Easy Tutorial
For Competitive Exams

Economy வங்கியியல் Study Material

தேசிய வருவாய் குழு படி - தேசிய வருமானம் 1949என்பது ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவை மதிப்பு. இதனுடன் வெளிநாட்டு வருமானத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் நிதி ஆண்டு என்பது ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை இந்தியநாட்டு வருமானக் கணக்கீட்டுக் குழுவின் (1951) இலக்கணப்படி நாட்டு வருமானம் என்பது மறுமுறைாயக கணக்கில் எடுத்துக்கொள்ளபடாமல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பணமதிப்பாகும். நாட்டு வருமானம் பற்றிய அடிப்படைக் கருத்துக்கள்

  1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
  2. மொத்த நாட்டு உற்பத்தி(GNP)
  3. நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP)
  4. நிகர நாட்டு உற்பத்தி (NNP)

1.மொத்த உள்நாட்டு உற்பக் GDP

ஒரு நாட்டின் எல்லைப்பரப்புக்குள் ஒரு கணக்கீட்டு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப்பண்டங்கள் மற்றும் பணிகளின் பணமதிப்பே அந்நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும். இவ்வருமானத்தில் வெளிநாடுகளிலிருந்து ஈட்டப்படும் நிகர காரணி வருமானம் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

2.மொத்த நாட்டு உற்பத்தி GNP

மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP + வெளிநாடுகளிலிருந்து ஈட்டப்படும் நிகர காரணி வருமானம்

3.நிகர உள்நாட்டு உற்பத்தி NDP

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தேய்மானம் (Depreciation)

4.நிகர உள்நாட்டி உற்பத்தி NNP

மொத்த நாட்டு உற்பத்தி - தேய்மானம் இவை அனைத்தும் உற்பத்தியை அங்காடி விலையில் (Market price) கணக்கிட்டவை. இவற்றிலிருந்து நிகர மறைமுக வரிகளைக் கழித்தால் காரணிவிலையில் கிடைக்கும்.

மேற்கூறியவற்றுள் காரணிகளின் மதிப்பில் கணக்கிடப்பட்ட நிகர நாட்டு உற்பத்தியே (NNP at Factor cost) நாட்டுவருமானம் என அழைக்கப்படுகிறது. தலா வருமான (Per capital income)

ஓர் ஆண்டில் தனி ஒருவரின் சராசரி வருமானமே தலா வருமானமாகும்.
தலா வருமானம் = நாட்டு வருமானம் / மக்கள் தொகை

இந்தியாவில் தலா வருமானம் 2012 -13ன் படி ரு.39,168/- வளர்ச்சி விகிதம் - 4.7% in (2011 - 12) ல் இருந்து 3% 2012-13ல் குறைந்துள்ளது.

தேசிய வருமானத்தை கணக்கிடும் முறை

  1. உற்பத்திமுறை
  2. வருமான முறை
  3. செலவினமுறை

முதல் 2 முறைகளை இந்தியாவில் கணக்கிடுகின்றனர். 3வது முறைாயன செலின முறை வெளிநாடுகளில் கணக்கிருக்கின்றனர்.

தேசிய வருமானம் மதிப்பீடு

1868 -தாதாபால் நேரோஜி - வறுமையும், ஆங்கில அரசு இல்லாத இந்தியா (poverty , umbritish rule in india) என்ற புத்தகத்தின் தலா வருமானம் ரூ.௨௦ என்று குறிப்பிட்டுள்ளார்.

- 1911 -பி.ண்ட்லே சிராஸ் - ரூ.49/-
- 1913 - 14 வாடியா (ம) ஜோசி - ரூ.44.30/-
- 1925.29 V. K. R.V ராவ் ரூ.76/-

- தேசிய வருமானத்தை - CSO (மத்திய நிறுவனம் புள்ளியியல் நிறுவனம்) வருடம் தோறும் கணக்கீடு செய்கின்றது. CSO + NSSO = NSO)
- 1951 -மகலனோபீஸ்அறிக்கை - ரு.246.90

மைய அரசின் வரிகள் (Central government Tax)

1. வருமானவரி
2. நிதிநிறுவனவரி
3. சிறப்புத்தீர்வைகள்
4. எஸ்டேட் தீர்வைகள்
5. அன்பளிப்பு
6. செல்வவரி
7. முலதன இலாபங்களில் மீதான வரிகள்
8. இறக்குமதி வரி
9. ஏற்றுமதி வரிகள்
10. ஆலத்தீர்வைகள்

மாநில அரசின் வரிகள் (State Government Taxes)

மைய அரசோடு ஒப்பிடும்போது, மாநில அரசுகளின் வரிவருவாய்கள் மிகக் குறைவானவையே.

1. நிலவருவாய் வரி,
2. பதிவுக் கட்டணங்கள்
3.நகர்புற அசையாச் சொத்துக்கள் மீதானவரிகள்
4. வணிகம், தொழில், வேலை மீதான வரிகள்,
5. மாநில அயத் தீர்வைஸ்
6. விற்பனை வரி
7.மோட்டார் வாகனவரிகள்
8. கேளிக்கை வரி
9. வேளாண்மை வருமான வரி

நேர்முகவரி:

வருமானத்தின் மீது விதிக்கப்படுபவை நேர்முகவரி (Direct Tax)

1. வருமானவரி
2. தொழில்வரி
3. செல்வவரி
4. அன்பளிப்பு வரி
5. எஸ்டேட் வரி
6. கார்ப்பரேசன்வரி
7 நிலவருவாய்வரி
8.முத்திரைவரி(Stamp Duty)

மறைமுகவரி :

பணடங்களின் மீது விதிக்கப்படுபவை. (Indirect Tax)

1. இறக்குமதிவரி
2. ஏற்றுமதி வரி
3. விற்பனைவரி
4. சேவைவரி
5. மதிப்புகூட்டுவரி
6. மோட்டார் வாகன வரிகள்
7. கேளிக்கைவரி etc.,
8. சுங்கவரி
9. (Exercise Duty)

விகிதச்சாரா வரிகள்

வருமானத்தின் அளவு எதுவாக இருந்தாலும் (Proportionate Tax) ஒரே விகிதத்தில் வரி விதிக்கப்படுவது

வளர்விகித வரிகள்

வருமானம் அதிகரிக்கும்போது உயர்கின்றன. இந்தியாவில் வருமான வளி, பண்ணை வரி, அன்பளிப்பு வரி, செல்வ வரி ஆகியவற்றை வளர்விகித வரிகளுக்கான எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

தேய்வு விகிதவரிகள் :

செல்வந்தர்கள் மீது குறைந்த வரியையும், ஏழைகளின் மீது உயர்ந்த வரியையும் விதித்தால் அதற்குத் தேய்வு விகித வரி முறை உப்புவரி, பொழுதுபோக்கு வரி போன்றவற்றில் ஓரளவு தேய்வு விகித வரி முறை அமைந்திருக்கிறது.

மித வளர்விகித வரிகள் :

வருமானம் உயரும் போது வரி விகிதமும் உயரும் எனினும் வருமானம் உயருகிற விகிதத்திற்கேற்ப வரி உயர்வு விகிதம் இருக்காது. மது (ம) போதை பொருட்கள், ஆடம்பர பொருட்கள் ஆகியவற்றின் மீது உள்ள வரிகள்.

தொழில்கள்

ஒரு நாட்டின் பொருளாதார முனனேற்றம் அந்நாட்டின் தொழில் முன்னேற்ற அளவைப் பொருத்ததாகும்.பல மேற்கத்திய நாடுகள் அவற்றினுடைய தொழில் துறை வளர்ச்சியினாலேயே உயர்நத பொருளாதார முன்னேற்ற நிலையை எய்தியுள்ளன.

போக்குவரத்து, ஆற்றல், செய்தித்தொடர்பு மூலதனப் பண்ட உற்பத்தி, தொழிலகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அனைத்தும் பின்னிப் பிணைந்து முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பணி தொழில்மயமாக்குதல் எனப்படும். எனவே பொருளாதார முன்னேற்றம் ஏறபடுத்துவதற்கு தொழில் மயமாக்குதல் மிகவும் இன்றியமைவதாகும்

தொழில் முன்னேற்றத்தின் தேவையும் பங்கும்

  1. நாட்டு வருமானத்தை உயர்த்துதல்
  2. ஏற்றுமதி ஆற்றல் பெருக்கம்
  3. வேலைவாய்ப்பு பெருக்கம்
  4. பண்டங்களின் மதிப்பைப் பாதுகாத்தல்
  5. தற்சார்பை ஏற்படுத்துதல்
  6. நாட்டுப் பாதுகாப்புக்கு பயன்படுதல்

இந்தியாவில் தொழில் முன்னேற்ற வகைப்பாடு

அரசு மேற்கொள்ளும் பலவகை முயற்சிகளாலும் நடவடிக்கைகளாலும் தொழில் முன்னேற்றவகை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.தொழில்மயமாக்கலும் தனியாரால் தொடங்கப்பட்டது, அரசரால் தொடங்கப்பட்டது. கூட்டாக (அரசலாலும், தனியராலும், ) தொடங்கப்பட்டது என மூன்று வகைப்படுத்தப்படுகிறது.

தனியாரால் தொடங்கப்பட்ட தொழில்மயமாக்கல் என்பது இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு ஆகிய நாடுகளில் நடைப்பெற்றதாகும், சோவியத் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் அரசால் தொடங்கப்பட்ட தொழில்மயமாக்கலுக்குச் சிறந்த சான்றாகும். இந்தியா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டாக (அரசலாலும், தனியராலும்) தொழில் தொட்ங்கப்பட்டமைக்குச் சான்றுகளாகும்.

நாட்டின் தொழில்களைப் பெருக்கிட வேண்டுமென்கிற உறுதியான திட்டவட்டமான கொள்கை எதையும் ஆங்கிலேய அரசு பின்பற்றவில்லை நாட்டு விடுதலைக்குப் பின்பற்றிய காலம் விடுதலைக்குப் பின்னர் ஒழுங்கான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டி அரசு ஐந்தாண்டுத் திட்டங்களைச் செயற்படுத்தத் தொடங்கியது முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951-1956)

திட்ட ஒதுக்கீடு தொழில் துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ. 94 கோடியாகும்

முக்கிய கூறுகள் முதல் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் தொடங்கப்பட்ட தொழில்கள், உரத்தொழிற்சாலை, கப்பல்தளம், இரயில் எஞ்சின் தொழிற்சாலை, இயந்திர கருவிகள் தொழிற்சாலை, இரயில் பெட்டி தொழிற்சாலை, தொலைபேசித் தொழிற்சாலை ஆகியவையாகும்

வளர்ச்சி விகிதம் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டுத் தொழில், வளர்ச்சி வீதம் 7 விழுக்காடு ஆகும், ஆனால் திட்டக்கால இறுதியில் கிட்டிய ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் விழுக்காடு ஆகும்.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961)

திட்ட ஒதுக்கீடு இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் ஒழுங்குற அமைந்த பொதுத்துறைக்கு முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.870 கோடியாகும்.இதில் தனியார் துறை முதலீடு ரூ. 675 கோடியாகும்

முக்கிய கூறுகள் தொழில் மயமாக்கலின் வேகத்தை முடுக்கிவிடுவதற்காக ஆயிரக்கண்க்கான சிறு தொழில்களைக் கொண்ட அறுபது தொழிற்பேட்டைகளை அரசு தொடங்கியது

வளர்ச்சி வீதம் சிறு தொழிலும் குடிசை தொழிலும் நன்கு வளர்ச்சியுற்றன.ஒட்டு மொத்த வளர்ச்சி வீதம் 147 விழுக்காடு என மதிப்பிடப்பட்டது.

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் (1961-1966)

திட்ட ஒதுக்கீடு மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் ஏறக்குறைய நாட்டின் பல்வேறு தொழில் முன்னேற்றத்துக்காக ரூ.300 கோடியை அரசு ஒதுக்கியது.பொதுத்துறை ஒதுக்கீடு ரூ.1300 கோடியாகவும் இருந்தது.

முக்கிய கூறுகள். தற்சார்புடைய வளர்ச்சியை எட்டிபிடிக்கும் நோக்கத்துடன் மூன்றாம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.அடிப்படை, பெருந்தொழில்களை முன்னேற்றுவதில் அரசுத்துறை மிகப்பெரும் பங்காற்ற வேண்டியிருநதது.வருங்காலத் தொழில் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம்இத்திட்டக்காலத்தில் அமைக்கப்பட்டது.

வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு 7.6 விழுக்காடு என்கிற வீதத்தில் தொழில் வளர்ச்சி வீதம் சீராக உயர்ந்தது.1956-66 ஆம் ஆண்டுகளில் சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நடைப்பெற்ற போர்களாலும் வறட்சி நிலையிலும் வளர்ச்சி வீதம் மெல்லக் குறைந்தது.

ஆண்டுத் திட்டங்கள் (1966-67, 1967-68, 1968- 69)

திட்ட ஒதுக்கீடு இவற்றில் தொழில் ஒதுக்கீடு ரூ. 15.11 கோடியாகும்

முக்கிய கூறுகள் உர உற்பத்தி, உயர் விளைச்சல் விதைகள் உற்பத்தி ஆகியவ்ற்றுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது.

வளர்ச்சி வீதம் தொழில் வளர்ச்சி வீதம் இந்தக் காலக்கட்டத்தில் ஆண்டொன்றுக்கு 7.6 விழுக்காடாக இருந்தது

நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்(1969-74)

நான்காம் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் தொழில் துறையில் பொதுத்துறை ஒதுக்கீடு ரூ.2864 கோடியாகும்.அதில் உருக்கு இரும்பு உரங்கள், பெட்ரோலியம், பெட்ரோலிய வேதிப்பொருள்கள், இரும்பு கனிமம் ஆகிய தொழில்களுக்காக்ப் பெருமளவு முதலீடு செய்யப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட ஆண்டுத் தொழில் வளர்ச்சி வீதம் 8 விழுக்காடாக இருந்தது. இத்திட்டக்கால்த்தில் உற்பத்தி குறைந்ததற்கான காரணங்களாவன.

கரும்பு, பருத்தி முதலான வேளாண் மூலப்பொருட்கள் பற்றாக்குறை ஆற்றல், நிலக்கரிப் பற்றாக்குறை, தொழிலாளர் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், மனிதமணி நேர இழப்பு போதிய போக்குவரத்து வசதியின்மை, குறைவான ஆற்றல், பயன்பாடு, இரும்புத்தொழில், இயந்திர உலோக்த தொழில்கள் பொறியியல் பண்டங்கள், ஆகியவற்றின் உற்பத்திக் குறைவு ஆகியன ஆகும்.

ஐந்தாண்டுத் திட்டம் (1974-79)

ஐந்தாம் திட்டத்தில் தொழில்துறைக்கும் சுரங்கத் தொழிலுக்குமாக் ரூ.10135 கோடி ஒதுக்கப்பட்டது.இதில் பொதுத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.9600 கோடியாகும்.ஊரக, சிறுதொழில்களுக்காக ரூ. 535 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இத்திட்டக் காலத்தில் அடிப்படை தொழில்துறை

  1. நுகர்வு பண்டங்கள் ஆகியவற்றின் விரைவான வளர்ச்சி
  2. பலவகைத் தொழில்கள்
  3. முழுமையான ஆற்றல் பயன்பாடு
  4. தனியார்துறை முன்னுரிமை நிறுவனங்கள்,

இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் அயல் நாட்டு நிறுவனங்கள் - ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுபாடுகள் நீக்கம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டன.

ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980-85) ஆறாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தொழில் முன்னேற்றத்துக்

கென செய்யப்பட்ட ஒட்டு மொத்த ஒதுக்கீடு ரூ.2200 கோடியாகும்.இதில் பொதுத்துறை ஆகியவற்றுக்காக முறையே ரூ.4300 கோடியும், 13,000 கோடியும் ஒதுக்கப்பட்டன.கார்கள், இரு சக்கர ஊர்திகள், செப்திதொடர்புக் கருவிகள் ஆகியன எதிர்பார்க்கப்பட்ட இலக்கிற்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்பட்டன்.அரசின் தாராள கொள்கையினால் இத்த்கைய வாய்ப்பு ஏற்பட்டது.

ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் (1985 -1900)

பெருந்தொழில், நடுத்தர தொழில்களுக்கு ரூ.19710 கோடி ஏழாம் திட்டக்காலத்தில் ஒதுக்கபட்டது.ஊரகத் தொழில் சிறு தொழிகளுக்காக ரூ.2750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.தொழில் முன்னேற்றத்தை எளிமைப்படுத்திடத் தொழில் உரிமக் கொள்கையை அரசு தளர்த்தியது.அடிப்படைத் தொழில்களின் வளர்ச்சிக்கும் அடிப்படை வசதிகளின் பெருக்கத்திற்கும் போதிய கவனம் செலுத்தப்பட்டது.திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு 8 விழுக்காடு ஆனால் உண்மையில் சாதிக்கப்பட்ட வளர்ச்சி 8.4 விழுக்காடாகும்.

எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997)

எட்டாம் திட்டக்காலத்தில் தொழில்கள் மற்றும் சுரங்கத் தொழிலுக்காக, பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது ரூ. 40,673 கோடியாகும்

ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002)

எட்டாம் ஐந்தாம் திட்டம் 1997 மார்ச் 31 ஆம் நாள் நிறைவுற்றது.ஒன்பதாம் திட்டம் 1997 ஏப்ரல் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது.ஆனால் அரசு இறுதியாக 1999 பிப்ரவரியில்தான் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. அரசியல் நிலையற்ற தன்மைகளாலும் மாற்றங்களாலும் திட்டம் உரிய காலத்தில் முறையாகத் தொடங்கப்பட்ட போதிலும் இரண்டாண்டுகள் கழித்தே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பெருந்தொழில்கள்

இந்தியாவில் கடந்த காலத்தில் ஆங்கிலேய பாணியில் அமைந்த தொழில் புரட்சி எதுவும் நிகழவில்லை.அயல் நாட்டு மூலதனத்துடனும் தொழில் முனைவுடனும், கூடிய ஒரு முயற்சி 19 ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டது.இந்திய முதலாளிகள் இந்தத் தொழில் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.அரசும் தொழில் துறை முன்னேற்றத்துக்கு ஆதரவளித்தது. விடுதலைக்குப் பின்னரும் ஐந்தாண்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பின்னரும் தொழில் துறை வளர்ச்சி, குறிப்பாகப் பெருந்தொழில்களின் வளர்ச்சி வேகம் பெற்றது.

பெருந் தொழில்களை நுகர்வுப் பண்டத் தொழில்கள் என்றும், மூலதனப் பண்டத் தொழில்கள் என்றும் பிரிக்கலாம்,

  1. இரும்பு எஃகுத் தொழில்
  2. பருத்தி நெசவுத் தொழில்

ஆகியன மூலதனப் பண்டத்தொழில்களில் அடங்கும்

இரும்பு எஃகுத் தொழில்கள்

இரும்பு எஃகு தொழில்கள் பல நூற்றாண்டுகள் தொன்மையுடையனவாகும்.நாட்டின் சிறப்பான தொழில்களில் அதுவும் ஒன்றாகும். இரும்பு எஃகு தொழில் மற்ற அனைத்து தொழில்களின் முன்னேற்றத்துக்கும் அடிப்படையாக அமைவதால் இதனைத் தாயத் தொழில் என்றழைப்பர்.1990 -91 இல் 13.5 மில்லியன் டன்கள் இரும்பு உற்பத்தியாயிற்று.இதுவே 2000-01 இல் 29.3 மில்லியன் டன்களாக உயர்ந்தது. இரும்பு தொழில்களிலுள்ள சிக்கல்கள் குறைவான ஆற்றல் பயன்பாடு, மூலப்பொருள் கிடைக்கப் பெறாமை, தொழிலாளர் அமைதியின்மை, பெருகிவரும் தேவை, நிருவகிக்கப்பட்ட விலை ஆகியன இரும்பு எஃகு தொழில்களிலுள்ள சிக்கல்களாகும். ஒட்டு மொத்த ஆற்றல் பயன்பாடென்பது 80 விழுக்காட்டுக்கு குறைவேயாகும் சிக்கல்களைத் தீர்க்க அரசின் நடவடிக்கைகள்

1973 ஆம் ஆண்டு இந்திய இரும்பு ஆணையம் என்கிற அமைப்பை ஏற்படுத்தியது.இரும்பு உற்பத்தியாளருக்கு நியாயமான இலாபம் கிடைக்கும். நுகர்வோருக்குப் பயன் ஏறபடும் வகையில் விலை உயர்வைத் தடுக்கவும் அரசு ஒரு கூட்டுக் குழுவை ஏற்படுத்தியது,

1991 ஆம் ஆண்டு ஜீலையில் புதிய தொழிற் கொள்கையை அறிமுகப்படுத்தி அதன் வாயிலாக எல்லா வகையான விலைக் கட்டுப்பாடுகளையும் அரசு அகற்றியது.

பருத்தி நெசவுத் தொழில்

நாட்டின் மிகப் பழமையான, பெரிய தொழில்களுள் பருத்தி நெசவுத் தொழிலும் ஒன்றாகும்.துணி உற்பத்தித் தொழிலில் இந்தியா உலகில் இரண்டாமிடத்தை வகிக்கிறது.

1950-51 இல் பருத்தி துணி உற்பத்தி 4215 மில்லியன் சதுர மீட்டராக இருந்தது. 200-01 இல் 19718 மில்லியன் சதுர மீட்டர்களாக உயர்ந்தது.பருத்தி நூல் உற்பத்தி சீராக உயர்ந்து வருகிறது.தற்பொழுது இந்திய பருத்தி ஆடைகள், ஆயத்த ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் முதலிடத்தை வகிக்கிறது.பருத்தி நூலிழைகள், ஆயத்த ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி மதிப்பு 1970-71 ஆம் ஆண்டில் ரூ.84 கோடியாக இருந்த்து.

தொழில் நிறுவனங்கள்

  1. இந்தியத் தொழில் நிதிக் கழகம்
  2. இந்தியத் தொழில் முன்னேற்ற வங்கி
  3. இந்திய தொழில் கடன் முதலிட்டுக் கழகம்
  4. யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா
  5. இந்தியத் தொழில் மறு சீரமைப்பு வங்கி
  6. தேசிய சிறுதொழில் கழகம்
  7. மாநில நிதிக்கழகம்
  8. இந்திய சிறு தொழில் முன்னேற்றவங்கி

1948 ஆம் ஆண்டுத் தொழிற் கொள்கை

இந்திய அரசு தனது முதலாவது தொழிற் கொள்கையை 1948ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் வெளியிடப்பட்டது.இந்தக் கொள்கைக்கிணங்க தொழில்களை அரசு நான்கு வகையாகப் பிரித்தது.

  1. அரசின் முன்னுரிமைத் தொழில்கள்
  2. அடிப்படைத் தொழில்கள்
  3. அரசினால் கட்டுப்படடுத்தப்பட்ட தொழில்கள்
  4. முற்றிலும் தனியார் துறையில் இயங்கும் தொழில்கள்

1948 ஆம் ஆண்டுத் தொழிற் கொள்கையின் நோக்கங்கள்

  • மக்கள் அனைவருக்கும் சம்வாய்ப்பும் சம நீதியும் கிடைக்கக்கூடிய சமத்துவ சமுத்தாயத்தை நிறுவுதல்
  • வளங்களைச் செம்மையாகப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்
  • வேளாண்மை உற்பத்தியையும் தொழில் உற்பத்தியையும் பெருக்குதல்
  • அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல்
  • திட்டக் குழுவை ஏற்படுத்தி, திட்டமிடலை வலியுறுத்தல்
  • தொழில் மயமாக்கலில் அரசின், தனியாரின் பொறுப்புகளை தீர்மானித்தல்
  • தனியார் துறைத் தொழில்களை ஒழுங்குபடுத்துதல்

1956ஆம் ஆண்டுத் தொழிற் கொள்கை

இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டமையால் 1948 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கைக்குச் பின்பு, இரண்டாவது தொழிற்கொள்கை 1956 ஆம் ஆண்டு வகுப்பட்டது. இக்கொள்கையின் நோக்கங்களாவன

  • செல்வருமான ஏற்றத்தாழ்வுகளைக் களைதல்
  • முற்றுரிமையையும், பொருளாதார ஆற்றல் ஒரு சிலரிடையே குவிவதையும் தடுத்தல்
  • பொதுத்துறையை வளரத்தல்
  • மிகப்பெரிய இயந்திரங்களைத் தயாரிக்கும் தொழில்களைப் பெருக்குதல்
  • பொருளாதார வளர்ச்சியையும் தொழில்மயமாக்கலையும் விரைவுபடுத்துதல்

தத் குழு

தொழில் உரிமம் வழங்கும் முறையின் தீமைகளைப் பற்றி ஆராய்ந்திட 1967 ஜீலையில் தொழில் உரிமக் கொள்கை ஆய்வுக் குழு ஒன்றை அரசு திருதத் என்பவரின் தலைமையில் அமைத்தது.இந்தக் குழு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது.

அது வழங்கிய உரிமங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டாமை, முறையற்ற ஆற்றல் கட்டுப்பாடு, ஒரே பண்டத்தை உற்பத்தி செய்ய அனுமதி கோரி பல விண்ணப்பங்கள் அனுப்புதல், புதிய தொழில் முனைவோர்களைத் தடுத்தல், பல நிதி நிறுவனங்களிலிருந்து ஒரே தொழில் நிறுவனம் ஒரே நேரத்தில் பெருந்தொகைகளைக் கடனாகப் பெறுதல் ஆகிய பல்வேறு குறைபாடுகளையும் முறைகேடுகளையும் கண்டறிந்தது.

இக்குறைபாடுகளைக் கண்டறிந்த பின்னர் அவற்றைக் களைந்திடும் முகத்தான், அவற்றிக்குப் பொருத்தமான தொழில் உரிமம் வழங்கும் முறையை இக்குழு பரிந்துரைத்தது.அதன்படி தொழிற்கூடங்கள் சில வகையாக பிரிக்கப்பட்டன. அவை அடிப்படைத்துறை, சிறு தொழில் துறை, பண்டங்களை உற்பத்தி செய்திடும் தொழில் துறை, எஞ்சியுள்ள தொழில்கள் என்பனவாகும்

அதன் பின்னர் இந்திய அரசு "தத் குழுவின் பரிந்துரையை கவனமாக ஆராய்ந்து தனது தொழிற்கொள்கையை 1970 ஆம் ஆண்டு அறிவித்தது.

1970- ஆம் ஆண்டுத் உரிமக் கொள்கை

தொழில் உரிமக் கொள்கை ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டு அதன்படி 1970 ஆம் ஆண்டுத் தொழிற்கொள்ளை ஒன்றை அரசு அறிவித்தது.அதன்படி தொழில் உற்பத்தி ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.அவை அடிப்படைத்துறை, கூட்டுத்துறை, நடுத்தரத்துறை, சிறு தொழில் துறை, கூட்டுத்துறை என்பனவாகும்.உரிமம் வழங்கலின் கூட்டுத்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

முற்றுரிமை வளர்ச்சியையும், செல்வம் ஒரு சிலரிடத்திலேயே குவிவதையும் தடுத்திடும் நோக்கத்துடன் அரசு முற்றுரிமை வாணிகக் கட்டுப்பாட்டு சட்டம் ஒன்றை 1969 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் குறிக்கோளுக்கேற்ப 1970 ஆம் ஆண்டு தொழில் உரிமக் கொள்கை வகுப்பட்டது.

1977 ஆம் ஆண்டு தொழிற் கொள்கை

1977 ஆம் ஆண்டி பதவியேற்ற ஜனதா அரசு தனது தொழில் கொள்கையை அந்த ஆண்டிலேயே அறிவித்தது. நாட்டுப்புறம் பொருளாதாரத்தையும், வேளாண்மையையும் வளர்த்திட ஜனதா அரசு வலியுறுத்தியது. நாட்டுப் புறப்பகுதிகளில் சிறு தொழில்களுக்கும் குடிசைத் தொழில்களுக்கும் இந்த அரசு அளித்தது

சிறு தொழில்கள் மூன்று பிரிவுகளாக்ப் பிரிக்கப்பட்டன அவை,

  1. சுயவேலைவாய்ப்பை வழங்கிடும் குடிசைத் தொழில்கள்
  2. ரூ. 1 லட்சம் பெறுமானமுள்ள இயந்திரங்களையும் கருவிகளையும் உற்பத்தி செய்வன குறுந் தொழில்கள்
  3. ரூ. 15 லட்சம் வரை முதலீடு செய்துள்ள சிறு தொழில்கள் ஆகியனவாகும்.

1980 ஆம் ஆண்டுத் தொழிற் கொள்கை

1956 ஆம் ஆண்டு தொழிற் கொள்கையை மேம்படுத்தி 1980 ஆம் ஆண்டில் மறுபடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டை விரைவாகவும், பரவலாகவும் தொழில்மய்மாக்க, அரசு உறுதி பூண்டுள்ளது என்பதை இக்கொள்கை தெளிவுபடுத்தியது. தொழில் உரிமக் கொள்கையைப் பொருத்தவரை அரசின் மனப்பான்மையில் மாற்றமேற்பட்டது. பெருந்தொழில்களுக்கு ஆதரவாக விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாகத் தொழில் உரிமம் கொள்கை தளர்த்தப்பட்டது. முற்றுரிமை கட்டுப்பாட்டுச் சட்டம், அயல் நாட்டுச் செல்வாணி ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றிலிருந்து பெருந்தொழில்கள் விடுவிக்கப்பட்டன்.

1980 ஆம் ஆண்டுத் தொழிற் கொள்கையின் குறிக்கோள்கள்

  1. உற்பத்தி ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி, உற்பத்தியைப் பெருக்குதல்
  2. விரைவாக, பரவலாக நாட்டைத் தொழில்மயமாக்கிப் பண்டங்கள் நியாயமான விலையில் கிடைக்கச் செய்தல்
  3. எரிசக்தி, போக்குவரத்து, நிலக்கரி ஆகிய இடுபொருள்கள் பற்றாக்குறையைப் போக்குதல்
  4. அறிவார்நத முறையிலும் தொழில் உரிமம் வழங்கலும் தாராளமயமாக்கலும்

1984ஆம் ஆண்டுத் தொழிற் கொள்கை

தொழில் உரிமக் கொள்கையை அறிவுக்குப் பொருத்தமுடையதாக்கித் தாராளமயமாக்கிட அரசு முடிவெடுத்தது. அதற்கேற்ப 1984 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை வகுப்பட்டது, ஒரு தொழிற்கூடம் பின் தங்கியப் பகுதியில் அமைந்திருந்தால் அதனை முற்றுரிமைக் கட்டுப்பாடுச் சட்டம், அயல் நாட்டுச் செலவாணி ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றிலிருந்து அரசு விடுவித்தது. மேலும், அப்படிப்பட்ட 23 தொழில்கள் உரிமம் பெறவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுவிக்கப்பட்டன்.

தொழில் உரிமம் பெறுவதற்கான வரம்பை உயர்த்துதல்

முற்றுரிமைக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் படி ரூ.20 கோடி என வரையறுக்கப்ப்ட்டிருந்த் நிறுவனங்களின் சொத்து வரம்பு ரூ.100 கோடியாக உயர்த்தபட்டது. முற்றுரிமைக் கட்டுப்பாட்டுச் சட்டம், அயல்நாட்டு செலவாணி ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வாராதா பிந்தங்கிய பகுதிகளில் தொடங்கப்படும் தொழில்களுக்கு அவற்றின் முதலீடு ரூ. 50 கோடி வரை இருந்தால் அவற்றுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டதுதாராளா உரிமம் வழங்கும் திட்டத்தின் விளைவாக முற்றுரிமைக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிடியிலிருந்து ஏறக்குறைய 112 நிறுவனங்கள் விடுபட்டன.கட்டாயம் உரிமம் பெறவேண்டிய தொழில்களின் எண்ணிக்கை 56லிருந்து 26 ஆகக் குறைந்தது.

1991 ஆம் ஆண்டுத் தொழிற்கொள்கை

தாராளாமய அணுகுமுறையில் ஏற்கனவே பெற்ற பயன்களைத் தொடர்ந்து பெற்றிடும் வகையில் இந்திய அரசு தனது புதிய தொழில் கொள்கையை 1991 ஆம் ஆண்டில் அறிவித்தது.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியப் பொருளாதாராம் கட்டுப்பாடுகளைக் கடந்து அங்காடிப் பொருளாதாரமாக உருவெடுக்கத் தொடங்கியது. ஏற்கனவே பெற்ற பட்டறிவின் அடிப்படையில் தொழிற்கொள்கையின் தவறுகளையும், பலவீனங்களையும் திருத்தவும், உறக்க நிலையிலிருக்கும் தொழில் துறைக்கு விழிப்பேற்படுத்தவும், வேலை வாயுப்பை உருவாக்கித் தற்சார்பு நிலையை ஏற்படுத்திடவும், பன்னாட்டளவில் போட்டியிடும் திறனை வளர்த்திடவும் புதிய தொழிற் கொள்கை குறிக்கோள் கொண்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு தொழிற்கொள்கையின் நோக்கங்கள்

  1. அதிகாரவர்க்கத்தினரின் பிரியிலுருந்து இந்தியத் தொழில்களை விடுவித்தல்.
  2. உலகப்பொருளாதாராதுக்கு ஈடு கொடுத்துச் செயல்படும் வகையில் இந்திய பொருளாதாராத்தைத் தாராளமயமாக்கல்.
  3. நேரடி அயல்நாட்டுத் மூலதனத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல்
  4. உள்நாட்டுத் தொழில்களுக்கு ஆதரவாக முற்றுரிமைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கட்டுப்பாடுகளைத் நீக்குதல்
  5. பல ஆண்டுகளாக் நட்டத்தில் இயங்கி வந்த பொதுத் துறையின் சுமைகளைக் குறைத்தல்

1. தொழில் உரிமம் வழங்கல்

புதிய பொருளாதாரக் கொள்கையானது தேவையற்ற காலதாமதத்தை ஒழித்து அனைத்து விதிமுறைகளையும் வெளிப்படையக்கியது.தொழிற்கூடன்ங்களின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திட இது ஒரு தூண்டுகோலாக விளங்கியது.அரசு தொழில்களைக் கட்டுப்படுத்திய நிலையிலிருந்து வழிகாட்டும் நிலைக்கு மாறியது.

2. அயல்நாட்டுத் மூலகணம்

இந்திய நிறுவனங்களில் நேரடி அயல் நாட்டு முதலீடு வரவேற்கப்பட்டது. முன்னுரிமைத் தொழில்களில் 51 விழுக்காடு வரை அயல் நாட்டு முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படும்

3. அயல்நாட்டுத் தொழில் நுட்ப ஒப்பந்தங்கள்

இந்திய தொழில் நடவடிக்கைகளில் நல்ல மாற்றங்களைப் புகுத்த வேண்டி அயல் நாட்டுத்தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்து கொள்ளவும் தொழில் நுட்ப ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு உடனடியாக ஒப்புதல் வழங்கிட இந்திய அரசு தீர்மானித்தது.

4. பொதுத்துறை மேலாண்மை

1954ஆம் ஆண்டு ஆவடியில் நடைப்பெற்ற காங்கிரசு மாநாட்டில் சமதரும சமுதாயம் அமைக்க உறுதி பூண்டமையால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு முதன்மையிடமும் முன்னுரிமையும் அளிக்கப்பட்டன.

  1. பொதுத்துறையின் கவனமானது, பாதுகாப்பு, உயர் தொழில்நுட்பம், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை நோக்கி அமைந்திருக்கும். பொதுத்துறைக்கென்று சில துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கும்
  2. பொதுமக்களை ஈடுபடச் செய்யவும், நிதி ஆதாரங்களைப் பெருக்கிடவும், அரசுப் பங்குகளின் ஒரு பகுதியை, கூட்டுறவு நிதி, நிதி நிறுவனங்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு விற்பனை செய்யப்படும்
  3. நீண்ட காலமாக நட்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை, தொழில் நிதி மறுகட்டமைப்புக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பிவைத்து, புத்துயிருட்ட முயற்சி மேற்கொள்ளப்படும், பணியாளர்களின் உரிமைகளைக் காத்திடப் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  4. பொதுத்துறை நிறுவனங்கள் மிகவும் தொழில் ரீதியாக வாணிகக் கண்ணோட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்படும்
  5. பொறுப்பு, மேம்பாடு, செயல்பாடு ஆகியவற்றில் கூடுதலான உரிமை அளிக்கப்படும்

5. முற்றுரிமை, வாணிக நடவடிக்கை கட்டுப்பாட்டுச் சட்டத் திருத்தம்

1991 ஆம் ஆண்டில் புதிய தொழிற் கொள்கையின் தொடர்ச்சியாக தொழில் துறையிலும் முற்றுரிமை வாணிக நடவடிக்கை கட்டுப்பாட்டுச் சட்டத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

  1. முற்றுரிமை, வாணிக நடவடிக்கைக் கட்டுப்பாட்டுச் சட்டத்திலுள்ள முற்றுரிமையைக் கட்டுபடுத்தக்கூடிய பிரிவுகளை திருத்துதல்
  2. முறையற்ற தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுத்திட முற்றுரிமை வாணிக நடவடிக்கை கட்டுப்பாட்டு குழுவிற்கு மேலும் அத்காரங்கள் வழங்கப்பட்டன.
  3. முற்றுரிமை வாணிக நடவடிக்கைக் கட்டுப்பாட்டு குழுவின் கீழ்வரும் நிறுமங்கள் செய்திடும் முதலீடுகளை முன்னதாகவே ஆய்வு செய்திடும் முறை நீக்கப்படும்
  4. திருத்தப்பட்ட முற்றுரிமை வாணிக நடவடிக்கைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி இச்சட்டத்தின் கீழ்வரக்கூடிய நிறுவனங்கள் பங்குகளை விற்கவும், வாங்கவும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்பட்டது.

சிறுதொழில்களுக்கான புதிய கொள்கை

புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்திய 1911 ஆம் ஆண்டுத் முதல், சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் ஆகியவற்றுக்ககென புதிய தொழிற்கொள்கையையும் அரசு அறிவித்தது. சிறப்பு வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறு தொழில்களுக்கான வரையறை விரிவுப்படுத்தப்பட்டது

சிறுதொழில் நிறுவனங்களின தேவையை நிறைவு செய்திட ஓர் அமைப்பை ஏற்படுத்துவது என உறுதி கூறப்பட்டது. பணிகள் துறை குறுந்தொழில் துறை என ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறுந்தொழிகளுக்கான முதலீடு ரூ.5 இலட்சமாக உயர்த்தப்பட்டது ஏற்றுமதி தொழில் கூடங்கள் துணைத் தொழில்கள் ஆகியவற்றின் முத்லிட்டு அளவு ரூ.75 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மூலப்பொருள்களைக் ஒதுக்குவதில் சிறு குறுந்தொழில்களுக்கு முன்னுரிமையை வழங்கப்பட்டது.

தொழில் உரிமம் வழங்கும் முறையை ஒழுங்குப்படுத்திட இந்திய நாடாளுமன்றத்தில் மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை

  1. சிறுதொழில் முன்னேற்ற ஒழுங்குமுறைச் சட்டம் - 1951
  2. முற்றுரிமை வாணிக நடவடிக்கைக் கட்டுப்பாட்டுச் சட்டம் (1969)
  3. செலவாணி ஒழுங்குமுறைச் சட்டம் (1973) ஆகியனவாகும்

தனியார் மயமாக்கலும் அரசு முதலீட்டை விற்றலும் தனியார்மயமாக்கல்

1994-95 ஆம் நூற்றாண்டு முதல் நட்டத்தில் இயங்கும் தொழில்களுக்க நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்வது நிறுத்தப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை அங்காடி முறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொதுத்திறை நிறுவனங்களின் முதலீடுகளை விற்பதற்கு அரசு முடிவெடுத்தது.

மூலதனத்தையும செயல் திறமையையும் பொதுத்துறை மேம்படுத்தாத காரணத்தால், அண்மைக்காலப் பன்னாட்டுப் போக்குகளுக்கேறப, தேவைப்படும் நிறுவனங்களையெல்லாம் தனியார் மயமாக்கிவிடுவது பொருத்தமானததென அரசு முடிவெடுத்தது. தனியார்மயமாக்கல் மூன்று நடவடிக்கைகளை உள்ளிட்டதாகும். அவை

  1. உரிமையாளர் நடவடிக்கைகள்
  2. அமைப்பு நடவடிக்கைகள்
  3. 3. இயக்க நடவடிக்கைகள் என்பனவாகும்.

உரிமையாளர் நடவடிக்கை

பொது நிறுவனத்தின் உரிமையை ஒட்டு மொத்தமாகவோ பகுதியாகவோ தனியாருக்கு மாற்றும் நடவடிக்கைகள் உரிமையாளர் நடவடிக்கைகளாகும். இவ்வுரிமை மாற்றம் அதிக அளவானதாக இருந்தால், தனியார் மயமாக்கலும் அதிகமாக இருப்பதாகப் பொருள்

அமைப்பு நடவடிக்கைகள்

அரசின் கட்டுப்பாட்டை வரையறுக்கும் வகையில் அமைப்பு சார்ந்த நடவடிக்கைகள் பல இதில் அடங்குகின்றன்.அவை

  1. பிடிப்பு நிறும அமைப்பு : இதில் முடிவெடிக்கும் மேல்மட்ட அளவு அதிகாரங்களையும், சிறு நிறுவனங்கள் தடையின்றிச் செயல்படுத்துவதற்குப் போதிய அளவு தன்னாட்சி வழங்கக்கூடிய அதிகாரங்களையும் அரசு அல்லது ஒரு பெரிய நிறுவனம் தன்னக்ததே வைத்துக்கொள்ளும்.
  2. குத்தகைக்கு விடுதல் : ஒரு பொது நிறுவனத்தின் உரிமையை மாற்றாமல் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தனியாருக்குக் குத்தகைக்கோ வாடகைக்கோ விடுதல்
  3. மறு அமைப்பு

நிதி மறு அமைப்பு, அடிப்படை மறு அமைப்பு ஆகிய இருவகை மறு அமைப்புகள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை அங்காடிக் கட்டுப்பாட்டு முறைக்குக் கொண்டு வருவதற்கு உரிய நோக்கங்களைக் கொண்டவையே சிக்கனப்படித்துதல், பொதுத்துறை நிறுவன்ங்கள் மேற்கொள்ளவண்டிய வாணிக நடவடிக்கைகளைத் தீர்மானித்தல் ஆகியவற்றுக்காக இந்நடவ்டிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன இயக்க நடவடிக்கைகள் நிறுவனங்களின் ஆற்றலை திறமையை மேம்படுத்தவும் வாணிகத்தன்மையை ஏற்படுத்தவுமான முயற்சிகள் இந்த நடவடிக்கைகளில் ஏற்படுத்தவுமான முயற்சிகள் இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.பொதுத்துறைகளில் இந்த இலட்சியங்களைச் சாதித்திட பின்வரும் நடவ்டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தன்னாட்சி நிலை அளித்தல், உற்பத்தித் திறனை உயர்த்திடத் தேவையான ஊக்கமளித்தல், முதலீட்டைப் பெருக்குதல், சந்தையிலிருந்து மூலப்பொருள்களை விருப்பக் கொள்முதல் செய்தல்

பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்றல்

பொதுத்துறை திறம்படச் செயல்படுதல் என்பது அரசு அளிக்கும் ஆதரவைப் பொருத்தது.ஆனால் பல பொதுத்துறை நிறுவனங்கள் அரசு ஆதரவைப் பெற்ற பின்னரும் நட்டத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.வரிகட்டுவோரின் பணத்திலிருந்து பொதுத்துறை நிறுவனங்களின் நட்டத்தை ஈடுகட்டுவது என்பது ஏற்க முடியாத ஒன்றாகும். எனவே தான் அவற்றின் முதலீடுகள் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்படுகினறது

Share with Friends