ஒலி
- தேய்த்தல், ஊதுதல், மீட்டுதல், அடித்தல் போன்ற செயல்களினால் ஒலி உண்டாகிறது.
- அனைத்துச் செயல்களும் பொருள்களை அதிர்வுறச் செய்கிறது.
- அதிர்வுகள் என்பது பொருள்களின் சிறிய முன்பின் இயக்கமாகும்.
அலையியக்கம்
- அலைவுறும் துகள்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடப்பெயர்ச்சி.
- அடைவதில்லை துகள்கள் அதிர்வுறுவதினால் ஏற்படும் இயக்கம் மட்டுமே ஊடகத்தில் ஒரு துகளிலிருந்து மற்றொரு துகளுக்குப் பரவி முன்னேறிச் செல்லும்.
அலையின் வகைகள்
- இயந்திர அலைகள், மின் காந்த அலைகள் என அலைகள் இரு வகைப்படும் எல்லா அலைகளும் அதிர்வுகளால் தோன்றுகின்றன.
- மின்காந்த அலைகளான ஒளி, ரேடியோ அலை நுண்ணலைகள், அகச்சிவப்புகதிர், புறஊதாக்கதிர் , x கதிர்கள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை இவை வெற்றிடத்தில் பரவக் கூடியது.
மின்காந்த அலைகள்
ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் 7 வகைப்படும்
- ரேடியோ அலைகள்
- நுண் அலைகள்
- அகச்சிவப்பு அலைகள்
- கண்ணுறுஒளி
- புறஊதாக் கதிர்கள்
- X- கதிர்க ள்
- காமா கதிர்கள்
இயந்திர அலைகள்
குறுக்கலைகள்
ஊடகத்துகள்கள் அலைபரவும் திசைக்குச் செங்குத்தான திசையில் அதிர்வுறுதால் உருவாகும்
துகள்கள் அதிர்வுறும் திசை
- எ.கா:
- நீரலைகள், இழுத்துக் கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுகள் .
- குறுக்கலைகள் காற்று அல்லது வாயுக்களின் வழியே பரவிச் செல்லாது.
- குறுக்கலைகள் ஊடகத்தின் வழியே முகடு, அகடுகளாக பரவிச் செல்லும்.
நெட்டலைகள்
- ஊடகத்திலுள்ள துகள்கள் அலை பரவும் திசைக்கு இணையாகவோ அவற்றின் திசையிலேயோ அதிர்வுறுவதால் உண்டாகும்.
- ஒலி அலைகள் காற்றிலோ வாயுவிலோ நெட்டலைகளாகப் பரவிச் செல்லும் * ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது நெருக்கங்களாகவும்,நெகிழ்வுகளாகவும் செல்லும்.
- நெருக்கம் - அதிக அழுத்தம் உள்ள பகுதி.
- நெகிழ்வு - குறைந்த அழுத்தம் உள்ள பகுதி.
அலை இயக்கத்திற்கான வரையறை வீச்சு (a)
அதிர்வுறும் துகள் மையப்புள்ளியிலிருந்து அடைந்த பெரும் இடப்பெயாச்சி இதன் அலகு மீட்டர்.
அலைநீளம் (A)- ஒரே அதிர்வு நிலையில் உள்ள அடுத்தடுத்த இரு துகள்களுக்கிடையே உள்ள தூரம் ஆகும் இதன் அலகு மீட்டர்.
- குறுக்கலையில் இரு அடுத்தடுத்த அகடு அல்லது முகடுகளுக்கு இடையேயுள்ள தொலைவு.
- நெட்டலையில் இரு அடுத்தடுத்த நெருக்கங்கள் அல்லது நெகிழ்வுகளுக்கிடையே உள்ள தொலைவு ஆகும் .
அதிர்வுறும் துகளின் ஒரு முழு அலைவுக்கான காலம் ஆகும். இதன் அலகு வினாடி
அதிர்வெண் (n)- ஊடகத்துகள் ஒரு வினாடியில் மேற்கொள்ளும் முழு அதிர்வுகளின் எண்ணிக்கை ஆகும்.
- இதன் அலகு ஹெர்ட்ஸ் n =1/T
அதிர்வெண் அலைநீளம் அலைதிசை வேகம் இவற்றிற்கானத் தொடர்பு
- அலை திசை வேகம் (v) = அலை கடக்கும் தொலைவு/நேரம்
- v= அலைநீளம் / அலைவு நேரம்
- =$\lambda$/T
- v= n$\lambda$
- ஃn = 1/T
- அலை திசை வேகம் = அதிர்வெண் X அலைநீளம்
ஒலியின் திசைவேகம்
திடம் > திரவம் > வாயு
ஒலியின் திசை வேகத்தை பாதிக்கும் காரணிகள்
- ஈரப்பதம்
- வெப்பநிலை
- அழுத்தத்தைப் பொறுத்து ஒலியின் திசை வேகம் மாறாது.
எதிரொலி (ECHO)
- சில இடங்களிலும் ஒலி எழுப்பிய சிறிய கால இடைவெளிக்கு பின் மீண்டும் ஒலியின் சத்தத்தைக் கேட்க முடிகிறது.
- எழுப்பப்பட்ட ஒலி நின்ற பிறகும் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் ஒலியே எதிரொலி ஆகும்.
எதிர் முழக்கம் (Reverberation)
- பன்முக எதிரொலிப்பின் காரணமாக ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை ஆகும்.
- இதனை தடுக்க திரையங்கம் கலையரங்கத்தின் மேற்கூரை, சுவர்கள் ஒலி உட்கவரும் தன்மை கொண்ட பொருள்களாலான நார் அட்டை, திசைச்சீறை பிளாஸ்டர் போன்ற பொருட்களால் மேற்பூச்சு செய்யப்பட்டிருக்கும்.
செவியுணர் நெடுக்கம்
செவியினால் உணரக் கூடிய நெடுக்கம் கொண்ட ஒலிச்சைகைகளை செவியுணர் நெடுக்கம் என்கிறோம்.
விலங்கு | செவியுணர் நெடுக்கம் |
---|---|
மனிதன் | 20 - 20,000 |
யானை | 16 - 12,000 |
மாடு | 16 - 40,000 |
பூனை | 100 - 32,000 |
நாய் | 40 - 46,000 |
கொறி விலங்குகள் (எலி, அணில், முயல்] | 1000 - 1,00,000 |
வௌவால் | 1000 - 1,50,000 |
டால்பின், திமிங்கலம் | 70 - 1,50,000 |
கடல் நாய் | 900 - 2,00,000 |
கடல் பன்றி | 200 - 2,00,000 |
மீயொலிகள்
ஒலியின் அதிர்வெண் 20,000 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருப்பின் அவை மீயொலி எனப்படும் 20 ஹெர்ட்ஸ்க்கு குறைவாக இருப்பின் அவை குற்றொலி எனப்படும். மீயொலியையும் குற்றொலியையும் நம்மால் கேட்க இயலாது.
டாப்ளர் விளைவுஒலி மூலத்திற்கும் கேட்பவருக்கும் இடையே சார்பியக்கம் இருக்கும் போது, ஒலியின் அதிர்வெண் மாறுவது போன்று தோன்றும் நிகழ்வு டாப்ளர் விளைவு எனப்படும்.
பயன்கள்- வாகனம் ஒன்றின் வேகத்தை அளவிட
- துணைக்கோள் ஒன்றைக் கண்டறிய
- ரேடார்
- சோனார்
மேக் விளைவு
- ஒலி மூலம் நகரும் திசை வேகத்தை பொறுத்து அதிர்வெண்ணில் ஏற்படும் மாற்றம் ஆகும்.
- ஒரு மேக் என்பது காற்றில் ஒலியின் திசைவேகத்தில் நகரும் பொருட்களின் திசை வேகமாகும்.