அண்ணல் அம்பேத்கர்
பிறப்பு:
- மராட்டிய மாநிலத்தில் கொண்கன் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் பதினான்காம் நாள் அம்பேத்கர்பிறந்தார்.
- பெற்றோர் = இராம்ஜி சக்பால், பீமாபாய்.
- செல்வம் நிறைந்த குடும்பத்தில் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தார்.
- அவரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி.
- தந்தை அவருக்கு சூடிய பெயர் பீம்.
கல்வி:
- தன் ஆசிரியர் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் ஆசிரியர் பெயரான அம்பேத்கர் என்பதை தம் பெயராக ஆக்கிக் கொண்டார்.
- அம்பேத்கர் 1908இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார்.
- பரோடா மன்னர் பொருளுதவியுடன் 1912இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
- அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1915இல் முதுகலைப் பட்டமும் 1916இல் இலண்டனில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
- மும்பையில் சிறிதுகாலம் பொருளியல் பேராசிரியராக பணியாற்றினார்.
- மீண்டும் இலண்டன் சென்று அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
- அம்பேத்கர் இந்தியா திரும்பியபின் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.
முதல் உரிமைப்போர்:
- 1927ஆம் ஆண்டு மார்ச்சுத் தங்கள் இருபதாம் நாள் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடத்தினார்.
விடுதலை உணர்வும் வட்டமேசை மாநாடும்:
சட்ட மாமேதை:
- விடுதலைக்குப் பிறகு இந்திய அமைச்சரவையில் அண்ணல் அம்பேத்கரையும் இடம்பெறச் செய்யவேண்டும் என்று நேரு விரும்பினார்.
- அம்பேத்கர் சட்ட அமைச்சரானார்.
- இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகுக்க எழுவர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
- பலரும் செயல்படாமல் விலகினார். இறுதியில் அம்பேத்கர் ஒருவரே அந்த ஒப்பற்ற பணியைச் செய்து முடித்தார்.
- 1950ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26ஆம் நாள் இந்தியா முழுமையான குடியரசு நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.
கல்வி வளர்ச்சியில் அம்பேத்கர்:
- “ஒவ்வொருவரும் முழுமனித நிலையை அடைய கல்வி, செல்வம், உழைப்பு ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம். உழைப்பும் கல்வியும் அட்டர செல்வம் மிருகத்தனம்” என்றார்.
- கற்பித்தல், அறிவியல் முறைக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்; விருப்புவெருப்பட்ற்ற முறையில் கற்பித்தல் நிகழ வேண்டும் என்றார்.
- 1946ஆம் ஆண்டு, மக்கள் கல்விக்கழகத்தை தோற்றுவித்தார்.
- மும்பையில் அவரின் அறிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையம் உருவாக்கப்பட்டது.
பொருளாதார வல்லுநர்:
- இவர் “இந்தியாவின் தேசிய பங்குவீதம்” என்ற நூலை எழுதினார்.
- தொழில் துறையில் பொருளாதார வளர்ச்சிப் பெற புதுப்புதுக் கருத்துக்களைக் வெளியிட்டார்.
இந்திய வரலாற்றின் புதிய பக்கங்கள்:
- இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக்கதிர் அம்பேத்கர்.
- சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன் கட்டளையால் தோன்றியதன்று. குறிப்பிட்ட சில சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனித சமூக வாழ்வில் தானாகவே வேரூன்றிவிட்ட வளர்ச்சியாகும். சாதி களையப்பட வேண்டிய களை என்றார்.
- சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது என்றார்.
- இந்தியப் பொருளாதார மேம்பாட்டிற்குச் சாதி என்பது, நன்மை தராது.இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சாதி என்னும் நோய் தீங்கு விளைவிக்கிறது. அது மக்களிடையே ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்துவிட்டது. இதனை அவர்கள் உணரும்படி செய்துவிட்டால் போதும்; அதுவே எனக்கு நிறைவு தரும்” என்றார்.
அம்பேத்கரின் இலட்சிய சமூகம்:
- அவர், “ஓர் இலட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” என்றார்.
- “சனநாயகத்தின் மறுப்பெயர் தான் சகோதரத்துவம்; சுதந்திரம் என்பது சுயோச்சையாக நடமாடும் உரிமை; உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் உரிமை அது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும்” என்று, சனநாயகத்திற்கு அரியதொரு விளக்கம் தந்தார்.
பெரியார் போற்றிய பெருந்தகை;
நேரு புகழுதல்:
- “பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே. ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சேரும்” என்று நேரு அவரைப் புகழ்ந்தார்.
இராஜேந்திர பிரசாத் புகழ்தல்:
- “அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர்; மிகவும் ஆர்வத்துடனும் விரைந்து தனியனாகச் செயல்பட்டவர். தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர்” என்று இராஜேந்திர பிரசாத் பாராட்டினார்.
மறைவு:
- நாட்டிற்காக அயராது உழைத்த அண்ணல் அம்பேத்கர் 1956ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 6ஆம் நாள் புகழுடம்பு எய்தினார்.
பாரத ரத்னா விருது:
- இந்திய அரசு, பாரத ரத்னா(இந்திய மாமணி) என்னும் உயரிய விருதை அண்ணல் அம்பேத்கருக்கு 1990ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.