பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் சர்வதேச நாள்
- ஐ.நாவின் கணக்குப்படி, 20 பெண்களில் ஒரு பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்.
- உலகில் வாழும் 200 மில்லியன் பெண்களுக்கு, பிறப்புறப்பின் வெளிபுறம் வெட்டப்பட்டோ, மாற்றப்பட்டோ அல்லது நீக்கப்பட்டோ உள்ளது.
- பெண் பிறப்புறுப்பு சிதைவை முடிவுக்கு கொண்டுவர இதற்கான சர்வதேச தினம் பிப்ரவரி அனுசரிக்கப்படுகிறது.
- வயது வந்த பெண்கள், சிறுமிகளின் பிறப்புறப்பு சிறு வயதிலேயே சிதைக்கப்படுகிறது. சில சமயம் குழந்தைகளாக இருக்கும் போது சிதைக்கப்படுகிறது.
- இதன் காரணமாக உடல்நல மற்றும் மனநல பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் வரலாம்.
உலக பாரம்பரிய சான்றிதழ் - யுனெஸ்கோ
- யுனெஸ்கோவின் பாரம்பரியம் மிகுந்த நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரும் இடம்பிடித்துள்ளது.
- இதுகுறித்து யுனெஸ்கோ அமைப்பு, சனிக்கிழமை பிற்பகலில் வெளியிட்ட சுட்டுரை (டுவிட்டர்) செய்தியில், "யுனெஸ்கோ உலகின் பாரம்பரியம் மிகுந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரத்தின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதி
- பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர், ஸ்ரீ தர்மேந்திர பிரதான் மற்றும் ரோஸ் நேபிட் (Rosneft) (ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனம்) தலைவர் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- ஒப்பந்தத்தின்படி இந்தியா 2 மில்லியன் மெட்ரிக் டன் யூரல்ஸ் தர கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்.
‘ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’
- ‘ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா’ அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
- ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் 15 அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். கே.பராசரன் அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கோயில் கட்டுவதற்கு மூன்று மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளுடன் ஒரு திட்டத்தை வகுக்க 2019 நவம்பரில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு வழங்கிய உத்தரவுப்படி இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆசியா உச்சி மாநாடு
- வெளியுறவு துறை அமைச்சகம் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டை சென்னையில் ஏற்பாடு செய்யவுள்ளது. இந்தியாவில் ஐந்தாவது முறையாக மாநாடு நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.