படைவீரர் கொடி நாள்
- தாய் நாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் கெண்டாடப்படுகிறது.
- 1949-ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச சிவில் விமான தினம்
- விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டப்பிறகு பயணத்தின் நேரம் குறுகிப் போனது. தற்போது சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது.
- இதற்கான ஒரு அமைப்பு 1944இல் ஆரம்பிக்கப்பட்டு, அதன் 50 ஆவது ஆண்டு விழா 1994ஆம் ஆண்டில் கொண்டாடியது.
- இந்த அமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஐ.நா. பொதுச்சபை டிசம்பர் 7 ஆம் தேதியை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமாக அறிவித்தது.
அம்பேத்கர் போதனைகள்
- நாட்டிற்கு பி.ஆர்.அம்பேத்கரின் பங்களிப்பு குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க, தில்லி அரசாங்கம் 6-8 வகுப்பு மாணவர்களுக்கு அவரது வாழ்க்கை மற்றும் போதனைகள் குறித்த ஒரு சிறிய கையேட்டை அரசுப் பள்ளிகளில் வெளியிட்டது.
- அம்பேத்கரின் 63 வது மரண ஆண்டு விழாவில் கையேடு வெளியிடப்பட்டது புத்தகத்தில் அடங்கியுள்ளவை:
- மூன்று பாகம் உள்ள இந்த கையேடு அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் கல்வி, அவரது சமூக சீர்திருத்த முயற்சிகள், பெண்கள் அதிகாரம் , இந்திய அரசியலமைப்பை எழுதுதல் , சமூக மற்றும் பாலின நீதிக்கான அவரது பங்களிப்புகள் ஆகியவற்றை பற்றி விளக்குகிறது.
- மூன்றாம் பாகம் பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசாங்கத்தில் அம்பேத்கரின் பங்களிப்பு பற்றி விளக்குகிறது.
- டெல்லி பல்கலைக்கழகத்தின் மணி சாகர், சஷி ராணி, மற்றும் என்.சுகுமார் ஆகிய மூன்று அறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் உதவியுடன் தில்லி அரசாங்கத்தின் சமூக நலத்துறையால் இந்த கையேடு தயாரிக்கப்படுட்ள்ளது.
தெற்காசிய விளையாட்டுப் போட்டி
- தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அனுராதா தங்கப்பதக்கம் வென்றார்.
- 13-ஆவது தெற்காசியப் போட்டிகள் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்று வருகின்றன.
- முதல் தெற்காசிய விளையாட்டுப் போட்டி 1984-ம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்றது.
- தெற்காசிய விளையாட்டுப் போட்டி 2 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகின்றன.
“உடான்” திட்டம்
- உடான் திட்டதிட்டத்தின் கருப்பொருள் – “சாதாரண மக்களும் விமானத்தில் குறைந்த கட்டணத்தில் பறப்பது”.
- “உடான்” திட்டத்தின் கீழ் ஒடிஸாவின் 3 விமான நிலையங்கள் இணைத்துக் கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- ஜெய்போர், ரூர்கேலா மற்றும் உத்கேலா ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
- 3 விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக உடான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 160 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
முதல் திருநங்கைகள் - தீப்தி
- தீப்தி - நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பொறுப்பேற்றார்.
- இதன் மூலம் வனத்துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை தீப்தி பெற்றுள்ளார்.