புலி ஒன்றுக்கு கரோனா வைரஸ்
- நியூயார்க்கில் மனிதனிடம் இருந்து புலி ஒன்றுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- விலங்குகளுக்கு கரோனா தொற்று ஏற்படுவதில்லை என கூறப்பட்டு வந்தநிலையில் நியூயார்க் நகரில் உள்ள புரோனெக்ஸ் உயிரியல்
பூங்காவில் புலி ஒன்றுக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த உயிரியல் பூங்காவின் தலைமை விலங்கியல்
மருத்துவர் தெரிவித்துள்ளார்.
“கருனா”(CARUNA)
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- இந்நிலையில் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து “கருனா”(CARUNA) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
- இதன்மூலம் கோவிட்-19க்கு எதிராக அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயல்பட திட்டமிட்டுள்ளனர்.
- இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ், மாநில சேவையில் ஈடுபடும் நபர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவர்.
- நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் பரவிக் கிடக்கின்றனர். அவர்கள் அனைவரின் தகவல் தொடர்புகளும் ஒன்றிணைக்கப்படும். இதைக் கொண்டு அத்தியாவசிய சேவைகள், மருத்துவ உபகரணங்கள் சேவை, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சேவை உள்ளிட்டவற்றை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
2 கொரோனா தடுப்பு மருந்துகள் - உலக சுகாதார நிறுவனம்
- கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க 2 தடுப்பு மருந்துகளை மனிதர்கள் உடலில் செலுத்தி சோதனை செய்ய தயாராக இருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது.
- மலேரியாவை குணப்படுத்தப் பயன்படும் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துக்காண தேவை அதிகரித்துள்ளது.
- இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளதால், தடையை நீக்கி மலேரியா மருந்தை அனுப்பி வைக்குமாறு பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- அதே சமயம் கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியிலும் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
- அங்குள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியின் விஞ்ஞானிகள், ‘பிட்கோவேக்’ என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர்.
- இந்த தடுப்பூசி தற்போது எலிகளுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது.
- இந்த நிலையில், மனித உடல்களில் செலுத்தி பரிசோதிக்கும் நிலையில், இரண்டு விதமான தடுப்பு மருந்துங்களும் தயார் நிலையில் உள்ளதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது.
- இது தவிர 60 விதமான மருந்துகள், ஆய்வக சோதனைக்கு முந்தைய நிலையில் உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா - கொலை முயற்சி வழக்கு பதிவு
-
கொரோனா பாதித்த நபர் மற்றொருவர் மீது துப்பினால் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று இமாச்சல பிரதேச அரசு
அறிவித்துள்ளது. துப்பியதால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தால் கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, துணைத் தலைவர், ஆளுநர்களின் சம்பளத்திலும் 30% ஊதியக் குறைப்பு
-
ஜனாதிபதி, துணை ஜனாதிபதியும் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சரவை
தெரிவித்துள்ளது.மேலும் அனைத்து மாநில ஆளுநர்களும் தங்கள் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்துக் கொள்ள ஒப்புதல் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் 30 % குறைப்பு
- நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
- பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஊதியமும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
- 30 சதவீதம் ஊதிய பிடித்தம் ஓராண்டுக்கு நீடிக்கும் என்று அமைச்சரவை தீர்மானம் செய்துள்ளது. ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும்
தொகை கொரோனா தடுப்புப் பணிக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா - 2,500 ரயில் பெட்டிகள் 40,000 படுக்கைகள் தயார்
- கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ரயில் பெட்டிகளை படுக்கைகளாக மாற்ற மத்திய
அரசு அனுமதி அளித்துள்ளது.
GRACE-FO திட்ட ம்
- அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) மற்றும் நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகம் ஆகியோரால் ஒரு புதிய செயற்கைக்கோள் அடிப்படையிலான, மண்ணின் ஈரப்பதம் மற்றும் நிலத்தடி நீர் ஈரப்பத நிலைகளைக் காட்டும் வாராந்திர உலகளாவிய வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- பவி ஈர்ப்பு விசை மீட்பு மற்றும் காலநிலை பரிசோதனை பின்தொடர்தல் (The Gravity Recovery and Climate Experiment Follow- on/GRACE-FO) என்ற திட்ட மானது நாசா மற்றும் ஜெர்மனியின் புவியியலுக்கான ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சித்திட்டமாகும்.
- இது பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மாறுபாடுகளை அளவிடுகின்றது. மேலும் இது ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஈர்ப்புப்
புலத்தின் ஒரு புதிய வரைபடத்தை உருவாக்குகின்றது.