திருவள்ளுவர் தமிழ் சங்கம்
- மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம், இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்(நேரு யுவகேந்திரா), பாரதிய வித்யாபவன் ஆகியவை சார்பில் 33-வது அறிவுக்களஞ்சியம் விருதுகள் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர், கிழக்கு மாடவீதி, பாரதிய வித்யாபவன் அரங்கில் நடத்தப்பட்டது .
- சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி மெ.சொக்கலிங்கம், மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி, மூத்த வக்கீல் ஆர்.காந்தி, விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் கண்ணன் புகழேந்தி, ராணிமேரி கல்லூரியின் இசைத்துறை தலைவர் பேராசிரியர் இரா.அபிராமசுந்தரி ஆகியோருக்கு அறிவுக்களஞ்சியம் விருதுகள் வழங்கப்பட்டன.
- அதேபோல், எஸ்.நிவேதிகா, பி.பிரிஜிலின் பால், ஜெ.அதுல்யா ஆகிய பள்ளி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
சுதர்சன் பட்நாயக்
- ராம் குமார்- “ 56 வது தேசிய கலைக் கண்காட்சியில் “ அவரின் கற்சிற்பம் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- அதற்கு அவர் சூட்டிய பெயர் “ மீண்டும் புதைக்கப்படும் இயற்கை வளங்கள் “.
- பாஸ்டன் நகர கடற்கரையில் ’பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து பெருங்கடல்களை காப்பாற்றுங்கள்’ (Stop Plastic Pollution, Save Our Ocean) என்ற கருத்து தொணிக்க சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய மணல் சிற்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
- இதன் மூலம் சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றியாளராக சுதர்சன் பட்நாயக் அறிவிக்கப்பட்டார்.
மோமோ-F4’ ராக்கெட்
- 20 கிலோ எடையுள்ள செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய ‘மோமோ’ என்ற ராக்கெட்டுகள் தனியார் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படுகின்றன.
- திரவ ஆக்சிஜன் மற்றும் எத்தனால் கலந்த எரிபொருளால் இயங்கும், சுமார் ஒரு டன் எடை கொண்ட இந்த ராக்கெட் கடந்த 2017, 2018 ஆண்டுகளில் பரிசோதிக்கப்பட்டபோது அந்த சோதனை முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதைதொடர்ந்து, கடந்த மே மாதம் இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
- இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவில் உள்ள டய்க்கி ஏவுதளத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தூரம் வரை மேல்நோக்கி பறந்து செல்லும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இன்று ’மோமோ-F4’ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
- ஆனால், புறப்பட்ட சில வினாடிகளில் என்ஜினின் செயல்பாடு திடீரென்று ஸ்தம்பித்துப் போனதால் சுமார் 13 கிலோமீட்டர் மட்டுமே பறந்துச் சென்ற ராக்கெட், தீப்பிழம்பாக மாறி கீழே விழ தொடங்கியது.
Parker Solar Probe
- மனிதனால் சூரியனுக்கு முதலில் ஏவப்பட்ட மிஷன் –Parker Solar Probe, ஒரு கார் அளவிலான ஆய்வு ஆகும்.
- இதுவரை எந்த மனிதநாளும் தயாரிக்கப்படாத அளவில் சூரியனை மிக நெருக்கமாக படிக்க இந்த மிஷன் உதவுகிறது.
- இந்த மிஷன் ஆகஸ்ட் 6 க்கு முன்னர் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான்
- ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டின் உயர் அமைதி சபையை கலைக்கும் ஆணையை வெளியிட்டார்.
- முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு சிறப்புக் குழுவாக இந்த சபை 2010 இல் மீண்டும் நிறுவப்பட்டது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ்
- டேவிஸ் கோப்பை தொடரில் விளையாட இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்கிறது என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் (AITA) பொதுச்செயலாளர் ஹிரோன்மோய் சாட்டர்ஜி இதனை தெரிவித்துள்ளது.
- 55 ஆண்டுகளில் இந்திய டென்னிஸ் அணி முதல்முறையாக பாகிஸ்தான் செல்கிறது. செப்டம்பர் 14, 15-ம் தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடக்கும் டேவிஸ் கோப்பையில் இந்தியா பங்கேற்கிறது.
இராணுவ அருங்காட்சியகம் - கடலுக்கு அடியில்
- ஜோர்டானின் தெற்கு துறைமுகமான அகாபாவில் உள்ள செங்கடலில் 90 அடிக்கும் அதிகமான ஆழத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.
- இங்கு பவளப்பாறைகளில் இடையே பீரங்கிகள், ராணுவ டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், இராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கவச வாகனங்கள் ஆகியவை நீருக்குள் நிறுத்தப்பட்டு உள்ளன.
- இவை ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு கடலில் இறக்கிவிடப்பட்டவை.
- இந்த அருங்காட்சியகத்தை எளிதாகக் கண்டுவிட முடியாது.
- ஆழ்கடலில் மூழ்கும் உபகரணங்களை வைத்துள்ளவர்கள், ஆழ்கடலில் மூழ்கும் வீரர்கள், முத்துக் குளிப்பவர்கள், கண்ணாடியாலான அடிப்புறம் கொண்ட படகுகளில் செல்பவர்கள் மட்டுமே இதனைக் கண்டு களிக்கலாம்.
பாரத ரத்னா விருது
- கடந்த ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமூக செயல்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரபல கல்வியாளர் மதன்மோகன் மாளவியா (மறைவுக்கு பின்) ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருது யாருக்கும் வழங்கப்படவில்லை.
- இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
- ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு இந்த விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார்.
ஐந்து ஆண்டு திட்டங்கள்
- இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள் (Five-Year Plans of India) என்பது 1947-2017 வரையில் இந்தியப் பொருளாதாரமானது திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இது ஐந்தாண்டுத் திட்டங்களாகப் பகுக்கப்பட்டு திட்டக் குழு (இந்தியா) (1947-2014) மற்றும் நிதி ஆயோக் (2014-2017) மூலம் வடிவமைக்கப்பட்டும், செயல்படுத்தப்பட்டும், மேற்பார்வையிடப்பட்டும் வருகிறது.
உலக பொருளாதாரம்
- உலக பொருளாதாரத்தில் 11வது இடத்திலிருந்த இந்தியாவை, கடந்த 5 ஆண்டுகளுக்குள் 5வது இடத்திற்கு பிரதமர் மோடி முன்னேற்றி உள்ளார்.
- 2024ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்த, மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.
- நாட்டின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
Mahila Shakti Kendra
- கிராமப் பெண்களுக்கு அதிகாரமளிக்க வகை செய்யும் மகளிர் சக்தி மையம் (Mahila Shakti Kendra) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
- இத்திட்டம் 2017-18 ம் ஆண்டு முதல் 20189-20ம் ஆண்டு வரையில் செயல்பாட்டில் இருக்கும்.
- சமுதாயப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு மத்திய அரசின் 60 சதவீத நிதியும் மாநில அரசுகளின் 40 சதவீத நிதியும் ஒதுக்கப்படும்.
- வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசு 90 சதவீத நிதியும் மாநிலங்கள் 10 சதவீத நிதியையும் ஒதுக்கும்.
BAN2401
- BAN2401 மூளையில் ஏற்படும் பிளேக் நோய் மற்றும் அல்சைமர் நோயின் அற்றலை குறைக்கிறது.
- மாசசூசெட்ஸ், கேம்பிரிட்ஜ்–இல் அமைந்துள்ள,ஜப்பான் சார்ந்த Eisai நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது .
- அல்சைமர் டிமென்ஷியாவின் அறிகுறிகளையும் மற்றும் மூளை மாற்றங்களையும் வெற்றிகரமாக தாக்கும் முதல் மருந்தாகும்.
எபோலா வைரஸ்
- சியரா லியோனில் ஒரு புதிய எபோலா வைரஸ் காணப்படுகிறது.எபோலா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் 11,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- மனிதர்களையும் பாதிக்கிறதா என்பதை தீர்மானிப்பதற்காக வட பாம்பாளி பகுதியில் புதிய வைரசை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் இப்போது சியரா லியோன் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆக,வெளவால் உட்கொள்வதை தடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
உலக ஹெபடைடிஸ் தினம் - 28 ஜூலை
- உலக ஹெபடைடிஸ் தினம்(World Hepatitis Day 2018) ஜூலை 28 அன்று காணப்படுகிறது.நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் எவ்வாறு சிகிச்சை செய்வது என்பது பற்றியும் கவனம் செலுத்துகிறது.
- “Test. Treat. Hepatitis” என்பதே இதன் கருப்பொருள் ஆகும்.
எவரெஸ்டை - கிளிமாஞ்சாரோ
- உலகின் மிக உயர்ந்த மலை சிகரமான எவரெஸ்ட், ஆப்ரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான கிளிமாஞ்சாரோவில் மூன்று நாட்களில் ஏறி, இந்தியாவைச் சேர்ந்த 17 வயது மாணவி சிவாங்கி பதக் புதிய சாதனை படைத்துள்ளார்.
- ஹரியாணா மாநிலம் ஹிசார் நகரைச் சேர்ந்த மாணவி சிவாங்கி பதக் (17 வயது).உலகின் மிக உயர்ந்த மலை சிகரமான எவரெஸ்ட், ஆப்ரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான கிளிமாஞ்சாரோவில் மூன்று நாட்களில் ஏறி, இந்தியாவைச் சேர்ந்த 17 வயது மாணவி சிவாங்கி பதக் புதிய சாதனை படைத்துள்ளார்.