Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 31st March 20 Notes


2020-21 நிதியாண்டு தொடங்கும் மாதம் - ஜுலை 1

  • கொரோனா வைரஸ் காரணமாக 2020-21 நிதியாண்டு தொடங்கும் மாதம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • 2020 ஏப். 1-ம் தேதி தொடங்க வேண்டிய நிதியாண்டு பதிலாக ஜுலை 1-ல் தொடங்கும் என அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

'ஸூம்' செயலி மூலம் வழக்கு விசாரணை

  • கரோனா பரவுவதைத் தொடா்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • இதனைத் தொடா்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளது.
  • மேலும் மிக முக்கியமான அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என உயா்நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.
  • இந்நிலையில்ஸூம் எனப்படும் காணொலி விடியோ இணைப்பு செயலியின் மூலம் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் வழக்குகளை விசாரித்துள்ளனா்.
  • இந்த செயலியின் உதவியோடு அரசு தரப்பிலும், மனுதாரா் தரப்பிலும் வழக்குரைஞா்கள் தங்களது இல்லங்களில் இருந்து ஆஜராகி வாதிட்டுள்ளனா். சென்னை உயா் நீதிமன்ற நீதித்துறை வரலாற்றில் இந்த தொழில்நுட்ப முறையிலான விசாரணை இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வென்டிலேட்டர் தயாரிக்க வாகன ஆலைகளுக்கு உத்தரவு

  • இந்தியாவில் கொரோனா அதிக அளவு பரவி நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.
  • இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்க மூச்சுத் திணறல் ஏற்படும்போது ஆக்சிஜன் அளிக்கும் வென்டிலேட்டர் பொருத்துவது அவசியம்.
  • எனவே வென்டிலேட்டர் தேவை அதிகரிக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையில் வென்டிலேட்டரை தயாரித்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
  • பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ், நிறுவனம் உள்ளூர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து அடுத்த 2 மாதத்தில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரிக்கவுள்ளன.
  • நொய்டாவில் உள்ள அக்வா ஹெல்த்கேர் நிறுவனம் 10 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

ICICI Bank - Whatsapp மூலம் சேவை

  • கொரோனாவின் காரணமாக மக்களின் வாழ்க்கை முடங்கியுள்ள இந்த நேரத்தில் தன்னுடைய வங்கி சேவையை வாட்ஸ் ஆப் மூலம் தொடங்கியுள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி.
  • மொபைல் ஆப்பை பயன்படுத்தி பல பேருக்கு பண பரிவர்த்தனை செய்யத் தெரியவில்லை.
  • எனவே வாட்ஸ் ஆப் மூலம் வங்கி சேவை பெறும் திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தொடங்கியுள்ளது.
  • இதன் மூலம் வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பினால் அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு தொகை, கடைசி மூன்று பரிவர்த்தனைகள், முன்பு அங்கீகரிக்கப்பட்ட உடனடி கடன் சலுகை உள்ளிட்ட விவரங்களை பெற முடியும்.
  • மேலும் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பி தங்களுடைய டெபிட், கிரெடிட் கார்டுகளை பிளாக், அன்பிளாக் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இது தவிர அருகில் எங்கே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளது, ஏ.டி.எம் மையம் உள்ளது என்ற விவரத்தையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ஓட்டுநர் உரிமங்கள் புதுப்பித்தல் - ஜூன் 30 வரை

  • கொரோனா பாதிப்பு காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் ''பிப்ரவரி 1 முதல் காலாவதியாகின்ற ஓட்டுநர் உரிமம், வாகன உரிமங்கள், தகுதிச் சான்றிதழ் ஜூன் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
  • நாட்டில் நிலவுகின்ற தேசிய அளவிலான ஊரடங்கு மற்றும் அரசு போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மோட்டார் வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

'Stay Home India With Books'

  • COVID-19 நோய்த்தொற்றுக்கு இடையே நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்க ஊக்குவிப்பதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய நூல் அறக்கட்டளையானது, 'Stay_Home_India_With_Books' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்த முயற்சியின் ஒருபகுதியாக, தேசிய நூல் அறக்கட்டளை தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் வெகுவாக விற்பனையான சிறந்த நூல்களை தனது வலைத்தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதிக்கிறது.
  • தேசிய நூல் அறக்கட்டளையின் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் PDF வடிவில் அதன் வலைதளத்தில் கிடைக்கப்பெறுகின்றன.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைத்தது மத்திய அரசு

  • சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் முதலாம் காலாண்டில் இருந்து இந்த வட்டி விகித குறைப்பு அமலுக்கு வருகிறது.
  • இதன்படி தேசிய சேமிப்பு பத்திரம், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி, அஞ்சலக நிரந்தர வைப்புகள் உள்ளிட்டவற்றுக்கான வட்டிகள் குறையும்.
  • அஞ்சலகத்தில் 1 முதல் 3 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்புகளுக்கு 6.9 சதவீதமாக இருந்த வட்டி, 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி 7.7 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு தொடா் வைப்புக்கான வட்டி இனி 5.8 சதவீதமாக இருக்கும்.
  • மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி 8.6 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், அஞ்சலக சேமிப்புக் கணக்குகளுக்கான ஆண்டு வட்டி 4 சதவீதமாகவே தொடரும். பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 8.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக குறைகிறது.
  • தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7.1 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி 6.8 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி 6.9 சதவீதமாக குறைத்து நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், வங்கி வட்டி விகிதங்களுடன் ஒப்பிடும்போது அஞ்சலக வைப்புகளுக்கான வட்டி விகிதம் இப்போதும் சற்று கூடுதலாகவே உள்ளது

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவித் திட்டம்: - ரூ.200 கோடி

  • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளைச் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
  • கரோனா நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் என்ற சுமாா் ரூ.200 கோடி மதிப்பிலான சிறப்புக் கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள 2 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர லதன தேவைகளுக்காக பயன்படுத்தப்படும்.
  • சிப்காட் நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள், சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் ஆகியன உரிய கட்டணங்களைச் செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.
  • பயிா்க் கடன் தவணைக்கு அவகாசம்: கூட்டுறவு நிறுவனங்களில் பயிா்க் கடன் பெற்றவா்கள் தவணைத் தொகை செலுத்த கால அவகாசம் 3 மாதங்களுக்கு - அதாவது ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதேபோன்று, வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மீனவ கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட கடனுதவிகளுக்கான தவணைத் தொகையை செலுத்தவும் 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என முதல்வா் அறிவித்துள்ளாா்.
  • சொத்து-குடிநீா் கட்டணம்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம் போன்றவற்றைச் செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்றும்முதல்வா் அறிவித்துள்ளாா்.
Share with Friends