மத்திய அரசு
- மத்திய நிதித்துறை செயலாளராக ராஜிவ் குமார் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- இதற்குமுன் மத்திய நிதித்துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க், மின்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.
மோஸி 2
- சீன தயாரிப்பில் உருவாகியுள்ள ஆளில்லா விமானம் ‘மோஸி 2’, தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
- சூரியஒளி சக்தியில் இயங்கும் இந்த விமானத்தை ஒக்சாய் விமான நிறுவனம் தயாரித்துள்ளது.
- இந்த விமானம் தனது முதல் பயணத்தை சீனாவின் கிழக்கு மாகாணமான சேஜியாங்கில் உள்ள டெக்கிங் விமான நிலையத்தில் கடந்த 27ம் தேதி நிறைவு செய்தது.
ஸ்டார் வார்ஸ் - புதைப்படிவங்கள்
- கனடாவில் உள்ள கூட்டெனே தேசிய பூங்கா பாறைகளில் இந்த அரிய புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- ‘கேம்ப்ரோராஸ்டர் ஃபால்கடஸ்’ என்று அழைக்கப்படும் இந்த உயிரினம் இன்றைய ‘ஆர்த்ரோபாட்’ வகை விலங்குகளின் குடும்பத்தை சார்ந்தது என்றும், அவை 506 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ‘கேம்ப்ரியன் காலகட்டத்தில்’ வாழ்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹூடோ தீபகற்பம்
- வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையோரம் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது என தென் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ஏவுகணை ஹூடோ தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அந்த ஏவுகணை 250 கி.மீட்டர் தூரம் பறந்து சென்றதாக தென்கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவரை வட கொரியா இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
- ஆனால் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம், தங்கள் பிராந்தியத்தில் எந்த ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையும் வரவில்லை என தெரிவித்துள்ளது.
35 கோடி மரக்கன்றுகள்
- கிழக்கு ஆப்பிரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட 2-வது நாடாக திகழும் எத்தியோப்பியாவில், வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி வருகிறது.
- கடந்த நூற்றாண்டில் 30 சதவீதமாக இருந்த எத்தியோப்பிய காடுகளின் பரப்பளவு, கடந்த 2000-ம் ஆண்டில், 4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.
- இதனால் நாட்டில் நிலவும் வறட்சியை மரங்களால்தான் எதிர்கொள்ள முடியும் என அந்நாட்டு அரசு தீர்க்கமாக நம்புகிறது.
- எனவே மழைக்காலத்துக்கு முன் 400 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என பிரதமர் அபிய் அகமது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது.
- அதன்படி ‘பசுமை மரபு’ என்ற பெயரில் நாடு முழுவதும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
சாம்பல் நிறப்பூண்டு
- கொடைக்கானலில் விளையும் வெள்ளைப்பூண்டு வெள்ளை நிறத்தில் இல்லாமல் சற்று சாம்பல் நிறத்தில் காணப்படும்.
- காரத்தன்மை மற்றும் மருத்துவகுணம் கொண்டது.
- இவை விளைந்தவுடன் சேகரிக்கப்பட்டு வீடுகளிலேயே பதப்படுத்தப்பட்டு வருகிறது.
- இதற்கு புகைபூண்டு என்று பெயர்.
- இந்த வகை பூண்டுகள் பல மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருப்பதுடன் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கும்.
உச்சநீதிமன்றம்
- உச்சநீதிமன்றத்தில் தற்போது இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதியை தவிர்த்து 30-ல் இருந்து 33 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
- உரத்திற்கான மானியத்தை 20 சதவீதமாக உயர்த்தியதை அடுத்து 22 ஆயிரத்து 875 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
- சிட் பண்ட் முதலீட்டை நடைமுறைப் படுத்துவதற்கான மசோதா, மற்றும் புதிய மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
பிருத்வி ஷா - ஊக்கமருந்து
- இந்திய டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா ஊக்கமருந்து விதிமீறலுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) 2019 நவம்பர் 15 வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Atal Innovation Mission
- நிதி ஆயோக்கின் முதன்மை முயற்சியான அடல் புதுமை மிஷன் (Atal Innovation Mission) சமூக கண்டுபிடிப்புக்கான புதிய திட்டத்தை புதுதில்லியில் அறிமுகப்படுத்தவுள்ளது.
சட்டதிருத்த - மசோதா
- நிறுவனங்கள் (சட்டதிருத்த) மசோதா, 2019 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன்மூலம் நிறுவனங்கள் சட்டம், 2013 ஐ திருத்துவதற்கு இம்மசோதா வழிவகை செய்துள்ளது.
e-Governance - தேசிய மாநாடு 2019
- நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகளைத் தீர்க்கும் துறை (DARPG), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் மேகாலயா மாநில அரசு இணைந்து இ-ஆளுமை 2019 தொடர்பான 22வது தேசிய மாநாட்டை 2019 ஆகஸ்ட் 8-9 தேதிகளில் மேகாலயாவின் ஷில்லாங்கில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய பேட்மிண்டன்
- இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.சாய் பிரனீத் சமீபத்திய உலக பேட்மிண்டன் தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தார்.
- ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் தரவரிசையில் பிரனீத் இப்போது உலக தரவரிசையில் 19ம் இடத்தில் உள்ளார். கிடாம்பி ஸ்ரீகாந்த் 10வது இடத்தையும், சமீர் வர்மா 13வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டனர்.
ஆர் பி ஐ (RBI)
- கார்ப்பரேட்டுகள் மற்றும் பணப்புழக்கம் இல்லாமல் வாடும் வங்கி அல்லாத கடன் வழங்குநர்களுக்கான வெளி வர்த்தக கடன்களுக்கான இறுதி பயன்பாட்டு நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி தாராளமயமாக்கியுள்ளது.
இலங்கை - அமெரிக்கா
- இலங்கைக்கு மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் 480 மில்லியன் அமெரிக்க டாலரை உதவியாக அமெரிக்கா வழங்கியுள்ளது
சீனா
- சீனா அடுத்த ஆறு ஆண்டுகளில் 5 ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்காக 150 பில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டுள்ளது.
மும்பை
- இந்த பருவத்தில் சராசரி மழைப்பொழிவு 72% சதவீதத்திற்கும் அதிகமாக மும்பையில் பெய்துள்ளது.