சர்வதேச எழுத்தறிவு தினம்
- ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச எழுத்தறிவு தினம், அரசாங்கங்கள், சிவில் சமூகம் மற்றும் பங்குதாரர்களுக்கு உலக கல்வியறிவு விகிதங்களில் மேம்பாடுகளை முன்னிலைப்படுத்தவும், உலகின் மீதமுள்ள கல்வியறிவு சவால்களை பிரதிபலிக்கவும் ஒரு வாய்ப்பாகும்.
'பால்பசேரா' திட்டம்
- எய்ம்ஸ் ரிஷிகேஷில் உள்ள சி.பி .டபிள்யூ.டி ஆதரவுடன், அங்கு வேலை ,செய்யும் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளின் நலனுக்கான, சிபிடபிள்யூடி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் திருமதி தீபா சிங் ஒரு திட்டத்தை 09.09.2019 அன்று திறந்து வைத்தார்.
பிரிவு 371
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை வழங்கும் 371 வது பிரிவு ரத்து செய்யப்படாது என்று கூறினார்.
- குவஹாத்தியில் உள்ள வடகிழக்கு கவுன்சிலின் (என்.இ.சி) 68 வது மாநாட்டில் உரையாற்றிய திரு ஷா, 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 371 வது பிரிவும் ரத்து செயப்படுமோ என்று மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
வரையாடு
- 2018 இல் முகூர்த்தி தேசிய பூங்காவில் 568 ஆக இருந்த நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 612 ஆக உயர்ந்துள்ளது. இந்த பூங்காவில் விலங்குகளின் எண்ணிக்கை இரண்டாண்டுகளாக அதிகரித்து கொண்டிருக்கின்றது என்று அதிகாரிகள் தெரிவித்தனர், அதாவது 2016 முதல் நீலகிரி ஐபெக்ஸ் என்றழைக்கப்படும் வரையாட்டின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
சூறாவளி ஃபாக்சாய்
- ஜப்பானின், டோக்கியோ பெருநகரப் பகுதி ஃபாக்சாய் என்றழைக்கப்படும் பலத்த சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது .டோக்கியோ விரிகுடா வழியாக, மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், தலைநகருக்கு கிழக்கே சிபாவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இமேஜிங்இன்ஃப்ரா-ரெட்ஸ்பெக்ட்ரோமீட்டர்
- ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள ‘இமேஜிங் இன்ஃப்ரா-ரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர்’ மூலம் படம் பிடிக்கப்பட்டு லேண்டர் விக்ரம் கண்டறியப்பட்டுள்ளது.
- இமேஜிங் இன்ஃப்ரா-ரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்பது சந்திரனில் உள்ள தாதுக்களின் தன்மையைப் படிப்பதற்கும் நீர் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் சந்திரயான் -2 இன் ஆர்பிட்டரில் உள்ள ஒரு கருவியாகும்.
இந்தியப் பெருங்கடல் மாநாடு 2019
- இந்த மாநாட்டின் கருப்பொருள், “இந்தியப் பெருங்கடல் பகுதியைப் பாதுகாத்தல்: பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற சவால்கள்” என்பதாகும்.
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ
- பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ”பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ” திட்டத்தை” அனைத்திந்திய அளவில், அதாவது 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாடு முழுவதும் உள்ள 640 மாவட்டங்களிலும் விரிவுபடுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இத்திட்டம் நாட்டின் 161 மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து, தற்போது அனைத்திந்திய அளவில் செயல்படுத்துவதற்காக விரிவுபடுத்தப்பட உள்ளது.
- இத்திட்டமானது 2015-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
- பாலின வேறுபாடு மிகுந்துள்ள மாவட்டங்களில் குறைந்து வரும் குழந்தைகள் பாலின விகிதத்தை (Child sex ratio) தடுப்பதற்காகவும், பெண்கள் மேம்பாட்டோடு தொடர்புடைய பிரச்சனைகளை களைவதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
- தற்போது நடப்பில் இத்திட்டமானது மூன்று அமைச்சகங்களின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்படுகின்றது.
- மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
- மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
- இத்திட்டம் தற்போது மோசமான குழந்தைகள் பாலின விகிதமுடைய (CSR) 161 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
- இத்திட்டத்தின் பிற நோக்கங்கள்
- பாலினம் சார்புடைய குழந்தை பாலினத் தேர்வு நீக்கலை தடுத்தல் (Prevent Gender based Sex-selective elimination).
- பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் உயிர் வாழ்தலை உறுதி செய்தல்
- பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தல்.
- இத்திட்டமானது 1994- ன் முன்-கருத்தரித்தல் மற்றும் முன்கூட்டியேயான குழந்தைகள் பாலின கண்டறிதல் தொழிற்நுட்ப சட்டத்தின் (Pre-Conception & Pre-Natal Diagnostic Technique Act 1994) சரியான செயல்படுத்தலை உறுதி செய்ய உதவும்.
- குழந்தைகள் பாலின விகிதம் (CSR) என்பது 0 முதல் 6 வயது வரையிலானவர்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு எத்தனை பெண் குழந்தைகள் உள்ளனர் என்ற எண்ணிக்கையாகும்.
- 1961ல் 976 ஆக இருந்த CSR ஆனது, 2011 கணக்கெடுப்பின் படி 918 ஆக குறைந்துள்ளது.