Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் தந்தை பெரியார் , முத்துராமலிங்கர் , அம்பேத்கர் , காமராஜர் , சமுதாயத்தொண்டு

பெரியார்

  • பெற்றோர் = வெங்கட்டப்பர் – சின்னத்தாயம்மாள்
  • இயற் பெயர் = இராமசாமி
  • ஊர் = ஈரோடு
  • “பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார்.
  • பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் “மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார்.
  • கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை இருந்தது. அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் “வைக்கம் வீரர்” எனப்பட்டார்.
  • தாய்மார்கள் இராமசாமிக்கு “பெரியார்” என்று பட்டம் வழங்கினார்கள்.
  • பெண் விடுதளிக்கு முதல் படியாக பெண்கள் எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்பதி பெரியார் வலியுறுத்தினார்.
  • 17.09.1879இல் பிறந்து, 24.12.1973இல் மறைந்த பெரியார், தம் வாழ்நாளில் 8600 நாட்கள், 13,12,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 10700 கூட்டங்களில் 21400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றி சமூகத் தொண்டாற்றினார்.
  • 1970ம்ஆண்டு சமூகச் சீர்திருத்த செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் “யுனெஸ்கோ விருது” பெரியாருக்கு வழங்கப்பட்டது.
  • நடுவண் அரசு 1978ம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

முத்துராமலிங்க தேவர்

பிறப்பும் வளர்ப்பும்:

  • இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்னும் ஊரில் 1908ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்க தேவர்.
  • பெற்றோர் = திரு உக்கிரபாண்டி தேவர் – திருமதி இந்திராணி அம்மையார்.
  • இஸ்லாமிய பெண்மணி ஒருவர் தாயாகி பாலூட்டி வளர்த்தார்.
  • ஆசிரியர் = குறைவற வாசிதான் பிள்ளை.

கல்வி:

    கமுதியில் உள்ள தொடகபல்லியிலும், பின்பு பசுமலை உயர்நிலைப்பள்ளியிலும், பின்பு ஐக்கிய கிறித்துவப் பள்ளியிலும் படித்தார். இராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொது, அங்கு ப்ளேக் நோய் பரவியதால் இவரின் கல்வி நின்றது.

பொதுத்தொன்டில் நாட்டம்:

  • 32 சிற்ற்ரோர்களில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை உழுபவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார்.
  • சமபந்தி முறைக்கு ஊகம் அளித்தார்.
  • குற்றப்பரம்பறை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்.
  • சாதியை பற்றி:

    • “சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை; ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைதானே தவிரச் சாதியையும் நிறத்தையும் அல்ல; சாதியையும் நிறமும் அரசியலுகுமில்லை, ஆன்மீகத்திற்கும் இல்லை.

    நேதாஜி:

    • முத்துராமலிங்கர், வங்கச் சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை தம் அரசியல் வழிகாட்டியாக கொண்டார்.

    வாய்பூட்டு சட்டம்:

    • விடுதலை போர் கடுமையாக இருந்த நாள்களில் ஆங்கில அரசு, வட இந்தியாவில் திலகருக்கும், தென்னிந்தியாவில் தேவருக்கும் வாய்பூட்டு சட்டம் போட்டது.

    தேசியம் காத்த செம்மல்:

    • முத்துராமலிங்க தேவரை “தேசியம் காத்த செம்மல்” என்று திரு.வி.க பாராட்டினார்.

    அரசியல் வாழ்க்கை:

  • முத்துராமலிங்கர் ஐந்து முறை தேர்தலில் போட்டியிட்டு ஐந்து முறையும் வெற்றி பெற்றார்(1937, 1946, 1952, 1957, 1962).
  • தொகுதிக்கு செல்லாமலே வெற்றி பெற்றார்.
  • சிறந்த பண்பாளர்:

    • “தெய்வீகம், தேசியம்” ஆகிய இரண்டையும் இரு கண்களாகப் போற்றியவர்.
    • “வீரம் இல்லாத வாழ்வும், விவேகமில்லாத வீரமும் வீணாகும்” என்று கூறினார்.

    பாராட்டு பெயர்கள்:

    • வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், இந்து புத்த சமய மேதை.

    மனிதனின் மனநிலை:

    • “பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு” என்று இறப்பின் நிலை பற்றி கூறியுள்ளார்.
    • மனிதனின் மனநிலையை “இருள், அருள், மருள், தெருள்” என குறிப்பிடுகிறார்.

    மறைவு:

    • 55 ஆண்டுகள் வாழ்ந்து 1963ம் அக்டோபர் 30இல் தம் பிறந்தநாள் அன்றே இயற்கை எய்தினார்.

    சிறப்பு:

    • முத்துராமலிங்க தேவரின் விருப்பத்திற்கு இணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
    • நடுவண் அரசு 1995ம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்தது.
    • முத்துராமலிங்க தேவர் தம் சொத்துக்கள் முழுவதையும் 17 பாகங்களாகப் பிரித்து, ஒரு பாகத்தை மட்டும் தனக்கு வைத்துகொண்டு மீதி 16 பாகங்களையும் 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி கொடுத்தார்.
    • அண்ணல் அம்பேத்கர்

    பிறப்பு:

    • மராட்டிய மாநிலத்தில் கொண்கன் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் பதினான்காம் நாள் அம்பேத்கர்பிறந்தார்.
    • பெற்றோர் = இராம்ஜி சக்பால், பீமாபாய்.
    • செல்வம் நிறைந்த குடும்பத்தில் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தார்.
    • அவரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி.
    • தந்தை அவருக்கு சூடிய பெயர் பீம்.

    கல்வி:

    • தன் ஆசிரியர் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் ஆசிரியர் பெயரான அம்பேத்கர் என்பதை தம் பெயராக ஆக்கிக் கொண்டார்.
    • அம்பேத்கர் 1908இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார்.
    • பரோடா மன்னர் பொருளுதவியுடன் 1912இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
    • அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1915இல் முதுகலைப் பட்டமும் 1916இல் இலண்டனில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
    • மும்பையில் சிறிதுகாலம் பொருளியல் பேராசிரியராக பணியாற்றினார்.
    • மீண்டும் இலண்டன் சென்று அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
    • அம்பேத்கர் இந்தியா திரும்பியபின் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.

    முதல் உரிமைப்போர்:

    • 1927ஆம் ஆண்டு மார்ச்சுத் தங்கள் இருபதாம் நாள் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடத்தினார்.

    விடுதலை உணர்வும் வட்டமேசை மாநாடும்:

  • இங்கிலாந்து சொல்வதற்கு எல்லாம் இந்தியா தலை அசைக்கும் என்பது தவறு; இந்நிலை எப்போதோ மாறிவிட்டது; இந்திய மக்களின் எண்ணங்களை நீங்கள் ஈடேற்ற வேண்டும் என்றார்.
  • 1930ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைப்பெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துக்கொண்டார்.
  • அம்மாநாட்டில், “அறைவயித்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன்” என்று தனது கருத்தை தொடங்கினார்.
  • வெறும் எஜமான மாற்றத்தை நாங்கள் விரும்பவில்லை; எங்கள் கைகளில் அரசியல் வந்தால் ஒழிய, எங்கள் குறைகள் நீங்கா என மொழிந்தார்.
  • சட்ட மாமேதை:

    • விடுதலைக்குப் பிறகு இந்திய அமைச்சரவையில் அண்ணல் அம்பேத்கரையும் இடம்பெறச் செய்யவேண்டும் என்று நேரு விரும்பினார்.
    • அம்பேத்கர் சட்ட அமைச்சரானார்.
    • இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகுக்க எழுவர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
    • பலரும் செயல்படாமல் விலகினார். இறுதியில் அம்பேத்கர் ஒருவரே அந்த ஒப்பற்ற பணியைச் செய்து முடித்தார்.
    • 1950ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26ஆம் நாள் இந்தியா முழுமையான குடியரசு நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.

    கல்வி வளர்ச்சியில் அம்பேத்கர்:

    • “ஒவ்வொருவரும் முழுமனித நிலையை அடைய கல்வி, செல்வம், உழைப்பு ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம். உழைப்பும் கல்வியும் அட்டர செல்வம் மிருகத்தனம்” என்றார்.
    • கற்பித்தல், அறிவியல் முறைக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்; விருப்புவெருப்பட்ற்ற முறையில் கற்பித்தல் நிகழ வேண்டும் என்றார்.
    • 1946ஆம் ஆண்டு, மக்கள் கல்விக்கழகத்தை தோற்றுவித்தார்.
    • மும்பையில் அவரின் அறிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையம் உருவாக்கப்பட்டது.

    பொருளாதார வல்லுநர்:

    • இவர் “இந்தியாவின் தேசிய பங்குவீதம்” என்ற நூலை எழுதினார்.
    • தொழில் துறையில் பொருளாதார வளர்ச்சிப் பெற புதுப்புதுக் கருத்துக்களைக் வெளியிட்டார்.

    இந்திய வரலாற்றின் புதிய பக்கங்கள்:

    • இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக்கதிர் அம்பேத்கர்.
    • சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன் கட்டளையால் தோன்றியதன்று. குறிப்பிட்ட சில சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனித சமூக வாழ்வில் தானாகவே வேரூன்றிவிட்ட வளர்ச்சியாகும். சாதி களையப்பட வேண்டிய களை என்றார்.
    • சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது என்றார்.
    • இந்தியப் பொருளாதார மேம்பாட்டிற்குச் சாதி என்பது, நன்மை தராது.இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சாதி என்னும் நோய் தீங்கு விளைவிக்கிறது.
    • அது மக்களிடையே ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்துவிட்டது. இதனை அவர்கள் உணரும்படி செய்துவிட்டால் போதும்; அதுவே எனக்கு நிறைவு தரும்” என்றார்.

    அம்பேத்கரின் இலட்சிய சமூகம்:

    • அவர், “ஓர் இலட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” என்றார்.
    • “சனநாயகத்தின் மறுப்பெயர் தான் சகோதரத்துவம்; சுதந்திரம் என்பது சுயோச்சையாக நடமாடும் உரிமை; உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் உரிமை அது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும்” என்று, சனநாயகத்திற்கு அரியதொரு விளக்கம் தந்தார்.

    பெரியார் போற்றிய பெருந்தகை;

  • “அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர்; பகுத்தறிவுச் செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி, அப்பெருந்தலைவரைப்போல வேறு யாரையும் காணமுடியாது” என்று பெரியார் அவரை பாராட்டினார்.
  • நேரு புகழுதல்:

    • “பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே. ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சேரும்” என்று நேரு அவரைப் புகழ்ந்தார்.

    இராஜேந்திர பிரசாத் புகழ்தல்:

    • “அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர்; மிகவும் ஆர்வத்துடனும் விரைந்து தனியனாகச் செயல்பட்டவர். தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர்” என்று இராஜேந்திர பிரசாத் பாராட்டினார்.

    மறைவு:

    • நாட்டிற்காக அயராது உழைத்த அண்ணல் அம்பேத்கர் 1956ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 6ஆம் நாள் புகழுடம்பு எய்தினார்.

    பாரத ரத்னா விருது:

    • இந்திய அரசு, பாரத ரத்னா(இந்திய மாமணி) என்னும் உயரிய விருதை அண்ணல் அம்பேத்கருக்கு 1990ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
    • பெருந்தலைவர் காமராஜர்

    புகழுரைகள்:

    • தன்னலமற்ற தலைவர்
    • கர்மவீரர்
    • கல்விக்கண் திறந்த முதல்வர்
    • ஏழைப்பங்காளர்

    இளமைப் பருவம்:

    • விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி இனையார்க்கு மகனாய் 19௦03ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள் பிறந்தார்.
    • காமராசரின் தாத்தா நாட்டாண்மைக்காரர்.
    • இவருக்கு பன்னிரண்டு வயதிலேயே கல்வியில் நட்டமில்லாமல் போயிற்று.

    அரசியலில் ஈடுபாடு:

    • காமராசர் நாள்தோறும் செய்தித்தாள்களை படித்தும், அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும் தம்முடைய அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார்.
    • “மெய்கண்டான் புத்தகசாலை” என்ற நூல் நிலையத்திற்கு சென்று அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து திறமையாக பேசவும் கற்று கொண்டார்.
    • இளம் வயதிலேய காங்கிரசில் சேர்ந்தார்.
    • பதினோரு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
    • அவரது தன்னலமற்ற உழைப்பைக் கண்டு தலைவர் சத்தியமூர்த்தி அவரை கட்சியின் செயலாளர் ஆக நியமித்தார்.
    • காமராசரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி.

    தலைவர்களை உருவாக்குபவர்:

      1939ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஆனார். 12 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். பலர் ஆட்சி அமைக்க இவர் காரணமாக இருந்ததால் இவரை “தலைவர்களை உருவாக்குபவர்” எனப் போற்றப்பட்டார்.

    முதலமைச்சர் காமராசர்:

    • 1954இல் இராஜாஜி முதலமிச்சர் பதவியில் இருந்து விலகியதும் காமராசர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
    • 1963இல் தாமாக பதவி விலகும்வரை அப்பதவியில் திறம்படச் செயலாற்றினார்.
    • காமராசர் ஆட்சிக் காலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தொழில்துறை அமைச்சராகவும், சி.சுப்பிரமணியம் கல்விஅமைச்சராகவும் பணியாற்றினார்.

    தொழில் முன்னேற்றம்:

    • காமராசர் முதலமைச்சராக இருந்த பொது இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • கிண்டி, அம்பத்தூர், இறநிபெட்டை முதலிய இடங்களில் பெரிய தொழிற்பேட்டைகளும், மாவட்டந்தோறும் சிறிய தொழிற்பேட்டைகளும் அமைக்கப்பட்டன.
    • இவர் காலத்தில் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது.
    • நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, கிண்டி அறுவைசிகிச்சைக் கருவித் தொழிசாலை, சர்க்கரை ஆலை, ஆவடி இரயில்வே வாகனத் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை முதலியன இவரது காலத்தில் தொடங்கப்பெற்றன.

    கல்விப் புரட்சி:

    • காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.
    • “தெருதோரும் தொடக்கப்பள்ளி, ஊர் தோறும் உயர்நிலைப்பள்ளி” என்பதே அவரது நோக்கமாக அமைந்தது.
    • பள்ளி வேலைநாட்களை 180இல் இருந்து 200ஆக உயாத்தினார்.
    • தொடக்கப்பள்ளியில் மதிய உணவுத் திட்டம் இவரால் தொடங்கப்பட்டது.
    • ஈராண்டுகளில் மபள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் 133 நடத்தி, பல கொடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகள் பெற்று பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் வாங்கப்பட்டன.
    • மருத்துவக்கல்லூரி முதலான தொழிற்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனளிக்க ஏற்பாடு செய்தார்.

    சமுக முன்னேற்ற திட்டங்கள்:

    • தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்து, சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார்.
    • நிலசீர்திருத்தம் இவரால் கொண்டுவரப்பட்டது.
    • நிலா உச்ச வரம்பு முப்பது ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது.
    • மக்கள் நலத்திட்டங்களில் ஓய்வூதியம் முக்கியமானது.

    காமராசர் திட்டம்:

    • 1962ஆம் ஆண்டு சீனப்படையெடுப்புக்கு பின், காங்கிரசுக் கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
    • கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் எனக் காமராசர் திட்டம் ஒன்றை கொண்டுவந்தார். அத்திட்டமே “காமராசர் திட்டம்” எனப்படும்.

    அகில இந்திய காங்கிரசுத் தலைவர்:

  • புவனேஸ்வர் நகரில் 1963ஆம் ஆண்டில் கூடிய காங்கிரசு மாநாட்டில் காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவி ஏற்றார்.
  • லால் பகதூர் சாஸ்த்ரி, இந்திரா காந்தி போன்றோரை பிரதமர் பதவியில் அமர வைத்தார்.
  • காமராசருக்கு செய்த சிறப்புகள்:

    • காமராசரக்கு நடுவண் அரசு “பாரதரத்னா விருது” அளித்துச் சிறப்பித்து, நாடாளுமன்றத்தில் இவருக்கு ஆளுயர வெண்கலச்சிலையை நிறுவியது.
    • தமிழக அரசு இவரின் பெயரால் “மதுரை காமராசர் பல்கலைக்கழகம்” எனப் பெயர் சூட்டியது.
    • கன்னியாகுமரியில் காமராசர் மணி மண்டபம் கட்டப்பட்டது.
    • சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் சிலை அமைத்து சிறப்பித்தது.
    • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது.
    • அவரின் விருதுநகர் இல்லமும் அரசுடைமை ஆக்கி நினைவு இல்லமாக்கப்பட்டது.
    • தேனாம்பேட்டையில் காமராசர் அர்னகம் நிறுவப்பட்டது.
    • காமராசர் பிறந்த நாளான சூலை 15ஆம் நாள் ஆண்டுதோறும் “கல்வி வளர்ச்சி நாளாக” தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • இவரை “கல்விக் கண் திறந்தவர்” எனத் தமிழுலகம் போற்றுகிறது.

    மறைவு:

    • 1972ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் இவ்வுலக வாழ்வி நீத்தார்.
    Share with Friends