Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 29th July 19 Content

தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம் - மாநில கவர்னர்

  • உத்தர பிரதேச மாநில கவர்னராக ஆனந்திபென் படேல் பதவியேற்றுக் கொண்டார்.
  • லக்னோ உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்த் மதுர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மத்திய பிரதேச கவர்னராக பதவி வகித்து வந்த ஆனந்திபென் படேலுக்கு உத்தர பிரதேச கவர்னர் பொறுப்பு வழங்கப்பட்டது.
  • இவர் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் ஆளுநராக பதவியில் இருந்தார் .
  • இவர் குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
  • இவர் 1987 முதல் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

மலேசியா

  • மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது.
  • இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தலைமையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசை நிர்வகித்து வருகின்றனர்.
  • இந்நிலையில், மலேசியாவில் கடந்த 2016ம் ஆண்டு மன்னராக பொறுப்பேற்ற 5-வது சுல்தான் அகமது, காரணம் எதுவும் தெரிவிக்காமல் கடந்த ஜனவரி மாதம் பதவியை ராஜினாமா செய்தார்.
  • இதனைத்தொடர்ந்து புதிய மன்னராக, மலேசியாவின் 9 மாநிலங்களை ஆளும் அரச குடும்பத்தினர்களில் ஒருவரான அல்-சுல்தான் அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
  • அதன்படி இன்று மலேசியாவின் 16வது மன்னராக அவர் முடிசூட்டப்பட்டார். இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

அமவுசி விமான நிலையம்

  • சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் , இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரத்தில் அமைந்துள்ளது.
  • இது லக்னோவின் அமவுசி என்ற இடத்தில் உள்ளதால், அமவுசி விமான நிலையம் என்றும் அழைக்கப்படுவது உண்டு.
  • இந்த நிலையத்துக்கு ஐந்தாவது இந்தியப் பிரதமராக இருந்த சரண் சிங்கின் பெயர் இடப்பட்டுள்ளது.
  • இந்திய அளவில் அதிகப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய நிலையம் இது.

முக்கிய நாட்கள்

சர்வதேச புலிகள் தினம் - ஜூலை 29

  • சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29 அன்று கொண்டாடப்படுகிறது .
  • 2018 ல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 புலிகள் உள்ளன.
  • கடந்த 2014 ல் எடுத்த கணக்கெடுப்பின்படி 2,226 புலிகள் இருந்தன.
  • தற்போது புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.

மருத்துவம்

ஹெபடைடிஸ் பி வைரஸ் (Hepatitis B virus )

  • தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் உள்ள பூட்டான், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகியவற்றுடன் வங்கதேசமும் ஹெபாடிடிஸ் பி வைரஸை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.
  • ஐந்து வயது குழந்தைகளிடையே இந்த கொடிய நோயின் தாக்கம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகியுள்ளது என்று WHO தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

மாநாடுகள்

இமயமலை மாநாடு

  • உத்தரகண்ட் மாநிலத்தின், முசோரியில் இமயமலை மாநாடு நடைபெறுகிறது.
  • இமயமலை மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதே இதன் நோக்கம் ஆகும்.

உ.பி. முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு

  • மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா லக்னோவில் உ.பி. முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை திறந்து வைத்தார்.
  • 65,000 கோடி மதிப்புள்ள 250 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்தியா-நேபாளம்

  • நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி காத்மாண்டுவில் இந்தியா-நேபாள தளவாட உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
  • வர்த்தக மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை எளிதாகவும், தொந்தரவில்லாமலும், செலவு குறைந்ததாகவும் மாற்றுவதில் ஸ்மார்ட் தளவாடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் கூறினார்.

நியமனங்கள்

அருணாச்சல பிரதேசம் - புதிய டி.ஜி.பி.

  • இட்டாநகர் காவல் தலைமையகத்தில் அருணாச்சல பிரதேசத்தின் புதிய போலீஸ் டைரக்டர் ஜெனரலாக (டிஜிபி) ஆர்.பி. உபாத்யாயா பொறுப்பேற்றார்.
  • இதற்கு முன் டி.ஜி.பியாக இருந்த எஸ்.பி.கே.சிங் மிசோரமுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இவர் இந்த பொறுப்பைப்பெற்றார்.

வி.கே.ஜோஹ்ரி

  • ஐபிஎஸ் அதிகாரி வி.கே.ஜோஹ்ரி எல்லை பாதுகாப்பு படையின் அடுத்த பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்தியப் பிரதேச கேடரின் 1984 பேட்ச் இந்திய போலீஸ் சேவை அதிகாரியான திரு ஜோஹ்ரி தற்போது அமைச்சரவை செயலகத்தின் கீழ் ராவில் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.

விளையாட்டு செய்திகள்

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டி

  • இந்திய குத்துச்சண்டை வீரர்கள் பாங்காக்கில் நடந்த தாய்லாந்து ஓபன் போட்டியில் ஒரு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலத்துடன் மொத்தம் எட்டு பதக்கங்களை வென்றனர்.

ஜனாதிபதி கோப்பை குத்துச்சண்டை

  • இந்தோனேசியாவின் லாபுவன் பாஜோவில் நடைபெற்ற 23 வது ஜனாதிபதி கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ பிரிவில் ஆறு முறை உலக சாம்பியனான மேரி கோம், மற்றும் 60 கிலோ பிரிவில் சிம்ரன்ஜித் கவுர் தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்றனர்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி

  • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் மூன்றாம் பதிப்பு அடுத்த ஆண்டு குவஹாத்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு இந்த முடிவை அறிவித்தார்.

ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் (German Grand Prix)

  • ரெட் புல்லின் ஓட்டுனர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஹோக்கன்ஹெய்மில் நடைபெற்ற ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார்.
  • வெர்ஸ்டாப்பன் ஃபார்முலா ஒன் சீசனின் இரண்டாவது பட்டத்தை வென்றுள்ளார்.

சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி

  • நடப்பு சாம்பியனான ஏர் இந்தியாவின் பக்தி குல்கர்னி 11 வது மற்றும் இறுதி சுற்றில் ஆந்திராவின் பிரத்யுஷா போடாவுக்கு எதிராக சமன் செய்து 46 வது தேசிய பெண்கள் சதுரங்க சாம்பியன்ஷிப்பை வென்றார்.

தடை ஓட்டபந்தயம்

  • வாஷிங்டன் : அமெரிக்க சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாளில் 400 மீ. தடை ஓட்டபந்தயத்தில் தலிலா முஹம்மது உலக சாதனையை முறியடித்தார்.
  • அமெரிக்காவின் லோவாவில் உள்ள டெஸ் மொயினில் நடந்த இறுதி போட்டியில் தலிலா முஹம்மது பந்தய தூரத்தை 52.20 வினாடிகளில் கடந்து உலக சாதனை நிகழ்த்தினார்.
  • 2003-ம் ஆண்டில் ரஷ்யாவின் யூலியா பெக்கோன்கினா செய்த முந்தைய சாதனையை 0.14 வினாடிகள் குறைவாக கடந்து சாதனையை முறியடித்தார்.
Share with Friends