Easy Tutorial
For Competitive Exams

Group 4 - இந்திய தேசிய இயக்கம் INM - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Notes

1857 ஆம் ஆண்டு தோன்றிய பெரும் புரட்சியின் மூலம் உருவானது இந்திய தேசிய இயக்கம். இது மாபெரும் போராட்டமாக மாறி, இறுதியில் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்தது.

இந்தியாவில் இந்திய தேசிய இயக்கம் தோன்றுவதற்கான காரணங்கள் :

  1. ஆங்கில ஏகாதிபத்தியம் (அரசியல் ஒற்றுமை)
  2. ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு [ ஆங்கில மொழியும் மேலை நாட்டுக் கல்வியும் ]
  3. தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சி
  4. அச்சகமும் செய்தித்தாளும்
  5. 19 ஆம் நூற்றாண்டு சமூக, சமய சீர்திருத்தங்கள்
  6. பிரிட்டீசாரின் பொருளாதாரச் சுரண்டல்
  7. 1857 ஆம் ஆண்டு புரட்சி
  8. இனப்பாகுபாடு
  9. லிட்டனது நிர்வாகம்
  10. இல்பர்ட் மசோதா சச்சரவு.

1. ஆங்கில ஏகாதிபத்தியம் (அரசியல் ஒற்றுமை)

  • இந்திய தேசிய இயக்கம் ஏற்பட ஆங்கில ஏகாதிபத்தியம் ஒரு முக்கியமான காரணமாகும்.
  • ஆங்கிலேயர் இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததின் மூலம் ஒற்றுமையை நிலை நாட்டினர். இதனால் இந்தியா ஒரே நாடு என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்கினர். இது தேசிய இயக்கம் மலர வழி வகுத்தது.

2. ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு [ ஆங்கில மொழியும் மேலை நாட்டுக் கல்வியும் ]

  • நாட்டில் தேசியம் வளர ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது. ஆங்கிலம் கற்ற இந்தியர்கள் தேசிய இயக்கத்தை வளர்த்து தலைமை தாங்கி நடத்திச் சென்றனர்.
  • மேலை நாட்டு கல்வி மூலம் சுதந்திம், சமத்துவம், விடுதலை, தேசியம், போன்ற மேலை நாட்டு கருத்துக்கள் இந்தியாவில் பரவி தேசியம் தோன்றலாயிற்று.
  • மேலும் படித்த இந்தியர்களின் மொழியாக ஆங்கிலம் அமைந்தது.
  • இந்தியர்கள் ஜெர்மனி, இத்தாலி, ஆகிய நாடுகள் ஐக்கியமடைந்ததைக் கண்டு ஊக்கமடைந்தன. எனவே தாங்களும் விடுதலை பெற எண்ணினர்.

3. தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சி

  • ரயில் பாதைகள், தந்தி, அஞ்சல் சேவைகள், மற்றும் சாலைகள், கால்வாய்கள் மூலமாக போக்குவரத்து வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் மக்கள் இடையே தகவல் தொடர்பு எளிதாகியது.
  • இந்தியர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாயினர்.
  • மேலும், அகில இந்திய அடிப்படையில் தேசிய இயக்கம் தோன்றவும் இது வழி வகுத்தது.

4. அச்சகமும் செய்தித்தாளும்

  • இந்தியன் மிர்ரர் என்ற பத்திரிக்கையும், பம்பாய் சமாச்சார், அமிர்த பஜார் பத்திரிகா , இந்து, கேசரி, மராத்தா போன்ற பத்திரிகைகள் பொதுமக்களின் கருத்துக்களை பிரதிபலித்தன.
  • 1878 - இல் கொண்டுவரப்பட்ட தாய்மொழிப் பத்திரிகை தடைச் சட்டம் , பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்தது. இது ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை வலுப்பெறச் செய்தது.

5. 19 ஆம் நூற்றாண்டு சமூக, சமய சீர்திருத்தங்கள்

6. பிரிட்டீசாரின் பொருளாதாரச் சுரண்டல்

7.1857 ஆம் ஆண்டு புரட்சி

இக்கலகம் தேசியவாதம் மலர்வதற்கு காரணமாக அமைந்தது.

8. இனப்பாகுபாடு

  • 1857 ஆம் ஆண்டு கலகம் பிரிட்டிஷாருக்கும் , இந்தியருக்கும் இடையே தீராத வெறுப்புணர்வையும் பரஸ்பர சந்தேக உணர்வையும் ஏற்படுத்தியது.
  • ஆங்கிலேயர் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றினர். இதன்படி இன வேறுபாட்டுக் கொள்கையை கடைபிடித்தனர். இதனால் ஆங்கிலேயர் தங்களை உயர்வாகவும், இந்திய மக்களை தாழ்வாகவும் கருதினர்.
  • அனைத்து உயர் பதவிகளும் ஆங்கிலேயருக்கே வழங்கப்பட்டன.

9. லிட்டனது நிர்வாகம்

10. இல்பர்ட் மசோதா சச்சரவு

  • ரிப்பன் பிரபு காலத்தில் மத்திய சட்ட சபையில் இல்பர்ட் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
  • நீதிமன்றங்களில் ஐரோப்பிய நீதிபதிகளுக்கும், இந்திய நீதிபதிகளுக்கும் இடையே நிலவிய இன வேறுபாட்டை களைவதற்காக இம்மசோதா கொண்டுவரப்பட்டது.
  • இந்தியாவில் வாழ்ந்த பிரிட்டிஷார் இதனை கடுமையாக எதிர்த்தனர். இறுதியில் இது திரும்ப பெறப்பட்டது.

இத்தகைய பல்வேறு காரணங்களால் இந்தியாவில் தேசிய இயக்கம் தோன்றியது.

ஆரம்பகால அரசியல் கலகங்கள் :-

  1. பிரிட்டிஷ் இந்திய கழகம் - 1851 [ வங்காளம்]
  2. பம்பாய் கழகம் - 1852 (தாதாபாய் நௌரோஜி ]
  3. கிழக்கு இந்திய கழகம் - 1856 [லண்டன்)
  4. சென்னை சுதேசி சங்கம் - 1852
  5. பூனா சர்வஜனச் சபை - 1870
  6. சென்னை மகாஜன சங்கம் - 1884.
9397.கீழ்கண்டவற்றுள் தவறானவை எவை?
I.இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது
II.இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை
III.பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம்
IV.லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது
I மற்றும் II தவறு
III மற்றும் IV தவறு
II மட்டும் தவறு
I மற்றும் III தவறு
57975.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) : இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905 ம் ஆண்டின்
வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.
காரணம் (R) : வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி,வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே, கர்சனின்
உண்மையான நோக்கமாகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி.
57581.சுதேசி - என்பதன் அகராதிப் பொருள்
பொருளாதார புறக்கணிப்பு
அந்நிய துணிகள் எரிப்பு
சொந்த நாடு
அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு.
57995.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது ?
டெல்லி தர்பார் -S. N. பானர்ஜி
அபிநவ பாரத் சங்கம் -சவார்க்கர் சகோதரர்கள்
இந்திய சங்கம் -தாதாபாய் நௌரோஜி
இந்திய பணியாளர் சங்கம்-W. C. பானர்ஜி.
9299.இரவீந்திரநாத் தாகூர் எந்த நிகழ்ச்சியினை எதிர்த்து தனது நைட்வுட் பட்டத்தை துறந்தார்?
ஜாலியன் வாலாபாக் படுகொலை
ரெளலட் சட்டம்
செளரி செளராநிகழ்ச்சி
தண்டியாத்திரை
10064.இந்திய தேசிய உணர்வு விழிப்படையக் காரணமான கீழ்க்கண்டவற்றின் தன்மையைக் கவனி :
(1) முக்கியமாக அது கற்றறிந்தோரால் தொடங்கப்பட்டது.
(ii) தேசிய இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்தனர்.
(iii) 1920-ற்குப் பிறகு காந்தியடிகள் அதற்கு தலைமையேற்று நடத்தினார்.
(iv) காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்தார். மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானவை எவை?
(i) மற்றும் (ii)
(i), (ii) மற்றும் (iii)
(i) மற்றும் (iii)
(ii), (iii) மற்றும் (iv)
57473.இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தக் காரணமாய் இருந்த ஆங்கிலேய வைஸ்ராய்
சர். ஸ்டோபோர்டு கிரிப்ஸ்
பெதிக் லாரன்ஸ்
லின்லித்கோ
ஏ. வி. அலெக்சாண்டர்
9962.பொருத்துக:
(a) ஆகஸ்ட் சலுகை 1. 1944
(b) C. R. திட்டம் 2. 1945
(c) வேவல் திட்டம் 3. 1946
(d) இடைக்கால அரசாங்கம் 4. 1940
4 3 2 1
3 1 2 4
4 1 2 3
1 3 4 2
9297.சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
மெளண்ட்பேட்டன் பிரபு
ரிப்பன் பிரபு
இராஜகோபாலாச்சாரி
கானிங் பிரபு
Share with Friends