Easy Tutorial
For Competitive Exams

Economy வங்கியியல் Study Material

  • 1157 - முதல்பொதுத்துறைவங்கி
  • 1770-இந்தியாவில்நிறுவப்பட்டமுதல்வங்கி-ஹிந்துஸ்தான்வங்கி
  • 1806 - வங்காளவங்கி (Bank of Bengal)
  • 1840- பம்பாய் வங்கி (Bank of Bombay)
  • 1843 - மெட்ராஸ் வங்கி (Bank of Madras)
  • 1881-இந்தியர்களால்உருவாக்கப்பட்டவங்கி-ஒளத்வணிகவங்கி (Oudh Commerical Bank)
  • 1894 — பஞ்சாப் தேசிய வங்கி (Punjab National Bank)
  • 1921 - Bank of Bengal, Bank of Bombay, Bank of Madras- இம்மூன்றுவங்கிகளையும் இணைத்து இம்பீரியன் ப்ஃங்க் ஆப் இந்தியா என்று ஏற்படுத்தப்பட்டது.
  • 1935. ரீசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது
  • 1949 - ரீசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது
  • 1955 - இம்பீரியன் பஃங்க் ஆப் இந்தியா -ஸ்டேட் பஃங்க் ஆப் இந்தியா (SBI) என்று அழைக்கப்பட்டது.
  • 1959 - ஸ்டேட் பஃங்க் ஆப் இந்தியாவுடன் 7 கிளை வங்கிகள் தோற்றுவிக்கப்பட்டது
      1. பிக்கானர் (ம்) ஜெய்ப்பூர்
      2. ஹைதராபாத்
      3. மைசூர்
      4. பாட்டியாலா
      5. திருவாங்கூர்
      6. செளராஸ்ட்ரா
      7. இந்தூர்
      தற்போது செளராஸ்ட்ரா மற்றும் இந்தூர் கிளை வங்கிகள் SB யுடன் இணைந்துள்ளது. ஐந்து கிளை வங்கிகள் மட்டும் உள்ளது
    • 1969 - சமூக வங்கியல் என்பது 14 வணிக வங்கிகளை தேசியமயமாக்கப்பட்ட பொழுது தோற்றுவிக்கப்பட்டது 14 வங்கிகள் தேசியமய்மாக்கப்பட்ட போது - வங்கியின் இருப்பு 50 கோடிக்கு மேல் இருக்க வேண்டும்
    • 1980 - மேலும் 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது
      1. ஆந்திரா வங்கி
      2. பஞ்சாப் (ம) சிந்து வங்கி
      3. நீயூப்ஃங்க் ஆப் இந்தியா
      4. விஜயா
      5. கார்ப்ரேசன் வங்கி
      6. ஒரியண்டல் வங்கி
    • 1993-ல் பஞ்சாப் வங்கியுடன், நீயூப:ங்க் ஆப் இந்தியா இணைக்கப்பட்டது
      1. UTI (Unit Trust of India) -1964
      2. IDBI-Industrial Development Bank of India-1964 தொழிற்சாலைகளின் வளர்ச்சி வங்கி
      3. UTI (Unit Trust of India) -1964
      4. பிராந்திய (வட்டார) கிராம வங்கிகள் (1975) அனைத்து மாநிலங்களிலும் (Regional Rural Bank) உள்ளது. ஆனால் சிக்கீம் (ம) கோவா மாநிலங்களில் இல்லை
      5. நபார்டு வங்கி (NABARD Bank) - 1982 (விவசாயிகளுக்கு கடன் உதவி ஏற்றுமதி (ம) இறக்குமதி வங்கி ( FXIM) - 1982
      6. SIDBI - Small industries Development Bank of India சிறு தொழிற்சாலைகளின் வளர்ச்சி வங்கி -1990
      7. LIC - 1955 மும்பை
      8. GIC - 1972 நான்கு கிளைகள் உண்டு
        1. தேசிய காப்பீட்டு நிறுவனம் - கொல்கத்தா
        2. நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் - மும்பை
        3. ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் நியூடெல்லி
        4. யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் -சென்னை
      9. ஜன பீம யோஜனா -2000 -காப்பீட்டு திட்டம் - வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு
      10. ஆம் ஆத்ம பீம் யோஜனா -2007 - காப்பீட்டுதிட்டம் - கிராமப்புற நிலம் இல்லாத ஏழைகளுக்கு
      11. ராஸ்டிரியா ஸ்வத்ய பீம யோஜனா, சிக்ஷ சகாயக் யோஜனா ஸ்வாலாம்பன் போன்ற பல காப்பீடு திட்டங்கள் உள்ளன

    ரிசர்வ் வங்கி

    1. 1934 ஆம் ஆண்டு - ரிசர்வ் வங்கி சட்டம்
    2. 1935 ரிசர்வ் வங்கி - கில்டன் யெங் (Hilton Young) குழு பரிந்துரை மூலம் உருவாக்கப்பட்டது.
    3. முதல் கவர்னர் -ஸ்மித்
    4. முதல் இந்திய கவர்னர் - C.D. தேஸ்முக்
    5. தற்போதைய கவர்னர் - ரகுராம் ராஜன் (2013)
    6. தலைமையகம் : மும்பை
    7. Minimum Reserve system-115 கோடி தங்கம் (ம) 85 கோடி நாணயம்
    8. 1949 தேசியமயமாக்கப்பட்டது

    மைய வங்கியின் பணிகள்

    1. தாள் பணத்தை வெளியிடுதல்

    தாள் பணத்தை வெளியிடல் இந்திய ரிசர்வ் வங்கியின் முற்றுரிமையாகும்.தாள் பணம் 10ரூபாய், 20ரூபாய், 50ரூபாய், 100ரூபாய், 500ரூபாய், 1000ரூபாய் ஆகிய மதிப்புகளில் வெளியிடப்படுகிறது.இந்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டுத் துறை தாள் பணத்தை அச்சிட்டுப் புழக்கத்தில் விடும் பணியினை செய்கிறது.ரூ.1, 2, 5ரூபாய் நாணயங்கள் இந்திய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்படிகின்றன.குறைந்த இருப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி தாள் பணத்தை வெளியிடுகிறது.இதற்கு வங்கியானது தேவைப்படும் அளவுகளில் தங்கத்தையும் அயல்நாட்டு செலவாணி இருப்புகளையும் கைவசம் வைத்திருக்க வேண்டும். இவற்றில் குறைந்தது ரூ.115கோடி அளவிற்கு தங்கமாகவும் மீதம் ரூ.85கோடி அளவிற்கு அயல்நாட்டு செலவாணிப்பிணையமாகவும் இருக்க வேண்டும்

    2 அரசின் வங்கி

    மைய வங்கி அரசின் முகவராகவும், வங்கியாகவும், ஆலோசகராகவும் செயல்படுகிறது.அரசின் வங்கி என்ற முறையில் அரசின் ரொக்கப்பண்த்தை வைப்புகளாக பெறுவது, அரசு செலுத்துவது அயல்நாட்டு செலவாணி செலுத்துவகை போன்ற பல்வேறு அரசு பணிகளைச் செய்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்காக இந்திய ரிசர்வ் வங்கி புதிய கடன்களைப் பெற்றும் அவற்றின் பொதுக்கடன்களை நிருவகிக்கவும் செய்கிறது.இது தவிர 91 நாள்களுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய கருவூல உண்டியல்களை வாங்குவதன் மூலம் மைய மாநில அரசுகளுக்கு வழிவதை முன்பணக்கடன்களை வழங்குகிறது.

    3 வங்கிகளின் வங்கி மற்றும் கடன் பெற இறுதிப் புகலிடம்

    பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் வங்கியாக் இந்திய ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. 1949 ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ் வங்கி சட்டப்படி, ஒவ்வொரு வகை வங்கியும் தன்னுடைய கால மற்றும் கேட்பு வைப்புகளில் 3 லிருந்து 15 விழுக்காட்டை இந்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள இத்தகைய வீதமாக வைக்க வேண்டும்

    4 கடன் கட்டுப்பாட்டாளர்

    விலை நிலைபேராக்கத்தை உறுதி செய்யவும், நாட்டின் பொருளாட்தாரத்தை மேம்பாடடையச் செய்யவும், இந்திய ரிசர்வ் வங்கி பணம் மற்றும் கடன் புழக்கத்தை கட்டுப்படுத்துகிறது

    கடன் அளவுக் கட்டுப்பாடு

    கடன் அளவுக் கட்டுப்பாடு என்பது, மைய வங்கியானது 1.வங்கி வட்டிவீதம் 2.ரொக்க இருப்பு வீதத்தை மாற்றுதல், 3.வெளிச்சந்தை நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வணிக வங்கிகள் பெறும் கடனின் அளவிலும் செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்துதல் ஆகும்.

    1. வங்கி வட்டி விதம்

    இதனால் வாடிக்கையாளர்கள் அதிக கடன் பெற விழைகிறார்கள் 1996-97 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார பின்னடைவிற்கு உயர்ந்த வட்டிவீதமும், கடனளித்தல் ஏறப்ட்ட இறுக்கமான நிலைமையுமே முக்கிய காரணமாக கண்டறியப்பட்டது. இச்சூழ்நிலையைச் பூரீசெய்யும் பொருட்டு, வட்டிவீதம் 11 விழுக்காட்டிலிருந்து 6.5 விழுக்காடாக குறைக்கப்பட்டது

    2. ரொக்க இருப்பு வீதம்

    வணிக வங்கிகள் தங்களுடைய அனைத்து வைப்புகளின் 10 விழுக்காட்டு தொகையை ரிசர்வ் வங்கியிடம் ரொக்க இருப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதாகக் கொள்வோம்.இதன்படி வங்கிகள் பெறும் ஒவ்வொரு 1000ரூபாய்க்கும், ரூ.100 என்ற அளவில் வணிக வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் ரொக்க இருப்பாக வைக்க வேண்டும். மீதம் ரூ.900த்தை இருப்பு பண்மாகக் கொண்டு வாணிக வங்கிகள் பொதுமக்களுக்கு கடன்களும் முன்தொகைகளும் வழங்க பயன்படுத்தலாம்

    3. வெளி அங்காடி நடவடிக்கை

    வெளி அங்காடி நடவடிக்கைகள் என்பது அரசின் நிறைகாப்புள்ள பத்திரங்கள், கருவூல உண்டியலகள், நீண்டகால அரசு பத்திரங்கள் ஆகியவற்றை மக்கள், நிதிநிறுவனங்கள் போன்றோரிடமிருந்து வங்கி விற்பதைக் குறிக்கும்.பணப்புழக்கம் அதிகமாக உள்ள காலங்களில் அதனைக் குறைக்க, மைய வங்கி, வணிக வங்கிகளுக்கு கடன் பத்திரங்களை விற்கின்றன. இவ்வாறு விற்பதால் வணிக வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் வைத்துள்ளா ரொக்க இருப்பு மற்றும் வைப்புகளின் அளவில் குறைவு ஏற்பட்டு வணிக வங்கிகளின் கடன் அளவையும் பொருளாதாரத்தின் பண வீக்கத்தையும் குறைக்கிறது.

    கடன் தன்மைக் கட்டுப்பாடு (அல்லது) தெரிந்தெடுத்த கடன்கட்டுப்பாடு

    தெரிந்தெடுத்த கடன் கட்டுப்பாடு ஆக்கமற்ற காரணங்கள், பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் கடன்களை நிறுத்துவதன் மூலம் மொத்த கடன் அளவை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.பண்டங்களை பதுக்கும் ஊகவணிகர்கள், நீண்டகால தேவைப் பொருட்களை வாங்கும் நுகர்வோர் போன்றோருக்கு வழங்கப்படும் கடன்கள் பணவீக்கத்தை ஏற்படுத்துகின்றன.

    பணம் சார்பற்ற பணிகள் மேற்பார்வைப் பணிகள்

    பல்வேறு பணம் சார்ந்த பணிகளோடு இந்திய வங்கியானது பிற வங்கிகளை மேற்பார்மையிடுதல், சிறந்த வங்கி அமைப்பு முறையை உருவாக்குதல் போன்ற பணசார்பற்ற பணிகளையும் மேற்கொள்கிறது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, வங்கிகள், ஒழுங்குமுறை சட்டம் ஆகியவை நாட்டின் வங்கி முறையை வலிமைப்படுத்தவும், சிறந்த முறையில் நிருவகிக்கவும் நேரடி அதிகாரத்தை ரிசர்வ் வங்கிக்கு வழங்கியுள்ளன.

    முன்னேற்ற பணிகள்

    விடுதலை அடைந்த காலத்திலிருந்து வங்கிகளை மேம்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கிகளின் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன

    1. வேளாண்மை கடன் வசதி

    வேளாண்மைக்கும் அதன் சார்புடைய நடவடிக்கைகைள் மேம்பாட்டிற்காகவும் கூட்டுறவு கடன் அமைப்புகளின் மூலம் வேளாண்மைக்கடனை தன்னுடைய வேளாண்மைக்கடன் துறையின் மூலம் ரிசர்வ் வங்கி வழங்குகிறது. இவ்வகைக் கடன்கள் நடுத்தர காலம், நீண்ட காலம் என பல்வேறு கால அளவுகளில் வழங்கப்படிகின்றன. இப்பணிகள் 1980லிருந்து தேசிய வேளாண் மற்றும் ஊரக முன்னேற்ற வங்கி (NABARD) யிட ஒப்படைக்கப்படுகின்றன

    2. தொழில் கடன் வசதி

    இந்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய தொழில் கடன் துறைமூலம் 1957 லிருந்து நாட்டின் மேம்பாட்டிற்கான நிதி உதவியினை வழங்கி வருகிறது.இதற்காக மாநில நிதிக்கழகம் (SFC) இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDB), இந்திய தொழில் நிதிக்கழகம் (IFC), இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் (ICIC) போன்ற நிதி நிறுவனங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது.

    3. ஏற்றுமதிக் கடன்

    நாட்டின் ஏற்றுமதி பெருகவும், இந்திய ரிசர்வ் வங்கி கடன்கள் வழங்குகிறது.சலுகைக் கடன், மறுநிதி வசதி போன்ற வசதிகளை ஏற்றுமதிக்காக வழங்குகிறது. தங்கு தடையின்றி கடன் ஒட்டத்தை அளிக்கும் வகையில் வாணிகத்திற்கு கடனளிக்க இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியையும் ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது

    4. முன்னுரிமை துறைகளுக்கும் நலிந்த பிரிவினருக்கும் கடன் வசதி

    இவ்வங்கி ஏழைகளுக்கும், முன்னுரிமைத் துறைகளுக்கும் 4 விழுக்காடு சலுகை வட்டியில் கடன் வசதி அளிக்கின்றன

    5. உண்டியல் அங்காடித்திட்டம்

    சிறந்த உண்டியல் அங்காடியை உருவாக்குவதில் மையவங்கி தலையாய பங்கு வகிக்கிறது. பிற வங்கிகளிடமிருந்தும் நிதி நிறுவனங்களிடமிருந்தும் வருகின்ற தகுதியுள்ள காப்புப் பத்திரங்களை வணிக வங்கிகள் மறுகழிவு செய்திட இத்தகைய வளர்ந்த அங்காடிகள் வழி வகுக்கின்றன

    6. வங்கி அமைப்பை மேம்படுத்தி அவற்றை ஒழுங்குபடுத்துதல்

    முன்மாதிரி வங்கிகள், ஊரக் வங்கிகள் ஆகியவற்றின் கிளைகளை ஊரகப் பகுதிகளில் நிறைய திறப்பதின் மூலம் அங்குள்ள மக்களிடையே வங்கிப் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.
    இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDB)
    இந்திய தொழில் நிதிக் கழகம் (IFC)
    இந்திய தொழில் கடன், முதலீட்டு கழகம் (ICICI)
    ஆகிய தொழில் மேம்பாட்டு வங்கிகளை துவக்கியதன் மூலம் தொழிற்கடன் எளிதாக கிடைக்க வழிசெய்து தொழில் துறைக்கு உதவியுள்ளது

Share with Friends