Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 5th April 20 Notes


'ஜீவன்லைட்' வென்டிலேட்டர்

  • ஐதராபாத்தில் இயங்கி வரும் ஐஐடியில் உள்ள ஹெல்த்கேர் தொழில் முனைவோருக்கான மையம், அவசரகால வென்டிலேட்டர் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
  • இந்த வென்டிலேட்டர்கள் குறைந்த விலை மற்றும் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய வகையில் தயாரிக்கப்படும்.
  • இதற்கு 'ஜீவன்லைட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 50 முதல் 70 வென்டிலேட்டர்களை தயாரிக்கவும் ஐஐடியில் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய ஹெல்ப்லைன் எண் - கோவிட் -19

  • கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் தேவைப்படுபவர்களுக்கு உதவ மத்திய உள்துறை அமைச்சகம் தனது கட்டுப்பாட்டு அறையில் இரண்டு புதிய ஹெல்ப்லைன் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஹெல்ப்லைன் எண்கள் 1930 (அகில இந்திய கட்டணமில்லா எண்) மற்றும் 1944 (வடகிழக்குக்கு அர்ப்பணிக்கப்பட்டவை). முன்னதாக, கோவிட் -19 நோய் தொடர்பான புகார்களுக்கு பதிலளிக்க உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறையில் ஏழு ஹெல்ப்லைன்கள் செயலில் இருந்தன.

உலக சுகாதார நிறுவனம் (WHO) - கொரோனா

  • வெப்பநிலை அதிகரித்தாலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • தாக்கம் குறையும் என தகவல்கள் வெளியான நிலையில் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. வெப்பநிலை அதிகம் உள்ள நாடுகளில் கொரோனா தாக்கம் உள்ளது எனவும் கூறியுள்ளது.

சுகாதாரத் துறைக்கு உதவும் கூகுள் மேப்ஸ்

  • கூகுள் மேப்ஸ், தங்கள் பயனர்கள் இருக்கும் இடத்தை வைத்து, எந்த இடத்தில் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது அல்லது குறைந்திருக்கிறது என்ற தகவலை பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தந்து உதவுகிறது.
  • மக்கள் இளைப்பாற வரும் இடம், அங்காடிகள், மருந்தகங்கள், பூங்காக்கள், வீடு இருக்கும் இடங்கள் என எங்குக் கூட்டம் கூடுகின்றனர் என்பதை கூகுள் மேப்ஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • ‘COVID-19 Community Mobility Reports’ என்ற இணையதளத்திற்குச் சென்றால் அதிகாரிகள் எந்த தேசம் என்று தேர்ந்தெடுத்து, அதில் வரும் பிடிஎஃப் தரவுகளைப் பதிவிறக்கம் செய்துகொண்டு மக்களின் நடமாட்டத்தை அறியலாம்.
  • இந்தியா உட்பட 131 நாடுகளின் மக்கள் நடமாட்டம் தற்போது தரவுகளாகக் கிடைக்கின்றன.
  • இப்படித் திரட்டப்படும் தகவல்களில் தனிப்பட்ட நபரின் அந்தரங்கத் தகவல்கள் எதுவும் இருக்காது.
  • கடந்த சில வாரங்களின் தரவுகள் இதில் கிடைக்கும். கடைசி 48-72 மணிநேர விவரங்கள் வரை இடம்பெறும்.
  • இதில் எவ்வளவு சதவீதம் நடமாட்டம் கூடியுள்ளது அல்லது குறைந்துள்ளது என்பது மட்டுமே குறிப்பிடப்படுகிறதே தவிர சரியான எண்ணிக்கை என்ன என்ற விவரங்கள் இருக்காது.
  • வரும் வாரங்களில் இன்னும் பல்வேறு நாடுகளையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிட்டுள்ளது.
  • இந்தத் தரவுகளை வைத்து அலுவலக நேரம், டோர் டெலிவரி சேவைக்கான நேரம் ஆகியவற்றைத் திட்டமிட முடியும்.
  • அதேபோலத் தொடர்ந்து பொதுப் போக்குவரத்துக்கான இடத்தில் நடமாட்டம் இருந்தால் கூடுதல் போக்குவரத்து வசதி கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும்.

அந்நியச் செலாவணி 47,556 கோடி டாலராக உயா்வு

  • நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. அந்த வாரத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 76 வரை சரிந்தது.
  • இதையடுத்து, ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த ரிசா்வ் வங்கி டாலா்களை அதிக அளவில் செலாவணி சந்தையில் விற்பனை செய்தது. இதன் காரணமாக, அந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 1,198 கோடி டாலா் சரிந்து 46,991 கோடி டாலரானது.
  • முந்தைய மாா்ச் 13 ஆம் தேதியுடன் நிறைவடைந் வாரத்திலும் செலாவணி கையிருப்பு 534 கோடி டாலா் குறைந்து 48,189 கோடி டாலராக இருந்தது. ஏறக்குறைய ஆறு மாதத்துக்குப் பிறகு இந்த வாரத்தில் தான் அந்நியச் செலாவணி கையிருப்பு முதல் முறையாக குறைந்தது.
  • இந்த நிலையில், தொடா் வீழ்ச்சிக்குப் பிறகு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 565 கோடி டாலா் அதிகரித்து 47,556 கோடி டாலரை எட்டியுள்ளது. இதற்கு அந்நியச் செலாவணியின் சொத்து மதிப்பு அதிகரித்ததே முக்கிய காரணம்.
  • ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மாா்ச் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 256 கோடி டாலா் அதிகரித்து 43,966 கோடி டாலராக இருந்தது.
  • தங்கத்தின் கையிருப்பு 303 கோடி டாலா் உயா்ந்து 3,089 கோடி டாலரானது. சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 1.4 கோடி டாலா் ஏற்றம் கண்டு 142 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 4.4 கோடி டாலா் அதிகரித்து 358 கோடி டாலராகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • மாா்ச் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 569 கோடி டாலா் உயா்ந்து வரலாற்றில் முதல் முறையாக 48,723 கோடி டாலரை எட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிவிப்பு

  • மூலவருவாயிலிருந்து கழிக்கப்படும் வரி (TDS) மற்றும் மூலவருவாயிலிருந்து வசூலிக்கப்படும் வரி (TCS) விதிகளைக் கடைப்பிடிப்பதில் வரி செலுத்துவோருக்கு உள்ள இடர்பாடுகளைக் களைய வருமான வரி சட்டம், 1961ன் 119 பிரிவின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு.
  • கோவிட்-19 பெரும் தொற்று நோயின் பரவல் காரணமாக, அனைத்து துறைகளின் இயல்பு நடவடிக்கைகளும் கடும் பாதிப்படைந்துள்ளன.
  • வரி செலுத்துவோரின் சிக்கல்களைக் களைவதற்காக, வருமான வரி சட்டம், 1961இன் 119 பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்வேறு அறிவுறுத்தல்கள்/தெளிவுப்படுத்துதல்களை, மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கியுள்ளது.
  • 2020-21 நிதி ஆண்டுக்கான TDS & (TCS) ஆகியவற்றில் மிகக் குறைந்த கழிவு கொண்ட அல்லது கழிவே இல்லாத விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளோருக்கும், விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்து நிதி ஆண்டு 2019-20இல் அதற்கான சான்றிதழ்கள் அளிக்கப்பட்டோருக்கும், அந்த சான்றிதழ்கள் நிதி ஆண்டு 2020-21இன் 30.06.2020 வரை செல்லுபடியாகும்.
  • ஒருவர் TDS & TCS வரி ஆகியவற்றில் மிகக் குறைந்த கழிவு கொண்ட அல்லது கழிவே இல்லாத, நிதி ஆண்டு 2020-21க்கான விண்ணப்பங்களை டிரேசஸ் (TRACES) இணையதளத்தில் சமர்பிக்க இயலாதோர், நிதி ஆண்டு 2019-20க்கான சான்றிதழ்களை வைத்திருந்தால், அந்த சான்றிதழ்கள் நிதி ஆண்டு 2020-21இன் 30.06.2020 வரை செல்லுபடியாகும்.
  • சிறிய அளவிலான வரி செலுத்துவோரின் சிக்கல்களைக் களைவதற்காக, ஒருவர் 15ஜி மற்றும் 15எச் படிவங்களை வங்கிகளுக்கோ அல்லது இதர நிறுவனங்களுக்கோ நிதி ஆண்டு 2019 - 20 ஆண்டுக்காக சமர்ப்பித்திருந்தால், அவை 30.06.2020 வரை செல்லுபடியாகும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது சிறிய அளவிலான வரி செலுத்துவோரை வரி செலுத்தும் பொறுப்பு இல்லாவிடில் மூலத்தில் கழிக்கப்படும் வரியில் இருந்து பாதுகாக்கும். (30.04.2020 அன்று உத்தரவு வெளியிடப்பட்டது).
  • 119 பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட மேற்காணும் அனைத்து உத்தரவுகளும் www.incometaxindia.gov.in என்னும் இணையதளத்தில் இதர தகவல் தொடர்புகள் (Miscellaneous Communications) என்னும் தலைப்பில் காணலாம்.
  • இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Share with Friends