சர்வதேச செய்திகள்
‘ஊரு’
- ஒரு சின்னம் ஆஸ்திரேலியாவில் உள்ள ‘ஊரு’ என்ற இடத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.
- ஊர் என்பது தமிழ்ச் சொல்.
- அங்கு வாழும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் பேசும் மொழியும் தமிழை ஒத்துள்ளது.
- அந்தப் பழங்குடிகளின் நிறம், உருவ அமைப்பு, பழக்க வழக்கங்கள் அனைத்து தமிழர்களையே ஒத்துள்ளன.
- கடல் கொண்ட குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியாவின் கிழக்குப் பகுதியே ஆஸ்திரேலியா என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலிய ஊரு நினைவு சின்னம் ஆயக்குடி பொன்னிமலை நினைவுச் சின்னத்தை அச்சு அசலாக ஒத்திருப்பதால் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழகர்களின் வழித்தோன்றலே என்று கணிக்கலாம்.
தேசிய செய்திகள்
பூண்டுத் தலைநகரம்
- உலகின் பூண்டுத் தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் கில்ராய்.
- இங்கு ஆண்டுக்கு சுமார் 30 கோடி கிலோ அளவுக்குப் பல வகைப்பட்ட பூண்டுகள் விளைவிக்கப்படுகின்றன.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் கடைசி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கில்ராய் நகரில் பூண்டுத்திருவிழா நடைபெறும்.
- இது அமெரிக்காவில் நடக்கும் உணவுத் திருவிழாக்களிலேயே மிகவும் பிரமாண்டமானதாகும்.
கர்நாடகா
- கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து வருடந்தோறும் நவம்பர் மாதம் 10-ந்தேதி திப்பு சுல்தான் பிறந்த நாளாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்நிலையில் திப்பு ஜெயந்தி விழா ரத்து செய்யப்படுகிறது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- விராஜ்பெட் எம்எல்ஏ கேஜி போபையா எடியூரப்பாவுக்கு திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். இதன் அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஒடிசா ரசகுல்லா
- ஒடிசா மாநில இனிப்பு வகைக்கு ‘ஒடிசா ரசகுல்லா’ என்ற பெயரில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
- மேற்கு வங்காளத்திலும், ஒடிசா மாநிலத்திலும் ‘ரசகுல்லா’ இனிப்புவகை மிகவும் பிரபலமானது.
- தங்கள் மாநிலத்தில்தான் ‘ரசகுல்லா’ முதன்முதலில் தோன்றியது என்று இரு மாநிலங்களும் உரிமை கொண்டாடின.
- 2015-ம் ஆண்டில் இருந்து இரு மாநிலங்களுக்கும் இடையே இதுதொடர்பாக மோதல் நடந்து வந்தது.மேற்கு வங்காளம் முந்திக்கொண்டு, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘வங்காள ரசகுல்லா’ என்ற பெயரில் புவிசார் குறியீடு பெற்றது. அதன்பிறகு விழித்துக்கொண்ட ஒடிசா, புவிசார் குறியீடுக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்தது.
- இந்நிலையில், ஒடிசா மாநில இனிப்புவகைக்கு ‘ஒடிசா ரசகுல்லா’ என்ற பெயரில் நேற்று புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
- சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டு பதிவாளர் அலுவலகம் இதற்கான அதிகாரபூர்வ சான்றிதழை அளித்துள்ளது.
- இந்த சான்றிதழ், 2028-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதிவரை செல்லும். இந்த அறிவிப்புக்கு ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், அந்த மாநிலத்தை சேர்ந்த பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சர்வதேச புலிகள் தின விழா
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு விருது - பிரதமர் மோடி வழங்கினார்.
- உலக அளவில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என 9 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தீர்மானிக்கப்பட்டது.
- ஆனால், காலக்கெடுவுக்கு 4 ஆண்டுகள் முன்னதாகவே இதை நாம் சாதித்து விட்டோம் என்று மோடி கூறினார்.
அறிவியல்
சூரிய குடும்பம்
- ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான புதிய ஆய்வில், 4.56 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவான பிறகு, சந்திரன் சுமார் 4.51 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு உருவானது என்று கண்டறியப்பட்டது.
- அப்பல்லோ பயணங்களின் போது சேகரிக்கப்பட்ட பல்வேறு வகையான மாதிரிகளின் வேதியியல் கலவையை ஆய்வு செய்து இந்த ஆய்வை நடத்தி உள்ளனர்.
- இந்த தகவல் நேச்சர் ஜியோசைன்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
- ஜூலை 21, 1969 இல், முதன் முதலில் மனிதன் சந்திரனில் காலடி வைத்தான்.
- சந்திர மேற்பரப்பில் அவர்கள் சில மணி நேரங்கள் இருந்தனர்.
- அப்போது அப்பல்லோ குழுவினர் 21.55 கிலோ மாதிரிகளை சேகரித்து மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தனர்.
தமிழகம்
உறைகிணறு
- கீழடி அகழாய்வில் 4-வது பழங்கால உறைகிணறு கண்டெடுக்கப்பட்டதால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளதால் இப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உறைகிணறுகள் அனைத்தும் 5 முதல் 7 அடி உயரம் வரையே இருப்பதால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் 5 அடியிலேயே கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உறைகிணறுகள் தொழில்நுட்ப ரீதியில் அமைக்கப்பட்டு அதனை தமிழர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை தினம்
- புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி நாராயணசாமி-சந்திரம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகளாக பிறந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்தியாவின் முதல் பெண் டாக்டரான இவரது பிறந்த நாள், மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கடந்த 16-ந்தேதி சட்டசபையில் அறிவித்தார்.