IVRS சேவை
- கொரோனா வைரஸ் தொடர்பான ஐவிஆர்எஸ் தானியங்கி குரல் வழி சேவையை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- 9499912345 என்ற அவசர உதவி எண்ணில் கொரோனா தொடர்பான விளக்கங்களை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொரோனாவுக்கு மருந்தாக கரடியின் பித்த நீர் - சீனா
- சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரடியின் பித்த நீரால் தயாரிக்கப்பட்ட ஊசியை செலுத்தலாம் என்று அந்த நாடு அறிவுறுத்தியுள்ளது.
- இந்த தகவலை நேஷனல் ஜியாகிரபிக் வெளியிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
- சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இந்த ஊசியை பயன்படுத்த உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
- ஓர் உயிருள்ள கரடியிலிருந்து எடுக்கப்படும் பித்த நீர் காலம்காலமாக சீனாவின் பாரம்பரிய மருந்தில் பயன்படுத்தி வருகின்றனர்.
- கடந்த 18ம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு நோய்களை குணமாக்க கரடியின் பித்த நீரை அந்த நாட்டில் மருந்தாக உட்கொண்டு வருகின்றனர்.
- பித்த நீரில் அதிகளவில் இருக்கும் ursodeoxycholic கல்லீரல் நோய் மற்றும் பித்தப்பைக் கற்களுக்கு நிவாரணியாக இருக்கும் என்று சீன மக்கள் நம்புகின்றனர்.
- தற்போது இந்த ஊசியை கொரோனாவுக்கு மருந்தாக பயன்படுத்துமாறு சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
- கொரோனா தொற்றுக்குப் பின்னர் சீனா இதுபோன்று பரிந்துரை செய்து இருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களை கவலை அடையச் செய்துள்ளது.
- ஒரு பக்கம் விலங்குகளை சாப்பிடுவதால் நோய் தொற்று பரவிக் கொண்டு இருக்கும்போது, கரடியின் பித்த நீரை பரிந்துரைத்து இருப்பது உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தனியார் ஆய்வகங்களில் இலவசமாக பரிசோதனை : SC உத்தரவு
- உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் ஷசாங்க் தியோ சுதி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில், ‘கொரோனா பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.
- இப்பரிசோதனைகளை மக்களுக்கு இலவசமாக கிடைக்க செய்ய வேண்டும். கொரோனா அதிகரித்தும் வரும் நிலையில், பாதிககப்பட்டவர்கள், இறந்தவர்கள் பற்றிய தகவல்களை நாடு முழுவதும் தெரிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.
- இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ் ரவீந்திர பாட் அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, ‘118 ஆய்வகங்கள் மூலம் நாளொன்றுக்கு 15,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
- இதனை அதிகரிப்பதற்காக மேலும் 47 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது,’ என மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
- இதையடுத்து, ‘தனியார் ஆய்வகங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வகங்கள் வசூலித்த கூடுதல் கட்டணத்தை அரசு திருப்பி தர வேண்டும்.
- மக்களுக்கு இலவசமாக பரிசோதனை நடத்த வேண்டும். கொரோனா பாதிப்பு விவரங்களை, தொலைக்காட்சி சேனல்கள் மூலம் தெரிவிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை வலியுறுத்த வேண்டும்,’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
SBI - வட்டி குறைப்பு
- சேமிப்பு கணக்கில் உள்ள டெபாசிட்களுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீண்டும் குறைத்துள்ளது.
- ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன் வட்டியை 0.75 சதவீத வட்டியை குறைத்ததை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி ரெப்போ அடிப்படையிலான கடன்களுக்கும் அதே அளவு வட்டியை குறைத்தது.
- தற்போது, எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடன்களுக்கு வட்டியை 7.75 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக குறைத்துள்ளது.
- இது நாளை அமலுக்கு வருகிறது. இதுபோல், சேமிப்பு கணக்கில் உள்ள டெபாசிட் தொகைக்கான வட்டியை கடந்த மாதம் 11ம் தேதி 3 சதவீதமாக இந்த வங்கி குறைத்திருந்தது. தற்போது மேலும் 0.25 சதவீதம் குறைத்து 2.75 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
கொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர்
- கொரோனா நிவாரண நிதிக்கு, டுவிட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி 1 பில்லியன் டாலர் நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது அவரது சொத்தில், 28 சதவீதம் ஆகும்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - மே மாதம்
- மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
19 பேர் கொண்ட நிபுணர் குழு - கரோனா சிகிச்சை
- தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- இவர்கள் மற்ற நாடுகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவ்வப்போது வரும் நிகழ்வுகளின் தரவுகளை ஆராய்ந்தும் வழிகாட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.
- தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டு 12 குழுக்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு நோய்த்தொற்று தடுப்பு, தமிழக மக்களுக்கான பிரச்சினைகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள்,போக்குவரத்து, உணவுப் பதுக்கல் தடுப்பு, தொற்றுத்தடுப்பு ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- இந்நிலையில் தொற்றுப் பரவலைத் தடுக்க அமைக்கப்பட்ட குழுவில் நச்சுயிரியல் நிபுணர்களை இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
- மாநிலத்தில் தொற்றுப்பரவலைத் தடுக்க 19 நிபுணர்கள் அடங்கிய குழுவை சுகாதாரத்துறை அமைத்துள்ளது.
- சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், நிபுணர் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- இந்த நிபுணர் குழுவில் சென்னை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ரகுநந்தன், சென்னை மருத்துவக் கல்லூரியில் ஓய்வுபெற்ற மருந்து துறை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீதர், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் பரந்தாமன், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியர் டாக்டர் சந்திரசேகர், சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர் ராமசுப்ரமணியன், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் துறைத்தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கோவிட் - 19 தொற்றைக் கட்டுப்படுத்த 5டி திட்டம்
- தில்லி ஒன்றியப் பிரதேசத்தில் கோவிட் - 19 தொற்றைக் கட்டுப்படுத்த தில்லி அரசு 5டி (5T) என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
- 5 திட்டமானது சோதனை, கண்காணிப்பு அல்லது தடமறிதல், குழுவேலை, சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
- இந்தச் சோதனைத் திட்டத்தின் கீழ், தில்லி அரசானது தில்லியில் இந்த நோய் பரவிக் காணப்படும் முக்கியமானப் பகுதிகளில் 1 இலட்சம் விரைவுச் சோதனைகளை மேற்கொள்ள இருக்கின்றது.
ஆச்சரியக் கோழி
- டைனோசரஸ் காலத்தைச் சேர்ந்த ஒரு நவீன காலப் பறவையின் மிகப் பழமையான புதைபடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்தச் சிறிய புதைபடிவமானது “ஆச்சரியக் கோழி" என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இது நெதர்லாந்தின் மாஸ்ட்டிரிச்சிற்கு அருகிலுள்ள சிண்ட் பீட்டர்ஸ்பெர்கின்சுண்ணாம்புக் கல்லில் காணப் பட்டது. இது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
- இது எந்தவொரு காலத்திலும் இல்லாத வகையில் சிறந்த முறையில் பாதுகாக்கப் பட்ட புதைபடிவ பறவை மண்டையோடுகளில் ஒன்றாக உள்ளது.
- இந்தப் புதைபடிவமானது தற்காலத்தியப் பறவைகளின் முந்தைய இனங்கள் எப்போது மற்றும் எப்படி உருவானது என்பதைக் கண்டறிய ஒரு சிறந்த ஆதாரமாக விளங்குகின்றது.
- மாஸ்ட்டிரிட்ச் நகரமானது மாஸ்ட்டிரிட்ச் ஒப்பந்தத்திற்காகவும் 1992 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யூரோ நாணயத்தின் பிறப்பிடமாகவும் புகழ்பெற்று விளங்குகின்றது.