நிதி எழுத்தறிவு வாரம்
- இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 14, 2020 வரை “நிதி எழுத்தறிவு வாரம் 2020” ஐ நடத்துகிறது. 2020 ஆம் ஆண்டிற்கான நிதி எழுத்தறிவு வாரத்தின் கருப்பொருள் “சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்”.
- இந்த ஆண்டு இந்தியாவின் மத்திய வங்கி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் கவனம் செலுத்த உள்ளது.
டேமியன் புயல்
- மேற்கு ஆஸ்திரேலியாவின் யூக்லா மாவட்டத்தில் பகல் நேர வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
- அதே வேளையில், டேமியன் புயல், வடமேற்கு ஆஸ்திரேலியாவின் வளங்கள் நிறைந்த பில்பாரா வட்டாரத்தைத் தாக்கியது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளியால் மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் கூரைகள் காற்றில் பறந்தன.
- டேமியன் புயல், ‘மிகவும் அழிவுகரமான காற்று’, ‘மிக அதிக மழை’ ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளதாகவும், இதனால் மிகவும் ஆபத்தான புயல் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இதுதொடர்பாக விடுக்கப்பட்ட சிவப்பு அவசர எச்சரிக்கையால், மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குண்டு துளைக்காத ஹெல்மெட்
- இந்திய ராணுவத்தில் மேஜர் அனூப் மிஸ்ரா ஏ.கே. 47 ரக துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாத ஹெல்மெட்டினை தயாரித்திருக்கிறார். இது, உலக அளவில் முதல் குண்டு துளைக்காத ஹெல்மெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
- இவர் 'ஸ்னைப்பர்' ரக துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்க முடியாத கவச உடையை கடந்த ஆண்டு தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை ஹெல்மெட்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய ஆசியா வர்த்தக சபை
- மத்திய ஆசியா வர்த்தக சபை புதுடெல்லியில் நடைபெற்றது. இதற்கு இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இம்மாநாட்டில் கலந்துகொண்டார்.
- மத்திய ஆசியா நாடுகளில் இருந்து கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகள் கலந்து கொண்டது.
- இந்நாடுகளுக்கு இடையே முதலீடு மற்றும் பங்களிப்புத்துவத்தை இந்தியா ஒன்றாகக் கையாண்ட முதல் நிகழ்வாகும்.