Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 25th July 19 Content

தேசிய செய்திகள்

தரவு சேகரிப்பு மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான மையத்தை ஐ சி எம் ஆர் தொடங்கியது

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) மருத்துவ புள்ளிவிவரங்களுக்கான தேசிய நிறுவனம் (ஐ.சி.எம்.ஆர்-நிம்ஸ்), மக்கள் தொகை கவுன்சிலுடன் இணைந்து தேசிய தரவு தர மன்றத்தை (என்.டி.கியூ.எஃப்) அறிமுகப்படுத்தியது.

பீகார்

சந்தேகத்துக்குரிய விண்கல் பீகாரில் கண்டுபிடிப்பு

  • பீகாரின் மதுபானி மாவட்டத்தில் 10 கிலோகிராம் எடையுள்ள மற்றும் காந்த பண்புகளைக் கொண்ட ஒரு விண்கல் ஜூலை 24 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, முதலமைச்சர் நிதீஷ் குமாரின் அறிவுறுத்தலின் பேரில் அவ்விண்கல் பாட்னாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

திரிபுரா

திரிபுராவில் மின் திட்டங்களுக்கு ஏடிபி சுமார் 2000 கோடி ரூபாய் வழங்கவுள்ளது

  • திரிபுராவில் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக 1,925 கோடி ரூபாய் திட்டத்தை ஆசிய மேம்பாட்டு வங்கி அனுமதித்துள்ளது. ரோக்கியா திட்டத்தின் திறனை மேம்படுத்துவதற்கும், கும்தி ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்தை நவீனப்படுத்துவதற்கும் இந்த திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

இந்தியா-நேபாள உறவை மேலும் வலுப்படுத்தும் மோத்திகரி- அமலேக் கஞ்ச் எண்ணெய் குழாய் இணைப்பு

  • மோத்திகரி- அமலேக் கஞ்ச் எண்ணெய் குழாய் இணைப்பு எனும் மைல்கல் திட்டத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐஓசி) மற்றும் நேபாள ஆயில் கார்ப்பரேஷன் (என்ஓசி) இணைந்து நிறைவு செய்துள்ளது. இது இந்தியாவிலிருந்து வரும் முதல் நாடுகடந்த பெட்ரோலிய குழாய் மற்றும் முதல் தெற்காசிய எண்ணெய் குழாய் நடைபாதையாகும். அதுமட்டுமன்றி இது நேபாளத்தின் முதல் எண்ணெய் குழாய் பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல்

கடந்த 3 ஆண்டுகளில் 239 செயற்கைக்கோள்களை ஏவியது இஸ்ரோவின் அன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்

  • கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 6,289 கோடி ரூபாய் மதிப்புள்ள 239 செயற்கைக்கோள்களை இஸ்ரோவின் வணிகப் பிரிவான அன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகம் & பொருளாதாரம்

பேஸ்புக்கிற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதம்

  • நுகர்வோரின் தனியுரிமையை மீறியதற்காக அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் பேஸ்புக்கிற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்தனர். இதுவரை விதிமீறலுக்கும் அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மிகப்பெரிய அபராதங்களில் இது ஒன்றாகும்.

அமெரிக்காவும் சீனாவும் ஜூலை 30 அன்று ஷாங்காயில் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளன

  • அமெரிக்கா மற்றும் சீன பேச்சுவார்த்தையாளர்கள் ஜூலை 30 அன்று ஷாங்காயில் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவுள்ளனர் ,

    “அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதே இப்பேச்சுவார்த்தையின் நோக்கமாகும். புரிந்துணர்வு ஒப்பந்தம் & அமைச்சரவை ஒப்புதல்
  • சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய நிறுவனத்தை ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.ஓ.எச் உடன் இணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய நிறுவனத்தை ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.ஓ.எச் உடன் இணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது பொது நிதிகளை திறம்பட நிர்வகிப்பதோடு , தொழில்சார் சுகாதாரத் துறையில் மேம்பட்ட நிபுணத்துவத்தின் அடிப்படையில் இரு நிறுவனங்களுக்கும் உதவும்.

  • விருதுகள்

    ஐஐடி-மெட்ராஸ் அணி எலோன் மஸ்க்கின் பாராட்டு விருதை வென்றது

    • ஐ.ஐ.டி-மெட்ராஸைச் சேர்ந்த மாணவர் கண்டுபிடிப்பாளர்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஸ்பேஸ்எக்ஸ் ஒழுங்கமைக்கப்பட்ட போட்டியில் ஹைப்பர்லூப் பாட் வடிவமைப்பதன் மூலம் தொழில்நுட்ப தொழில்முனைவோர் எலோன் மஸ்க்கின் பாராட்டைப் பெற்றனர்.

    நியமனங்கள்

    ஆந்திர மாநில ஆளுநர்

    • ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள ராஜ்பவனில் ஆந்திராவின் புதிய ஆளுநராக ஸ்ரீ பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் பொறுப்பேற்றார். அவருக்கு ஆந்திர உயர்நீதிமன்ற செயல் தலைமை நீதிபதி சி. பிரவீன் குமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

    அஜய் பல்லா புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்

    • 1984 தொகுதி ஐ.ஏ.எஸ் அதிகாரியும், தற்போது மின் அமைச்சின் செயலாளருமான அஜய் குமார் பல்லா, உடனடியாக உள்துறை அமைச்சகத்திற்கு சிறப்பு கடமை (ஓ.எஸ்.டி) அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பிரிதி படேல் பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்
    • பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வம்சாவளியினரான பிரிதி படேலை நாட்டின் உள்துறை செயலாளராக நியமித்துள்ளார்.

    புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்

    “சந்திர சேகர் – கருத்தியல் அரசியலின் கடைசி சின்னம்”- புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார்

    • நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, “சந்திர சேகர் – கருத்தியல் அரசியலின் கடைசி சின்னம்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தை மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் மற்றும் திரு. ரவி தத் பாஜ்பாய் எழுதியுள்ளனர்.

    தரவரிசை மற்றும் குறியீடுகள்

    உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு -2019ல் இந்தியா 52 வது இடத்தைப் பிடித்தது.

    • மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல், புதுடில்லியில் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டு (ஜிஐஐ) 2019 ஐ அறிமுகப்படுத்தினார்.இதில் இந்தியா 52 ஆவது இடத்தை இடித்துள்ளது.கடந்த ஆண்டு 57 ஆவது இடத்தில் இடத்தில இருந்தது குறிப்பிடத்தக்கது.

    விளையாட்டு செய்திகள்

    தேசிய விளையாட்டுக்களை நடத்த கோவா அரசு புதிய தேதிகளை கேட்டுள்ளது.

    • தேசிய விளையாட்டுக்களை நடத்துவதற்கு கோவா அரசு புதிய தேதிகளை கோரியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டுகளை நடத்துவதற்கான காலக்கெடுவை அடிக்கடி தவறவிட்டதற்காக கோவா அரசுக்கு ஐ.ஓ.ஏ சமீபத்தில் அபராதம் விதித்தது. முன்னதாக தேசிய விளையாட்டுக்கள் மார்ச்-ஏப்ரல் 2019 இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் மக்களவை தேர்தல்கள், மாநிலத்தில் இடைத்தேர்தல் மற்றும் எச்.எஸ்.சி தேர்வுகள் காரணமாக நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

    டோக்கியோ 2020 ஒலிம்பிக் மறுசுழற்சி செய்யப்பட்ட மின்னணுக் கழிவுகளில் தயாரிக்கப்பட்ட பதக்கங்களை வெளியிட்டது

    • டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் விளையாட்டு வீரர்களின் “ஆற்றலை” பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதக்கங்களை வெளியிட்டனர். பழைய மின்னணு கழிவுகளில் சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து அவை தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐசிசி தரவரிசை முதலிடத்தை பிடித்தார் இங்கிலாந்தின் ஆண்டர்சன்:

    • தென் ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் பந்து வீச்சாளர்கள், பேட்ஸ் மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 882 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
    • அதேவேளையில் இந்த சம்மரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான உள்நாட்டு இங்கிலாந்து அணி டிரா செய்திருந்த போது 9 விக்கெட்கள் கைப்பற்றியிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 892 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
    • பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 5-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

    ராணுவம், வர்த்தகம், விவசாயம் உள்பட பல ஒப்பந்தம் கையெழுத்து ருவாண்டாவில் இந்திய தூதரகம் ரூ1379 கோடி நிதியுதவி:

    • ருவாண்டாவில் இந்திய தூதரகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் மோடி, ரூ.1379 கோடி நிதி உதவி அறிவிப்பையும் வெளியிட்டார்.
    • பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ருவாண்டாவில் இந்திய தூதரகம் திறக்கப்பட உள்ளது. இதனால், பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவதற்கான வசதிகள் உருவாக்கப்படும்.
    • இருநாடுகளுக்கும் இடையே தோல் மற்றும் விவசாயம் ஆராய்ச்சி, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, ராணுவம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து இரண்டு கட்டமாக தலா ரூ.689 கோடி வீதம், மொத்தம் ரூ.1379 கோடி நிதியை ருவாண்டாவுக்கு அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

    பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம்(women and Child Development Ministr) ‘Childline1098’ Contest ஐ தொடங்குகிறது:

    • உலக நாடுகளிடையே கடத்தப்படுதலை எதிர்க்கும் வகையில் ,பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம்(women and Child Development Ministr) ‘Childline1098’ க்கான சின்னம் மற்றும் குறிச்சொல்லை(logo and tagline) அனுப்ப மக்களை அழைத்துள்ளது.
    • இது இந்தியாவின் முதல் 24 மணி நேர இலவச உதவி மற்றும் , அவசர தொலைபேசி சேவை ஆகும்.
    • தற்பொழுது, ‘Childline1098’, 450 இடங்களிளும் 76 முக்கிய ரயில் நிலையங்களும் இந்தியா முழுவதும் இயங்குகிறது.

    மூன்று இந்திய மாநிலங்கள் Swachh Survekshan Grameen 2018 ஐ அறிமுகப்படுத்தியது:

    • மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் Swachh Survekshan Grameen 2018 திட்டத்தை தொடங்கியது (SSG-2018) , இது ஜூலை 13, 2018 அன்று குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
    • இந்த திட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள 698 மாவட்டங்களில் உள்ள 6980 கிராமங்களும் உள்ளடங்குகிறது.

    ரிஷி ஸ்ரீவாஸ்தா Tata AIA –யின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டியாக நியமிக்கப்படுகிறார் :

  • டாடா ஏஐஏ லைஃப் சமீபத்தில் ரிஷி ஸ்ரீவஸ்தவா–வை புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக(CEO & MD) நியமித்துள்ளது.
  • ஸ்ரீவைஷ்டா தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி நவீன் டஹ்லியானியின் இடத்தை நிரப்புகிறார்.

  • இந்தியா மற்றும் உகாண்டா

    மோடி 3 நேஷன் விஜயத்தின்போது உகாண்டாவுடன் 4 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது:

    • இந்தியா மற்றும் உகாண்டா, பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும்(Defence Cooperation), உத்தியோகபூர்வ பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு தொடர்பாகவும் மற்றும் பொருள் சோதனை ஆய்வகம்(Material Testing Laboratory),கலாச்சார பரிவர்த்தனை திட்டம்(Cultural Exchange Programme) போன்ற பல்வேறு துறைகளில் நான்கு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது.
    • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உகாண்டா ஜனாதிபதி யுவேரி முசவேனி ஆகியோருக்கு இடையேயான பிரதிநிதி–நிலை பேச்சுவார்த்தைகளின் பின்னர் கம்பாலாவில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

    பிரேசில்

    • பிரேசில் நாட்டில் பார்ப்பதற்கு அதிக மரங்களை கொண்ட பார்க்கை போல, காட்சியளிக்கிறது ஒற்றை முந்திரி மரம். இந்த மரம் கடந்த 1994ம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய முந்திரி மரம் என்பதற்காக கின்னஸ் புக்கில் இடம் பெற்றுள்ளது. இது 90 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டு பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த பிராங்கி முந்திரி பார்க்கினை காண ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிரேசிலுக்கு வருகை தருகின்றனர். இந்த மரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் முந்திரி பழங்களை வழங்குகிறது. இவற்றை ஜாம், பழச்சாறுகளாகவும் சாப்பிடலாம். 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மரத்தின் கிளைகள் உயரமாக வளராமல், பக்கவாட்டில் வளர்ந்துள்ளது.

    இஸ்ரோ

    • இஸ்ரோவின் வணிக பிரிவான ஆண்ட்ரிக்ஸ் கார்பரேஷன் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் வணிக ரீதியாக 239 செயற்கை கோள்களை அனுப்பி உள்ளது. இதன் மூலம் ரூ.6,289 கோடி வருமானம் ஈட்டப்பட்டு உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நாட்டின் பல்வேறு தேவைகளுக்காக நவீன செயற்கைகோள்களை விண்ணில் அனுப்பி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்து வரும் இஸ்ரோ, தனியார் செயற்கை கோள்கள் மற்றும் வெளிநாட்டு செயற்கை கோள்களையும் விண்ணுக்கு அனுப்பி வைக்கிறது.

    சந்திரயான்-2

    • முதன் முதலாக சந்திரயான்-2 விண்கலத்தின் உயரம் நேற்று பிற்பகல் 2.52 மணிக்கு அதிகரிக்கப்பட்டது. அப்போது சமிக்ஞை மூலம் சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள மோட்டார் இயக்கப்பட்டது. இந்த மோட்டார் 90 வினாடிகள் இயங்கியதன் மூலம் விண்கலத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சந்திரயான்-2 விண்கலம் தற்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 241.5 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,162 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வருகிறது. இரண்டாவது தடவையாக நாளை (வெள்ளிக்கிழமை) பகல் 1 மணிக்கு சந்திரயான்-2-ல் உள்ள மோட்டார் மீண்டும் இயக்கப்பட்டு, விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்படும். அதன்பிறகு திங்கட்கிழமை மூன்றாவது தடவையாக சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்படும். நான்காவது தடவையாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந் தேதி சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தப்படும். அப்போது சந்திரயான்-2 பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி சந்திரனின் சுற்றுவட்ட பாதைக்கு செல்லும். அதன்பிறகு நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 படிப்படியாக அதை நெருங்கும். செப்டம்பர் 7-ந் தேதி சந்திரயான்-2 விண்கலம் சந்திரனில் தரை இறங்கும்.

    நாடாளுமன்ற மாநிலங்களவை

    • நாடாளுமன்ற மாநிலங்களவையில் திவால் சட்டத்தில் 7 திருத்தங்கள் செய்வதற்கான மசோதாவை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று அறிமுகம் செய்தார்.14 நாட்களுக்குள் திவால் விண்ணப்பம் ஏற்கப்படாதபோது அல்லது நிராகரிக்கப்படாதபோது உரிய அதிகாரிகள், அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக தரவும் மசோதா வழிவகுக்கிறது. திவால் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் 330 நாட்களுக்குள் செய்து முடிக்கவும் மசோதா வழி வகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழக அனல் மின் நிலையம்

    • அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த, வெளிநாடுகளில் இருந்து, 910 கோடி ரூபாய்க்கு, 20 லட்சம் டன் நிலக்கரி வாங்க, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.துாத்துக்குடி, திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு, 4,320 மெகாவாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், தினமும், மின் உற்பத்தி செய்ய, 72 ஆயிரம்டன் நிலக்கரி தேவை.அதில், 61 ஆயிரம் டன், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள, பொதுத்துறையைச் சேர்ந்த, 'கோல் இந்தியா' நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது. எஞ்சிய நிலக்கரி, தனியாரிடம் வாங்கப்படுகிறது.அதன்படி, வரும் நவம்பர் முதல், 2020 மார்ச் வரை பயன்படுத்த, திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் துறைமுகம் மற்றும் துாத்துக்குடி துறைமுகம் வழியாக, வெளிநாடுகளில் இருந்து, தலா, 10 லட்சம் வீதம், 20 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது

    நவீன ‘ரோபோ

    • அபுதாபியில் அமீரக பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் முப்பரிமாண பிரதியெடுக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நவீன ‘ரோபோ’ ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அந்த பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வு கூடங்களின் முதன்மை பயிற்றுனர் டாக்டர் படி நஜ்ஜார் தலைமையிலான குழுவினர் ‘ரோபோ’வை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    UAE

    • ஒட்டகத்தின் சாணத்தை கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பொருள் ஒன்று தயாரிக்கப்படுகிறது. ராஸ் அல் கைமா எனும் பகுதியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் உள்ளன. இது குறித்து அமீரக அரசு கூறுகையில், ‘10ல் ஒரு பங்கு ஒட்டக சாணமும், 9 பங்கு நிலக்கரியும் சேர்த்து 1400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்படும்போது சிமெண்ட் கலவை கிடைக்கிறது. தினமும் 50 டன் சாணம் ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் 2021ம் ஆண்டுக்குள் 75% ஒட்டக கழிவுகள் குப்பைக்கு செல்லாமல் அத்தியாவசிய தேவைக்குப் பயன்படும்’ என கூறியுள்ளது.
    Share with Friends