அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனை
- ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அதிகம் வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவிலிருந்து பி.வி. சிந்து மட்டும் இடம் பெற்றுள்ளார்.
- 2019 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையில் அதிகம் வருமானம் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
- அதில் இந்தியாவிலிருந்து பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து மட்டும் இடம் பெற்றுள்ளார்.
- ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 15 பேர் கொண்ட இந்தப் பட்டியலில், ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் சிந்து 13 ஆம் இடத்தில் இருக்கிறார்.
- அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
- ஆண்டுக்கு செரினா சுமார் 3 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
- இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா இடம் பெற்றுள்ளார். அவரது ஆண்டு வருமானம் இரண்டரை கோடி ரூபாய் ஆகும்.
பாரத ரத்னா விருது
- குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் நானாஜி தேஷ்முக், பாடகர் பூபேன் ஹஸாரிகா ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கி கெளரவிக்கப்பட்டது.
- இதில் நானாஜி தேஷ்முக், பூபேன் ஹஸாரிகா ஆகியோர் மறைவுக்குப் பிறகு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
- தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கான விருதை வழங்கினார்.
- அவர்களில் பிரணாப் முகர்ஜி தனக்கான விருதை பெற்றுக்கொண்டார். மறைந்த நானாஜி தேஷ்முக்கிற்கான விருது, அவரது நெருங்கிய உறவினர் விக்ரம்ஜீத் சிங்கிடமும், பூபேன் ஹஸாரிகாவுக்கான விருது அவரது மகன் தேஜிடமும் வழங்கப்பட்டன.
- இத்துடன் பாரத ரத்னா விருது பெற்றவர்களின் எண்ணிக்கை 48 ஆகியுள்ளது.
வேலூர் மக்களவை தேர்தல்
- வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகனுமான கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
- வாக்கு எண்ணிக்கை வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று மிகுந்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.
‘கம்பனில் பிரமாணங்கள் '
- இலங்கை ஜெயராஜ் எழுதிய ஏவி.எம்.அறக்கட்டளைச் சொற்பொழிவு புத்தகமான ‘கம்பனில் பிரமாணங்கள்’ என்ற புத்தகத்தை மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வெளியிட தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக்கொண்டார்.
- மேலும் சொற்பொழிவு குறுந்தகடுகளையும் அவர் வெளியிட்டார். ‘கம்பனும் வால்மீகியும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார்.
துணை ஜனாதிபதி - வெங்கையா நாயுடு
- துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது.
- இந்த 2 ஆண்டுகளில் நமது நாட்டில் 330 பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கிறார்.
- 4 கண்டங்களில் உள்ள 19 நாடுகளுக்கு பயணம் செய்து இருக்கிறார்.
- பனாமா, கவுதிமாலா, கோஸ்டரிக்கா, மால்டா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்த முதல் இந்திய துணை ஜனாதிபதி என்ற பெருமை அவருக்கு உண்டு.
- மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
- 61 பட்டமளிப்பு விழாக்களில் உரை நிகழ்த்தி இருக்கிறார்.
- 25 சிறப்பு சொற்பொழிவு ஆற்றி உள்ளார். மாணவ-மாணவிகளுடன் 35 நிகழ்ச்சிகளில் கலந்துரையாடி இருக்கிறார்.
- பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு 97 முறை வருகை புரிந்துள்ளார்.