உலக சாரணர் தினம்
- உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூரும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.
- பொதுவாக ஆகஸ்ட் முதலாம் தேதி என சில நாடுகளில் இத்தினம் சிறப்புத்தன்மை பெற்றாலும்கூட, ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும்.
- 1907ம் ஆண்டு ஜுலை மாதம் 28ம் தேதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும், தன்னலமற்ற மனித நேயமிக்க சேவையுணர்வை உலகில் விதைத்திட்ட 'சேர். றொபர்ட் ஸ்டீவன் ஸ்மித் பேடன் பவல்" என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும், சாரணியப் பாசறையும், ஆகஸ்ட் முதலாம் தேதி தொடக்கம் ஆகஸ்ட் ஆறாம் தேதி வரை நிகழ்ந்தது.
- எனவே, முதலாவது சாரணிய இயக்கப் பாசறை நடைபெற்ற தினத்தை அடிப்படையாகக் கொண்டே உலக சாரணியர் தினம் கொண்டாடப்படுகின்றது.
உலக தாய்ப்பால் தினம்
- ஒவ்வொரு பெற்றோரும் அறிய வேண்டும் என்ற நோக்குடன் உலகம் முழுவதும் ஐக்கிய நாடு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது.
- இந்தியா உள்பட 170 நாடுகளில் 1991 முதல் அமலில் உள்ளது.
போக்குவரத்து - விதிமீறல்கள்
- போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவதுடன், விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன திருத்த மசோதா மக்களவையில் கடந்த 23-ந் தேதி நிறைவேற்றப்பட்டது.
- தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- அங்கும் நேற்று 108 உறுப்பினர் ஆதரவுடன் நிறைவேறியது.
தேசிய தரச் சான்றிதழ் - மருத்துவமனைகள்
- ஆறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தேசிய தர சான்றிதழுடன் 2.06 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- தேசிய தர உறுதி திட்டத்தில் அரசு மருத்துவமனைகளின் சுகாதார சேவைகள் சுகாதார குறியீடு முறையான பராமரிப்பு சிகிச்சைகள் குறித்து நோயாளிகள் தெரிவிக்கும் கருத்துக்களை தேசிய தர நிபுணர் குழு ஆய்வு செய்கிறது.ஆய்வு முடிவில் தேர்வு செய்யப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு பரிசுத் தொகையும் தேசிய தர சான்றிதழும் வழங்குகிறது.
- இந்த பரிசுத் தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
- தேசிய தர உறுதி திட்டத்தில் நடப்பாண்டு கோவை மாவட்டம் - பொள்ளாச்சி; துாத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி; புதுக்கோட்டை மாவட்டம் - அறந்தாங்கி மற்றும் ராமநாதபுரம், பெரம்பலுார், விருதுநகர் அரசு மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டன.அவற்றுக்கு தேசிய தர சான்றிதழுடன் 2.06 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி
- நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 4 முதல் 6 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெற உள்ளது.
- இதில் பாகிஸ்தான், சீனா, மலேசியா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த 15-25 வயதுக்குட்பட்ட 12 ஆடவர் மற்றும் 8 பெண்கள் அணியினர் பங்கேற்க உள்ளனர்.
அமெரிக்கா
- நேபாளத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் காத்மாண்டுவில் தெற்காசிய காற்று தர தொழில்நுட்ப முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
- இந்த முகாமின் நோக்கம் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் அரசியல், சமூக மற்றும் அறிவியல் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதாகும்.
இந்தியா - காம்பியா
- திறன் மேம்பாடு மற்றும் குடிசைத் தொழில் திட்டத்திற்காக இந்தியா 5 லட்சம் டாலர்ககளை காம்பியாவுக்கு மானியமாக வழங்கியுள்ளது.
- மேலும் பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
ரஷ்யா - இஸ்ரோ
- அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளியை ஆராயவும் பயன்படுத்தவும் ஒத்துழைப்பு அளிப்பதற்காக இஸ்ரோ மற்றும் பொலிவிய விண்வெளி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
உத்தர பிரதேசத்தில்
- இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் 2016ல் சாலை விபத்தில் 19,320 பலியாகி உள்ளார்கள்.
- 2017-ல் 20,124 பேர் பலியாகி உள்ளனர். மத்திய பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு 9,666 பேரும் , 2017 ஆம் ஆண்டு 10,177 பேரும் பலியாகி உள்ளனர்.
- இருப்பினும், அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள சாலைகள் பாதுகாப்பானதாகத் தெரிகிறது என்று தகவல்கள் காட்டுகிறது.
- 2017 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 12,264 பேர் பலியாகி உள்ளனர். 2016-ல் 12,935 பேரும் 2015-ல் 13,212 பேரும் உயிரிழந்து உள்ளனர்.
இந்திய விமானப்படை
- மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் புது தில்லியில் உள்ள தேசிய பால் பவனில் இந்திய விமானப்படை வசதி மற்றும் விளம்பர பெவிலியனை திறந்து வைத்தார்.
- இந்திய விமானப்படையில் சேர மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பெவிலியனை இந்திய விமானப்படை அமைத்துள்ளது.
தமிழகம்
- புகழ்பெற்ற கியூ எஸ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் உலக அளவில் 140 நகரங்கள் இடம் பெற்றன.
- ஒரு நகரில் உள்ள உயர்தர கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கை, நகர மக்கள் தொகையில் மாணவர்களின் எண்ணிக்கை, வாழ்க்கைத்தரம், வேலைவாய்ப்பு, எளிமையான கட்டண முறை, மாணவர்களின் கருத்து ஆகியவற்றைக் கொண்டு தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்திய நகரங்களைப் பொறுத்தவரை பெங்களூரு 81வது இடத்திலும், மும்பை 85வது இடத்திலும் உள்ளன. தலைநகர் டில்லி 113வது இடத்திலும், சென்னை 115வது இடத்திலும் உள்ளன.
குஜராத்
- குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மாநிலத்தின் புதிய தொழில்துறை கொள்கையை வகுப்பதற்கான உள்ளீடுகளை ஆய்வு செய்ய, மதிப்பாய்வு செய்ய மற்றும் பரிந்துரைக்க 10 பணிக்குழுக்களை அமைத்துள்ளார்.
- மாநிலத்தின் தற்போதைய தொழில்துறை கொள்கை 2015 இல் செயல்படுத்தப்பட்டது. தலைமை செயலாளர் ஜே.என்.சிங் தலைமையில் இந்தப் பணிக்குழுக்கள் செயல்படும்.
உலக நுரையீரல் புற்றுநோய் தினம்
- உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஆகஸ்ட் 1, 2019 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- மார்பக, பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களைக் காட்டிலும் ஆண்டுதோறும் அதிக உயிர்களைக் கொல்லும் நுரையீரல் புற்றுநோய் உலகளவில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகத் தொடர்கிறது.
- உலகளவில் புற்றுநோயால் மரணப்பிவர்களில் ஐந்தில் ஒருவர் நுரையீரல் புற்றுநோயால் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
முத்தலாக் தடை மசோதா
- உடனடி முத்தலாக் நடைமுறையை ரத்து செய்யும் 2019 ஆம் ஆண்டு முஸ்லீம் பெண்கள் (திருமணம் தொடர்பான உரிமைகள் பாதுகாப்பு) மசோதாவுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
- இந்தச் சட்டம் 19 செப்டம்பர் 2018 முதல் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த மசோதாவின்படி உடனடி முத்தலாக் நடைமுறை செல்லாததாகவும் சட்டவிரோதமாகவும் மேலும் இதை தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவித்தது.
ஆசியான் உச்சி மாநாடு
- தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் பாங்காக்கில் நடைபெறும் 52வது ஆசியான் [ASEAN] உச்சி மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
- அதிகரித்து வரும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் பிராந்தியத்தில் செழிப்பை மேம்படுத்துவதற்கும் ஆழ்ந்த ஒருங்கிணைப்புக்காக இக்கூட்டம் நடைபெறுகிறது.
மக்களவை
- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அடுத்த அமர்விலிருந்து கீழ் சபை காகிதமில்லா மக்களவையாக மாறும் என்று அறிவித்துள்ளார்.
- இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான ரூபாயை அரசுக்கு மிச்சப்படுத்தும்.
மருத்துவ கல்வி
- மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ நேற்றுடன் ஓய்வு பெற்றார்.மருத்துவ கல்வி இயக்குனராக 2017ல் எட்வின் ஜோ பொறுப்பேற்றார்.
- அவரது பதவி காலம் முடிந்து நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு சுகாதாரத்துறை சார்பில் பிரிவு உபசார விழா சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில் நடந்தது.
- இந்நிலையில் பொறுப்பு மருத்துவ கல்வி இயக்குனராக ஓமந்துாரார் மருத்துவ கல்லுாரி டீன் நாராயணபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:புதிய மருத்துவ கல்வி இயக்குனர் விரைவில் நியமிக்கப்படுவார்.