1000 ரூபாய் நோட்டுகள்
- சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், பயனற்றதாக இருக்கும் 58 சட்டங்களை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.
- இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் மசோதா நிறைவேறியது.
- இவ்வாறு ரத்து செய்யப்பட இருக்கும் 58 சட்டங்களில், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் (பணமதிப்பு நீக்கம்) திருத்த சட்டம் 1998-ம் ஒன்றாகும்.
- கடந்த 1999-ம் ஆண்டு அமலில் வந்த இந்த சட்டம் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு வகை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
- இந்த சட்டத்தை கடந்த 1998-ம் ஆண்டு அப்போதைய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
- இதன் மூலம் 1978-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 1999-ல் அமலாக்கப்பட்டது.
- இந்த சட்டம் மூலம் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
- தற்போது 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டமும் ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலிஷ் கால்வாய் - பிரெஞ்சு வீரர் சாதனை
- நமது தமிழக வீரர் குற்றாலீஸ்வரன் 1994-ம் ஆண்டு, தனது 13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி சாதனை படைத்து இருக்கிறார்.
- அவரது சாதனைக்கு இது வெள்ளி விழா ஆண்டு.
- இந்த தருணத்தில், 40 வயதான பிரெஞ்சு வீரர் பிராங்கி ஜபதாவுக்கு ‘ஹோவர் போர்டு’ மூலம் இங்கிலிஷ் கால்வாயை கடக்க வேண்டும் என்பது கனவு.
- ‘ஹோவர் போர்டு’ என்பது தனிப்பட்ட பயணத்துக்காக உருவாக்கிக்கொள்கிற ஒரு வாகனம். எளிமையாக சொன்னால் பறக்கும் பலகை என்று சொல்லி விடலாம்.
வண்டலூர் உயிரியல் பூங்கா
- மெட்ராஸ் உயிரியல் பூங்கா, சென்னை சென்ட்ரல் பகுதியில் 1854-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- போக்குவரத்து நெரிசல், காற்று மற்றும் ஒலி மாசு காரணமாக இந்த உயிரியல் பூங்கா 1985-ம் ஆண்டு வண்டலூருக்கு மாற்றப் பட்டது. அப்பூங்காவை அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் திறந்துவைத்தார்.
- அப்போது அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி உயிரியல் பூங்காவில் இருந்து காண்டாமிருகம் கொண்டுவரப் பட்டது.
- அது உடல்நலக் குறைவு காரணமாக 1989-ம் ஆண்டு இறந்தது. அதன் பிறகு புதிய காண்டாமிருகம் கொண்டுவரப் படவில்லை.
- இப்பூங்காவில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன ஆகியவை அடங்கிய 171 இனங்களைச் சேர்ந்த 2,644 உயிரினங்கள் காட்சிப்படுத் தப்பட்டுள்ளன.
- காண்டாமிருகம் இல்லாதது பெரும் குறையாக இருந்து வந்தது. இந்நிலையில், வண்டலூர் பூங்காவின் தலைவராக உள்ள முதல்வர் பழனிசாமி, ஒரு ஜோடி காண்டாமிருகத்தை வழங்குமாறு குவாஹாட்டி பூங்காவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
- அவரது கோரிக்கையை ஏற்று, ஒரு காண்டாமிருகம் நேற்று முன்தினம் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மகசேசே விருது
- ஆறு வகையான துறைகள் -அரசு பணி, பொது சேவை, சமூக தலைமை, இலக்கியம் மற்றும் இதழியல், அமைதி, வளரும் தலைமை.