம்பரியத்தையும் பரஸ்பர மரியாதையையும் வளர்க்க உதவுகிறது.

சர்வதேச காபி தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச காபி கழகத்தின் தரவின்படி, உலகிலேயே பின்லாந்தை சேர்ந்த மக்கள்தான் அதிகளவில் காபி பருகுகின்றனர். அதாவது ஒரு வருடத்திற்கு, பின்லாந்தை சேர்ந்த ஒருவர் சுமார் 12 கிலோ காபியை பருகுகிறார்.

உலக காது கேளாதோர் தினம்

  • உலக காது கேளாதோர் தினம் 2019 செப்டம்பர் மாதத்தில் கடைசி திங்கட்கிழமை கொண்டாடப்படும். 2019 இல் இது செப்டம்பர் 30 அன்று கொண்டாடப்படுகிறது.

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

  • 24 மே 2017 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நாடுகளை இணைப்பதிலும், அமைதி, புரிதல் மற்றும் வளர்ச்சியை வளர்ப்பதிலும் மொழி நிபுணர்களின் பங்கு குறித்து 71/288 தீர்மானத்தை நிறைவேற்றி, செப்டம்பர் 30 ஐ சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக அறிவித்தது.

62 வகை கடல் உயிரினங்கள்

  • மன்னார் வளைகுடாவில் உயிரியல் வளங்கள் குறித்த சமீபத்திய அடிப்படை ஆய்வின் போது சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்.டி.எம்.ஆர்.ஐ) 62 புதிய கடல் உயிர் இனங்கள் மற்றும் 77 புதியபவளப்பாறை பகுதிகளை பதிவு செய்துள்ளது.

‘படா தஷைன்’

  • நேபாளத்தின் படா தஷைன் என்ற மிகப்பெரிய திருவிழா தொடங்கியது. திருவிழா நவராத்திரியின் முதல் நாளில் காட்ஸ்தபனாவுடன் தொடங்கியது . 15 நாள் திருவிழா அஸ்வின் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அவர்கள் சொந்த இடங்களுக்கு சென்று படா தஷைன் திருவிழாவை தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுவார்கள்.

மங்கோலியா - குரு நானக் தேவ்

  • குரு நானக் தேவின் 550 வது பிறந்த நாளைக் கொண்டாட, நேபாள ராஸ்ட்ரா வங்கி அவரது நினைவு நாணயங்களை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு விழாவில் காத்மாண்டுவில் 2,500, 1,000 மற்றும் 100 நேபாளி ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
Share with Friends