நூலகம்(TNPSC Noolagam)
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்பது முதுமொழி.
நம் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்குப் பெரிதும் பயன்படுவது நூலகம்.
ஒரு மனிதன் ஆண்டுக்கு 2000பக்கங்களாவது படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது.
கிரீஸ் நகர அரசுகளே முதன் முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.
இந்தியாவில் உள்ள நூலகங்களில் கல்கத்தா தேசிய நூலகம் முதன்மையானது.
ஆங்கிலத்தில் “லைப்ரரி” என்னும் சொல் நூலகத்தை குறிக்கின்றது.
இலத்தின் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்குப் புத்தகம் என்பது பெயர்.
இந்தியாவிலேயே முதன் முறையாகத் தமிழக அரசுத் தான் 1948ஆம் ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டத்தை இயற்றியது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை “புத்தகப்பூங்கொத்து” என்னும் வகுப்பறை நூலகத் திட்ட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்திய நூலகத் தந்தை : சீர்காழி சீ.இரா.அரங்கநாதன்.
நூலக விதிகளை உருவாக்கியவர் முனைவர் இரா. அரங்கநாதன் ஆவார்.
சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
தேசிய நூலக தினம் (National Library Day) - ஆகஸ்டு 9.
இந்திய நூலக அறிவியலின் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.
TNPSC Group4 2022
நூலகத்தின் வேறு பெயர்கள்
* புத்தகச்சாலை
* ஏடகம்
* சுவடியகம்
* சுவடிச்சாலை
* வாசகசாலை
* படிப்பகம்
* நூல்நிலையம்
* பண்டாரம்
நூலகத்தின் வகைகள் :
* மாவட்ட நூலகம்
* கிளை நூலகம்
* ஊர்ப்புற நூலகம்
* பகுதி நேர நூலகம்
* தனியாள் நூலகம்
அண்ணா நூற்றாண்டு நூலகம் (Anna Centenary Library):
* அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ்நாட்டில் உள்ளது.
* இது ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம்.
* இது எட்டு அடுக்குகளைக் கொண்டது.
* இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர்.
* இந்நூலகத்தின் சிறப்பம்சம். யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது.
தரைத்தளம்
* தரைத்தளத்தில் பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது.
* அவர்கள் தொட்டுப் பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி நூல்கள் உள்ளன.
* கேட்டு அறிய ஒலி வடிவ நூல்கள், குறுந்தகடுகள் வடிவில் உள்ளன.
* இங்கு பிரெய்லி எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும் உள்ளது.
முதல் தளம்
* முதல் தளம் குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி.
* குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை மரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
* இங்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன.
* பிற நாடுகளில் இருந்து திரட்டப்ப ட்ட ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.
பிற தளங்கள்
இரண்டாம் தளம் | – | தமிழ் நூல்கள் |
மூன்றாம் தளம் | – | கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள் |
நான்காம் தளம் | – | பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி |
ஐந்தாம் தளம் | – | கணிதம், அறிவியல், மருத்துவம் |
ஆறாம் தளம் | – | பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை |
ஏழாம் தளம் | – | வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் |
எட்டாம் தளம் | – | கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு |
(a) இரண்டாம் தளம் | - | (i) நூலக அலுவலகப் பிரிவு |
(b) ஆறாம் தளம் | - | (ii) வரலாறு, சுற்றுலா |
(C) ஏழாம் தளம் | - | (iii) தமிழ் நூல்கள் |
(D) எட்டாம் தளம் | - | (iv) பொறியியல், வேளாண்மை |
தமிழகத்தின் மிகப் பழைமையான நூலகங்கள்:
* சரசுவதி மகால் நூலகம், தஞ்சை. (1820)
* அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை.
* கன்னிமாரா நூலகம், சென்னன. (1869),
* சென்னைப் பல்கலைக்கழக நூலகம் (1907),
* அண்ணாமலை பல்கலைக்கழக நூலகம், சிதம்பரம் (1929),
* டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை (1947),
* மறைமலை அடிகளார் நூலகம், சென்னை (1958),
* மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம் (1966),
* உலகத் தமிழ் ஆராய்;ச்சி நிறுவன நூலகம், சென்னை (1970),
* தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் (1981)