47779.தமிழகத்தில் மருத்துவமனை தினம் என்று கொண்டாடப்பட்டு உள்ளது ?
ஜூலை 28
ஜூலை 29
ஜூலை 30
ஜூலை 31
Explanation:
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்தியாவின் முதல் பெண் டாக்டரான இவரது பிறந்த நாள், மருத்துவமனை தினமாக கொண்டாடப்படுகிறது.
47780.உலகின் பூண்டுத் தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது ?
லாஸ் ஏஞ்சலஸ்
வெலன்சியா
எர்வின்
கில்ராய்
Explanation:
இங்கு ஆண்டுக்கு சுமார் 30 கோடி கிலோ அளவுக்குப் பல வகைப்பட்ட பூண்டுகள் விளைவிக்கப்படுகின்றன.
47781.சூரிய குடும்பம் உருவாகி சுமார் 4.51 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு உருவானது எது ?
சந்திரன்
பூமி
நெப்டியூன்
யுரேனஸ்
Explanation:
ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான புதிய ஆய்வில், 4.56 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவான பிறகு, சந்திரன் சுமார் 4.51 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு உருவானது என்று கண்டறியப்பட்டது.
47782.4-வது பழங்கால உறைகிணறு எங்கு கண்டுஎடுக்கப்பட்டது ?
கரூர்
ஆதிச்சநல்லூர்
கீழடி
சேலம்
Explanation:
கீழடி அகழாய்வில் 4-வது பழங்கால உறைகிணறு கண்டெடுக்கப்பட்டதால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
47783.தமிழ் ஆயுத எழுத்தான ஃ வடிவில் அமைக்கப்பட்ட நினைவு சின்னம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது ?
திருநெல்வேலி
திருவண்ணாமலை
கரூர்
பழனி
Explanation:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ஆயக்குடி. இந்த ஊரின் தென்புறம் பொன்னிமலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுச் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
47785.திப்பு சுல்தான் பிறந்த நாள் என்று கொண்டாடப்படுகிறது ?
அக்டோபர் 10
நவம்பர் 10
டிசம்பர் 10
ஜனவரி 10
Explanation:
கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து வருடந்தோறும் நவம்பர் மாதம் 10-ந்தேதி திப்பு சுல்தான் பிறந்த நாளாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
47786.சிறை பஜார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?
2014
2015
2016
2017
Explanation:
இந்த திட்டத்தின்படி சிறை கைதிகள் தயாரிக்கப்படும் உணவு மற்றும் இதர பொருட்கள் நேரடியாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
47787.ரசகுலாவிற்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் எது?
ஒடிசா
மேற்கு வங்கம்
கல்கத்தா
பங்களாதேஷ்
Explanation:
ஒடிசா மாநில இனிப்பு வகைக்கு ‘ஒடிசா ரசகுல்லா’ என்ற பெயரில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
47789.ஜப்பானின் ஹயாபூசா -2 எந்த சிறுகோள் மீது இரண்டாவது கட்ட ஆராய்ச்சிக்காக தரை இறங்கியது?
சிரிஸ்
பென்னு
ரியூகு
வெஸ்டா
Explanation:
ஜப்பானின் ஹயாபூசா 2 ஆய்வு இறுதிக்கட்ட ஆராய்ச்சிக்காக தொலைதூர சிறுகோள் மீது வெற்றிகரமாக தரையிறங்கியது, அங்கு ரியுகுவின் மாதிரிகளை சேகரிக்க உள்ளது. இதன்மூலம் சூரிய மண்டலத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரமுடியும் என்று நம்பப்படுகிறது.
47790.சர்வதேச நட்பு தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?
ஜூலை 30
ஆகஸ்ட் 04
ஜூன் 27
ஆகஸ்ட் 07
Explanation:
ஜூலை 30 – சர்வதேச நட்பு தினம் என்பது யுனெஸ்கோவின் முன்மொழிவைத் தொடர்ந்து 1997ல் ஐ.நா பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முன்முயற்சியாகும்.