சூரியக் குடும்பம் (Solar System)
*சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் மற்றும் அவற்றின் துணைக் கோள்கள்,எரிக்கற்கள், வால் நட்சத்திரங்கள், குள்ளக் கோள்கள், குறுங்கோள்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கான விண்மீன்கள் காணப்படுகின்றன.
*சூரியனைச் சுற்றி 8 கோள்களும் சுற்றி வருகின்றன.
*பால் வெளி அண்டத்தில் ஒரு பகுதியில் கோள்கள், துணைக்கோள்கள் மற்றும்பிற வான்பொருள்கள் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன.
*சூரியக் குடும்பத்தின் ஆர அளவு 5.66 x 10^9
விண்மீன்கள் :
*விண்மீன் என்பது ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்ட ஒளிரும் வாயுக்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய பந்து போன்றதாகும்.
*பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் சூரியன்
*வானத்தில் ஒரே ஒரு விண்மீன் மட்டும் நிலையாக இருப்பது போன்று தோன்றுகிறது.
இந்த விண்மீன் துருவ விண்மீன் அல்லது போலார்ஸ் எனப்படும்.
விண்மீன்கள் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனது.
சூரியன் :
*சூரியன் சூரிய குடும்பத்தின் மையத்தில் உள்ளது.
*இது மிகப் பெரிய வெப்பமான வாயுப்பந்து இதன் ஈர்ப்புசக்திதான் சூரியக் குடும்பத்தைப் பிணைத்து வைத்துள்ளது.
*சூரியக் குடும்பத்தின் ஒளி மற்றும் வெப்பத்திற்கு மூல ஆதாரம் சூரியன் தான்.
*சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் உள்ளது, எனவே சூரியன் மிகுந்த வெப்பமாக இருந்தாலும் மிதமான வெப்பம் பூமியை வந்தடைகிறது.
*சூரியக் குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே வான் பொருள் சூரியன் தான்.
*இது உயிரினங்கள் வாழ அடிப்படை தேவையாக இருக்கிறது .
*வினாடிக்கு 250 km வேகத்தில் உரு மண்டல மையத்தை சுற்றி வருகிறது .
*ஒரு வினாடிக்கு 700 மில்லியன் டன் ஹைட்ரஜன் எரிந்து ஹீலியமாகிறது ஏராளமான வெப்பம் வெளியிடுகிறது.எனவே இது பெரிய நெருப்புப் பந்து (Fire ball).
*சூரியனின் வாழ்நாள் 10,000 மில்லியன் ஆண்டுகள் ஆகும். ஆனால் தற்போது 5000 மில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டது.சூரியன் நடு வயது நட்சத்திரம் (middle star).
*சூரியன் ஒரு மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர 250 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இதுவே காஸ்மிக் ஆண்டு அல்லது அயன ஆண்டு என்கிறோம்.
சூரியனில் உள்ள வாயுக்கள் :
*ஹைட்ரஜன் - 9.2%
*ஹீலியம் - 7.8%
Previous Year Questions:2011,2012
சூரியனின் உள் அமைப்பு :
*சூரியன் அடுக்கினை 3 பிரிவாகப் பிரிக்கலாம் .
*ஆன்ட்ரோமேடா என்னும் அண்டம் பூமிக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு பெரிய அண்டமாகும். இது பூமியிலிருந்து 2*106 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கு உள்ள சிறிய வேறுபாடுகள்:
*சூரியன் பூமியை விட 2000 மடங்கு எடை அதிகம் .
*சூரியன் பூமியை விட 1000000 மடங்கு அளவில் பெரியது.
*சூரியனின் ஈர்ப்பு விசை புவியின் ஈர்ப்பு விசையை விட 28 மடங்கு அதிகம்.
சூரியக் குடும்பம் சிறப்புக் குறிப்புகள்
கோள்கள்:
*கோள்கள் சீராக ஒளிர்ந்தபடி காட்சி தரும். கோள்கள் மினுமினுப்பது இல்லை.
*கோள்கள் ஒரே நிலையில் இருப்ப தில்லை.
*சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன அவை
1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய்
5. வியாழன்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்டியூன்
*இந்த 8 கோள்களில் வெறும் கண்களால் மற்றும் தொலை நோக்கியால் பார்க்கக்கூடிய கோள்கள் காணப் படுகின்றன.
வெறும் கண்களால் பார்க்கக்கூடிய கோள்கள் :
*புதன், வெள்ளி ஆகிய கோள்கள் சூரிய உதயத்திற்கு சற்று முன்பும், மாலையில் மறைந்த பின்பும் புலப்படும்.
*அவை சிறிது நேரத்திற்கு தொடுவானம் அருகே மட்டும் புலப்படும் வெள்ளிக்கோள்,காலையில் சூரிய உதயத்திற்குச் சற்று முன்பு புலப்படும் போது விடிவெள்ளி என அழைக்கின்றனர்.
*செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று கோள்களும் இரவு வானில் கிழக்கிலோ,தலைக்கு மேலாகவோ மேற்கிலோ வெறும் கண்களுக்குத் தெரியும்.
*ஐந்து கோள்கள் மட்டும் நாம் வெறும் கண்களால் காண முடியும், அவை,
1. புதன்
2. வெள்ளி
3. செவ்வாய்
4. வியாழன்
5. சனி
*இதே போல், 5 கோள்களையும், சூரியன் மற்றும் சந்திரனையும் வெறும் கண்களால் பார்க்க இயலும்.
தொலைநோக்கியால் பார்க்கக் கூடியக் கோள்கள் :
1. யுரேனஸ்
2. நெப்டியூன்
*மேலும், குறுங்கோள்களையும், குள்ளக் கோள்களையும், வால் நட்சத்திரங்களும் பல ஆயிரக்கணக்கான விண்மீன்களையும் அண்டங்களையும் தொலைநோக்கி வழியாக பார்க்க இயலும்.
*சூரியக் குடும்பத்தின் எட்டுக் கோள்களையும், திடக் கோள்கள் மற்றும் வாயுக்கோள்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.
*திடக்கோள் :
1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய்
*வாயுக்கோள்கள் :
1. வியாழன்
2. சனி
3. யுரேனஸ்
4. நெப்டியூன்
* சூரியனின் வட துருவத்திற்கு மேலே சென்று, ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் எல்லாக் கோள்களும் கடிகாரத்தில் எதிர்த் திசையில் சுற்றி வருவது போலப் புலப்படும்.
*எல்லாக் கோள்களும் ஒரே திசையில் சுழன்றாலும், சூரியனைச் சுற்றிவரும் காலம் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கும்.
*சூரியனைச் சுற்றும் கோள்கள் தம் பாதையை விட்டு விலகுவதில்லை.
*எல்லாக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் சூரியனை சற்றேறக் குறைய ஒரே சமயத்தில் சுற்றி வருகின்றன.
*அவ்வாறு சுற்றி வரும் பாதையைச் சுற்றுப்பாதை என அழைக்கிறோம்.
*எந்த கோள்களுக்கும் தானாக ஒளியை உமிழும் தன்மை இல்லை. அதாவது கோள்களுக்கு சுய ஒளி கிடையாது. சூரிய ஒளியை அவை பிரதிபலிக்கின்றன.
Previous Year Questions:2012,2019
பட்டியல் I | பட்டியல் II |
---|---|
கிரகம் | இயற்கைத் துணைக் கோள்கள் |
(a) செவ்வாய் | 1) 60 துணைக்கோள்கள் |
(b) வியாழன் | 2) 27 துணைக்கோள்கள் |
(c) சனி | 3) 63 துணைக்கோள்கள் |
(d) யுரேனஸ் | 4) 2 துணைக்கோள்கள் |
1. கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்
II. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது
III. சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது. இவற்றுள் எது / எவை சரி :
ஒளி ஆண்டு:
*வானியல் தொலைவிற்கான அலகு ஒளி ஆண்டு எனப்படும்.*ஒரு ஆண்டு காலத்தில் ஒளிக்கதிர் ஏறக்குறைய 3 x 10^8 மீட்டர் / வினாடி வேகத்தில் செல்லக்கூடிய தொலைவு ஒரு ஒளி ஆண்டு எனப்படும்.
*ஒளியாண்டு = 9.46 x 10 12 கி.மீ
வானியல் அலகு:
*பூமியிலிருந்து சூரியனின் தொலைவு 1.46 x 10^8 கிலோ மீட்டர் ஆகும்.*இத்தொலைவே வானியல் அலகு (AU) எனப்படுகிறது.
கீழ்மட்டக் கோள்கள் மற்றும் மேல் மட்டக் கோள்கள்:
*கோள்களின் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதையை சிறியதாக இருப்பதால் புதன் மற்றும் வெள்ளி கோள்கள் கீழ்மட்ட கோள்கள் எனப்படும்.
*மற்ற கோள்கள் மேல் மட்டக் கோள்கள் எனப்படுகின்றன.
*வெள்ளி மற்றும் யுரேனஸ் கோள்கள் தற்சுழற்சியில் கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகின்றன.
* ஆனால் மற்ற அனைத்துக் கோள்களும் தற்சுழற்சியில் மேற்கிலிருந்து கிழக்காகச்
செல்கின்றன.
குள்ளக்கோள்கள் (Dwarf Planets) :
*முதலில் சூரியக் குடும்பத்தில் 9 கோள்கள் இருந்தன.
*2006ஆம் ஆண்டு அனைத்துலக வானியல் ஒன்றியம் (International Astronomical Unit) புளூட்டோ ஒரு கோள் இல்லை எனவும் புளூட்டோ ஒரு குள்ளக் கோள் எனவும் வகைப்படுத்தப்பட்டது.
*புளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக் ,ஹவ்மீயே முதலியன 2006ம் ஆண்டு குள்ளக்கோள்கள் எனப் புதிதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
*இவை சூரியனைச் சுற்றி வருகின்றன.
* இவை அளவில் மிகச் சிறியவை.எனவே தான், இவை குள்ளக் கோள்கள் எனப்படுகின்றன.
Previous Year Questions:2012