ராணுவ உலக விளையாட்டுப் போட்டிகள்
- சீனாவின் வுஹானில் நடைபெற்ற 7 வது ராணுவ உலக விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற சுபேதர் ஆனந்தன் குணசேகரன் பெங்களூரில் உள்ள மெட்ராஸ் பொறியியல் குழு மற்றும் மையத்தில் பாராட்டப்பட்டார்.
- பாரா-தடகள வீரராக சுபேதர் ஆனந்தன் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார்.
மைஸ்னம் மீராபா லுவாங்
- கொரியாவின் மிரியாங்கில் நடைபெற்ற வொன்ச்சியன் யோனெக்ஸ் கொரியா ஜூனியர் ஓபன் பேட்மிண்டன் சர்வதேச சவால் 2019 இல் சிறுவர் ஒற்றையர் யு -19 பட்டத்தை மைஸ்னம் மீராபா லுவாங் வென்றார்.
200 மில்லியன் யூரோ ஒதுக்கீடு
- தமிழக போக்குவரத்துத்துறை சீரமைப்புக்கு 200 மில்லியன் யூரோ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
- இந்தியா மற்றும் ஜெர்மனி இடையிலான 63-ஆவது வருடாந்திரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- தமிழக போக்குவரத்துத்துறை சீரமைப்புக்கு 200 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 1,580 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது
- நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட துறைக்கு ஆற்றிய பங்களிப்பு, சேவையை அங்கீகரிக்கும் வகையில், கோவாவில் நடைபெறும் 50-வது சர்வதேச பட விழாவில் அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
- இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவுக்கு பொன் விழா ஆண்டு ஆகும். இந்த விழாவை இந்தியாவும், ரஷியாவும் இணைந்து நடத்துகின்றன.
ஜம்மு காஷ்மீர் & லடாக்
- 2014ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் 29வது மாநிலமாக பிரிக்கப்பட்டது. அப்போது இந்திய வரைபடம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும்.
- இந்திய வரைபடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு புதிய யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் புதிய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா
- 2016-ஆம் ஆண்டு மேகாலய குடிமக்கள் பாதுகாப்பு சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. உடனடியாக இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வரவுள்ளதாகவும், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்த மாநில துணை முதல்வர் பிரஸ்டோன் தின் சாங் கூறியுள்ளார்.
- சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிவதற்காக மேகாலய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
பிராந்திய தளபதி - விமானப் படை
- தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றவரான அமித் திவாரி, கடந்த 1982-இல் விமானப் படையில் இணைந்தாா்.
- கடந்த 37 ஆண்டு காலத்தில், விமானப் படையின் ‘சூரியகிரண்’ பிரிவின் குழுத் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளையும் அமித் திவாரி வகித்துள்ளார். விமானப் படையில் தனது பங்களிப்புக்காக, ஆதி விஷிஸ்த் சேவா பதக்கம், வாயு சேனா பதக்கம் ஆகியவற்றை இவா் பெற்றுள்ளாா்.
தபால் மூலம் வாக்குகள்
- நாட்டிலேயே முதல் முறையாக ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- தேர்தல் ஆணைய தகவலின்படி, அந்த மாநிலத்தில் 80 வயதுக்கும் அதிகமாக19 லட்சம் பேரும், 2.16 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர்.
‘பெப்ஸிகோ இந்தியா’
- 1,700 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்ததாக ‘பெப்ஸிகோ இந்தியா’ நிறுவனத்துக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ விருது வழங்கி கெளரவித்தார்.
- வறட்சியான பகுதிகளில் நீரை நிரப்பும் திட்டத்தை பெப்ஸிகோ நிறுவனம் தொடங்கியது.
- அதன்மூலம், 1,700 கோடி லிட்டா் தண்ணீா் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் உள்பட 4 நிறுவனங்கள் விருதைப் பெற்றன. பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயங்கள் குறித்த 10 நாள் அமர்வில் இந்தியா உஸ்பெகிஸ்தானுடன் தனது முதல் இராணுவ பயிற்சியை நடத்தும்.
- நவம்பர் 4 முதல் நவம்பர் 13, 2019 வரை உஸ்பெகிஸ்தானின் சிர்ச்சிக் பயிற்சி பகுதியில் இந்த பயிற்சி நடைபெறும்.
உற்பத்தி எத்தனை சதவீதம்
- பொருளாதார மந்த நிலையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், செப்டம்பர் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 5.2 சதவீதம் என்ற அளவில் பின்னடைவச் சந்தித்துள்ளது.
- மொத்தமுள்ள 8 முக்கிய துறைகளில் பல துறைகளின் உற்பத்தியானது பின்னடைவையே கண்டுள்ளது.
- குறிப்பாக, நிலக்கரி 20.5 சதவீதம், கச்சா எண்ணெய் 5.4 சதவீதம், இயற்கை எரிவாயு 4.9 சதவீதம் என்ற அளவில் கடுமையாக சரிந்துள்ளன கடந்தாண்டு செப்டம்பரில் 8 துறைகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 4.3 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில் நடப்பாண்டில் பின்னடைவைக் கண்டுள்ளது.